047. பிரதி தோறும் வழிபாடு
மேஷம் செவ்வாய்க்கிழமை தோறும் அம்மனுக்கு செவ்வரளிப்
பூமாலை சாத்தவும்.
மேஷம் செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா
துன்பங்களும் நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
ரிஷபம் வெள்ளி தோறும் எட்டு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தாமரைத்தண்டு
திரி போட்டு ஏற்றி அஷ்டலக்ஷ்மியாக நினத்து பூஜை செய்யலாம்.
ரிஷபம் புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு துளசி சாத்தி வழிபடவும்.
ரிஷபம் பிரதி வெள்ளிதோறும் பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி வைத்து
மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து வந்தால் மறைமுக
எதிரிகள் காணாமல் போவார்கள்.
ரிஷபம் சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமைதோறும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து
வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும்.
வாழ்க்கை வளம் பெறும்.6 வாரம்.
ரிஷபம் பிரதி மாதம்தோறும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் கோபூஜை
செய்து வழிபடுங்கள். இயலாதவர்கள் காமதேனு படத்தினை வைத்தும்
வழிபட்டு வரலாம்.
ரிஷபம் பிரதி சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி
வழிபடலாம். 8 வாரம்
மிதுனம் பிரதி புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு
செல்வதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.
மிதுனம் புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
சென்று 6 முறை வலம் வரவும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
கடகம் திங்கட்கிழமை தோறும் சிவன் கோயிலுக்கு செல்லலாம்.
கடகம் திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு அரளிப்பூமாலை
சாத்தி வழிபடவும்.
சிம்மம் பிரதி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சிவாலய வழிபாடு
நன்மை தரும்.
கன்னி புதன்கிழமை தோறும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
செய்யவும்.
துலாம் பிரதி வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு
தொடர்ந்து எலுமிச்சை விளக்கேற்றி வருவதால் சிரமங்கள் குறையும்.
4 வாரம்.
துலாம் வெள்ளிக்கிழமைதோறும் மல்லிகை அல்லது
பிச்சிப்பூவை கோயிலுக்கு அர்ப்பணிக்கவும்.
துலாம் கேதுவுக்கு ப்ரீதியாக விநாயகரை வழிபடவும்.
துலாம் வெள்ளிக்கிழமை தோறும் லக்ஷ்மி பூஜை மற்றும்
முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
விருச்சிகம் பிரதி செவ்வாய் தோறும் துவரை தானியத்தைப் பரப்பி
அதன் மீது ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து
சுப்ரமணிய ஸ்வாமியை மானசீகமாக வழிபட்டு வருவது நல்லது.
விருச்சிகம் செவ்வாய்கிழமை தோறும் செவ்வரளி மாலையை அருகிலிருக்கும்
அம்மன் கோயிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
தனுசு பிரதி சனிக்கிழமைகளில் அனுமனின் ஆலயத்திற்கு சென்று எட்டுமுறை
பிரதக்ஷிணம் செய்து வழிபட்டு வரவும்.
வெண்ணெய் சாற்றி வழிபடுதலும், வாழைப்பழ நிவேதனம் விசேஷ
பலனைத் தரும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக