புதன், 24 பிப்ரவரி, 2016

052. வைணவம் ஆலய தரிசணம்

052. வைணவம் ஆலய தரிசணம்

மேஷம் மயிலாடுதுறை- திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள
திருச்சிறுபுலியூர் பெருமாள் கோயிலில் அமைந்துள்ள ஆதிசேஷனை
தரிசித்து வாருங்கள்.
மேஷம் சோளிங்கர் திருத்தல யோக நரசிம்மரையும்,
யோக ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.
ரிஷபம் கும்பகோணம், சுவாமிமலைக்கு அருகேயே ஆடுதுறை
பெருமாள் கோவில் எனும் தலத்தில் அருளும் ஜகத்ரட்சகப் பெருமாளை
தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் சோளிங்கர் சென்று ஸ்ரீ யோக நரசிம்மரையும், யோக
ஆஞ்சநேயரையும் வழிபடுவது உத்தமம்.
ரிஷபம் ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
ரிஷபம் திருப்பதி சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வரவும்.
மிதுனம் ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
மிதுனம் சென்னை - திருவல்லிக்கேணியில் அருளும் பார்த்தசாரதிப்
பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம் இயன்றபோது பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று வாருங்கள்.
மிதுனம் கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரம் ஹயக்ரீவரை
தரிசித்து வரலாம்.
கடகம் சங்கரன்கோவில், கோமதியம்மன் சமேத சங்கரநாராயணரை
தரிசிக்க கூடுதல் நன்மை உண்டாகும்.
கடகம் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள்.
கன்னி பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை
தரிசித்து வாருங்கள்.
கன்னி குடும்பத்தினருடன் திருப்பதி சென்று வேங்கடேசப் பெருமாளை
தரிசித்து வர நினைத்த காரியங்கள் கைகூடுவதோடு வாழ்க்தை தரம்
முன்னேற்றம் அடையும்.
கன்னி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும், வடபத்ரசாயி பெருமாளையும்
ஏகாதசி திதி நடைபெறும் நாளில் அல்லது திருவோணம் நட்சத்திரம்
நடைபெறும் நாளில் துளசி மாலை சாத்தி வணங்குங்கள்.
தனுசு சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை
தரிசித்து வாருங்கள்.
தனுசு திருப்பதிக்குச் சென்று கீழ்திருப்பதியில் இருந்து திருமலை வரை
பாதயாத்திரையின் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய நன்மை
உண்டாகும்.
மகரம் திருமலை திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம்
செய்ய நன்மை உண்டாகும்.
மீனம் சங்கரன்கோவில் சங்கரநாராயணரையும், கோமதி அம்மனையும்
அங்குள்ள புற்றுக்கோயிலையும் தரிசித்து வாருங்கள்.
மீனம் குடும்பத்துடன் நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து
அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
மீனம் கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்
வழிபாட்டிற்க்காக வெளியூர் பயணம் உண்டாகும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: