ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

060. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

060. ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?

நீங்கள் குறிப்பிட்ட ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும் க‌ல்யாண‌‌ம்
செய்யலாம்.
ரஜ்ஜு என்பது மாங்கல்ய பலம்.
கழுத்துப் பொருத்தம் என்று சொல்வார்கள்  ரஜ்ஜு பொருத்தம்
இல்லையென்றாலும் தசா புத்திகளையும், 7ஆம் இடம் 8ஆம் இடம்
மாங்கல்ய ஸ்தானத்தையும் பார்த்து செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் அது நீடிக்கும்.

01. கஞ்சனூர் சென்று சுக்கிரனை வழிபட்டால் ரஜ்ஜு பொருத்தம் 
இல்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடியும்.

02.குருவிற்கெல்லாம் குருவாக விளங்குபவன் திருச்செந்தூர் முருகன்.
அதனால் அந்த ஆலயத்திற்குச் சென்று வருவது சிறந்தது.

03. திருமணஞ்சேரி ஆலயம் திருமணமாகாத பெண் / ஆண்களுக்கு
நல்லதொரு மணவாழ்க்கையை அமைத்துத் தரக்கூடிய சிறப்பு வாய்ந்த
திருத்தலமாக இருக்கிறது.

04. கோவில் திருமணம் செய்து கொள்வார்கள்

05. வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு
11 தாலி சரடு வாழ் நாள் முழுவதும் வாங்கி கொடுக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: