023. சைவம் ஆலய தரிசணம் பகுதி = I
மேஷம் திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வாருங்கள்.
மேஷம் தஞ்சாவூர் சென்று பெருவுடையாரையும், நந்தியம்பெருமானையும்
பிரதோஷ நாளில் தரிசிப்பது நன்மை தரும்.
மேஷம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆலங்குடி குருபகவானை
தரிசித்து வாருங்கள்.
மேஷம் புன்னைநல்லூர் மாரியம்மனை வணங்கி வாருங்கள்.
மேஷம் கும்பகோணம்-ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருக்கோடிக்காவல்
தலத்தில் அருள்பாலிக்கும் பாலசனீஸ்வரரை பூசம் நட்சத்திரத்தன்று
தரிசித்து வாருங்கள்.
மேஷம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஆலங்குடியில் அருள்பாலிக்கும்
ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் ஏதேனும் ஒரு
வியாழக் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
மேஷம் சிதம்பரத்தில் அருளும் தில்லைக் காளியை தரிசித்து வாருங்கள்.
மேஷம் குடும்பத்துடன் பழனி மலைக்குச் சென்று பழனி
ஆண்டவனை வணங்கி வாருங்கள்.
மேஷம் அறுபடை முருகன் கோயில் ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம்
செய்து விட்டு வரவும்.
மேஷம் உத்திரமேரூருக்கு அருகேயுள்ள திருப்புலிவனம் சிம்மகுரு
தட்சிணாமூர்த்தியை தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு
ஸ்ரீபிரணவ வியாக்ரபுரீஸ்வரரை உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று
வில்வார்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
ரிஷபம் மயிலாடுதுறை - குத்தாலத்திற்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம்
பைரவரை தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் காஞ்சிபுரம்-அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம்
நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் சென்று குருபகவானை
தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் கும்பகோணம் கும்பேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையிலுள்ள திருவாவடுதுறையில்
அருளும் கோமுக்தீஸ்வரரை உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று
வில்வார்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
ரிஷபம் திருத்தணி முருகனை தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் தஞ்சாவூர் அருகிருலுள்ள தென்குடித் திட்டை எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீவசிஷ்டேஷ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரதோஷ நாளில் கொண்டை
கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.
ரிஷபம் கும்பகோணம் நகரத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலுக்குச்
சென்று தரிசித்து வாருங்கள்.
மிதுனம் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
மிதுனம் இயன்றபோது பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று வாருங்கள்.
மிதுனம் நாகப்பட்டினத்தில் அருளும் கயாரோகணேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
மிதுனம் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம்-பேரம்பாக்கம் வழியில் தக்கோலம்
உள்ளது.
தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில்
அமர்ந்த தட்சிணாமூர்த்தியின் திருவுருவை தரிசித்து வாருங்கள்.
மிதுனம் குடும்பத்தினருடன் சிதம்பரம் சென்று நடராஜப்பெருமானை தரிசித்து
பிரார்த்தனை செய்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மை அடைவீர்கள்.
மிதுனம் விழுப்புரத்திற்கு அருகிலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீபனங்காட்டீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பூரம் அல்லது உத்திரட்டாதி
நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
கடகம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி ஈசனை தரிசித்து
வாருங்கள்.
கடகம் தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது
தசமி திதி நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
கடகம் திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக
ஆராதனைகள் செய்து நாகாபரணம் சாற்றி வழிபடுவதால் வேண்டிய
வரங்களைப் பெறுவீர்கள்.
கடகம் சென்னை - குன்றத்தூரில் அமைந்திருக்கும் நாகேஸ்வரரை
தரிசித்து வாருங்கள்.
கடகம் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது, சுருட்டப்பள்ளி
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்.
சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டைக்குச் சென்றால் இத்தலத்தை
அடையலாம்.
குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக இங்கு அருள்கிறார்.
அவரை தரிசித்து வாருங்கள்.
கடகம் திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருப்பாச்சூரில் அருளும் பாசூர்
அம்மனை தரிசித்து வாருங்கள்.
கடகம் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும்.
கடகம் பழனி மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானையும், சித்தர்
பெருமான் போகரையும் சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள்.
கடகம் நெல்லை மாவட்டம், பொன்னாக்குடி தலத்தில் அருளும்
அருணாசலேஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது தசமி திதி நாளில் நெய்
தீபமேற்றி வணங்குங்கள்.
கடகம் பிள்ளையார்ப்பட்டி சென்று விநாயகரை வழிபடுங்கள்.
சிம்மம் சமயபுரம் மாரியம்மனை தரிசித்து வாருங்கள்.
சிம்மம் திருப்பனந்தாள் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணஜடேசுவரரை
உத்திராடம் நட்சத்திரம் நடைபெறும் நாள் அல்லது அமாவாசை திதியில்
தீபமேற்றி வணங்குங்கள்.
சிம்மம் தேனி-மதுரை வழியில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள அரண்மனைப் புதூரில்
இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. சென்றால்
வேதபுரியை அடையலாம்.
இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலித்து
வருகிறார்.
சென்று தரிசித்து வாருங்கள்.
சிம்மம் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரை வணங்க எல்லா
நன்மைகளும் உண்டாகும்.
எதிலும் வெற்றி கிடைக்கும்.
சிம்மம் திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசெந்தில் ஆண்டவரை உத்திராடம்
நட்சத்திரம் நடைபெறும் நாளில் வணங்குங்கள்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தியை நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
சிம்மம் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் எனும் தலத்திலுள்ள நாகநாதரை
தரிசித்து வாருங்கள்.
சிம்மம் கோயமுத்தூருக்கு அருகில் உள்ள ஈச்சநாரி திருத்தலத்திற்குச் சென்று
விநாயகரை தரிசித்து வரவும்.
சிம்மம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருபுவனத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீசரபேஸ்வர ஸ்வாமியை தரிசிக்க தடைகள் விலகும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக