031. தீபம் சைவம் வழிபாடு
மேஷம் செவ்வாய்க் கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம்
ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும்.
தொழில், வியாபாரம் சிறக்கும்.
மேஷம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம்.
மேஷம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
மேஷம் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி
வைத்து வழிபடலாம் 8 வாரம்.
மேஷம் மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி
வர கஷ்டங்கள் தீரும்.
மனநிம்மதி உண்டாகும்.
மேஷம் முருகருக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்யுங்கள்.
மேஷம் லிங்கோத்பவருக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபமேற்றி
அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். 6 வாரம்.
மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம் சனி பகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய்
தீபமேற்றி வழிபடுவது நன்மை தரும். 8 வாரம்.
மிதுனம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நல்லது.
கடகம் தக்ஷிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடவும். 3 வாரம்.
கடகம் வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு
வழிபட்டால் வந்தவினைகள் அகலும்.
கடகம் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி 4 வாரம்
கடகம் சிவாலயத்தில் உள்ள நடராஜப்பெருமான் சந்நதியில் விளக்கேற்றி
வழிபடவும்.
கடகம் தேங்காய் மூடியில் நெய்யிட்டு திரிபோட்டு விளக்கேற்றி
விநாயகர் கோயிலில் வையுங்கள் .
சிம்மம் ஞாயிற்றுக்கிழமையில் சிவசூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு
வர கடன் பிரச்சனை குறையும்.
முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.7 வாரம்
சிம்ம ராசி சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். 8 வாரம்.
நாகரை வழிபடுவது நல்லது. ராகு 4 வாரம்.
சிம்மம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு நெய் விளக்கேற்றுங்கள்.
கன்னி வியாழக்கிழமை கோயிலில் நெய்விளக்கேற்றி கருப்புக் கொண்டைக்
கடலை கொடுக்கவும்.3 வாரம்.
துலாம் சனிக்கிழமை நவகிரகம் சுற்றி நல்லெண்ணெய்
விளக்கேற்றுங்கள். 8 வாரம்.
விருச்சிகம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு
நெய் தீபமேற்றி வழிபட்டால், ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
விருச்சிகம் சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
8 வாரம்.
விருச்சிகம் சனிக்கிழமைகளில் சனிபகவான் சந்நதியில் எள்முடிச்சு
விளக்கேற்றி வைக்கலாம்.8 வாரம்.
தனுசு நாயன்மார் சந்நதியில் விளக்கேற்றுவது நன்மை தரும்.
தனுசு சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபாடு
செய்யுங்கள். 7 வாரம்.
தனுசு வெள்ளிக்கிழமை துர்க்கை தேவிக்கு நெய் தீபமேற்றி வழிபட்டால்
வளமான வாழ்வு வந்தமையும்.
மகரம் புதன்கிழமையன்று புத பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டு
வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
மகரம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் நெய்விளக்கேற்றுங்கள்.
3 வாரம்.
கும்பம் விநாயகரை வணங்கி சனிக்கிழமை தேங்காயை உடைத்து
அதன் 2 மூடிகளிலும் நெய் நிரப்பி அதில் திரியிட்டு
விளக்கேற்றுங்கள்.11 வாரம்
கும்பம் சுக்ர பகவானுக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபமிட்டு
வழிபட்டால் நலம் கூடும். 6 வாரம்.
கும்பம் வெள்ளியன்று துர்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி
வழிபடுங்கள். 4 வாரம்.
கும்பம் வெள்ளிக்கிழமை துர்க்கா தேவிக்கு நெய் தீபமிட்டு வழிபாடு
செய்தால் மகிழ்ச்சி வந்து சேரும்.
கும்பம் நவக்கிரக சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.9 வாரம்.
மீனம் தினமும் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வைத்து
வணங்குவது நலம்.
மீனம் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமிட்டு
வழிபட்டால் வாழ்க்கையில் செல்வம் சேரும். 6 (or) 9 வாரம்.
மீனம் வியாழக்கிழமை கோயிலில் நெய்விளக்கேற்றி கருப்புக்
கொண்டைக் கடலையை கொடுக்கவும்.3 வாரம்
மீனம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.
மீனம் குரு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். 3 வாரம்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக