திங்கள், 18 ஜனவரி, 2016

027. தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!

027. தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!

4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.
5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.
7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.
8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.
9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.

விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் ‘பெரிய திருவடி’ என்று
அழைக்கப்படுகிறார்.
இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.
ஆலயங்களில் தரிசிக்கும் கருட வாகனம் மனித உருவத்துடன் கருடன்
போன்ற முக தோற்றத்தில் காட்சியளிப்பார்.
முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும்.
உடல் முழுவதும் அஷ்ட நாகங்களை ஆபரணமாக தரித்திருப்பார்.
ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில்
இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக
நீட்டியிருப்பார்.
இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும்.
பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும்
கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.
பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது,
‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று
வரமளித்தார்.
கருட தரிசனம் சுப சகுனமாகும்.
கருடன் மங்கள வடிவினன்.
வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக
கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய கருடன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் மிகவும்
பிரசித்தி பெற்றது.
ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம்
போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார்.
ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார்.
அவரை வணங்கி சகல வளங்களும் நலன்களும் பெறுவோமாக.
கணவருக்கு என்றால் நாக சதுர்த்தி அன்று விரதம்.
”மக்களைப்பெற்ற மகராசிகளும் பெறப்போகும் மகராசிகளும்”
தன் பிள்ளைகளின் நல்வாழ்வு கோரி விரதம் செய்வார்கள்.

கருட பஞ்சமி விரதம்

கருடனுக்கு புடவை பாம்புக்கு கருடன் பகை.
கட்டம் போட்ட 9கஜ புடவை மட்டுமே கருடனுக்கு அணிவிக்கப்படுகிறது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: