திங்கள், 22 பிப்ரவரி, 2016

048. புண்ணியநதி

048. புண்ணியநதி

புனிதநதிகளில் நீராடும் போது எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?  

எண்ணெய் ஸ்நானம் செய்யும் வழக்கம் கிடையாது.
தீபாவளியன்று மட்டும் "தைலே லக்ஷ்மி' என்று நல்லெண்ணெயில்
லட்சுமி வாசம் செய்வதாகச் சொல்வர்.
அதனால், தீபாவளியன்று மட்டும் விதிவிலக்கு.
மற்ற நாட்களில் நதிகளில் சாதாரணமாக குளித்தாலே போதும்.

ரிஷபம் குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று திரிவேணி சங்கமத்தில்
ஸ்நானம்  செய்து குமரி அம்மனையும், விவேகானந்தர் பாறையில் உள்ள
அம்மனின் திருப்பாதங்களையும் தரிசிப்பது நல்லது.
விருச்சிகம் திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து
பகவானை தரிசிக்க நன்மை உண்டாகும்.
தனுசு திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பகவானை
தரிசிக்க நன்மை உண்டாகும்.
கும்பம் கிருஷ்ணரை வணங்கி நேரம் கிடைக்கும்போது
புண்ணியநதிகளில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்கான கடமையை
சரிவர செய்து முடிப்பது நல்லது.
மீனம் நேரம் கிடைக்கும்போது ராமேஸ்வரம் சென்று 21 தீர்த்தங்களிலும்
ஸ்நானம் செய்து ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்ய நினைத்த
காரியங்கள் தடையின்றி நடைபெறும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: