செவ்வாய், 29 மார்ச், 2016

089. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = II

089. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = II

ஒவ்வொரு தடவை மந்திரம் சொல்லும் போதும் ஒரு சிகப்பு அரலிப்பூ
போட்டு வழிபட வேண்டும்.
தூப தீபம் காட்டி பூசையை முடிக்கவும்.
பின்னர் ராகு, கேதுக்களே உங்களினால் எனக்குண்டாண சகல
தோசங்களும் நீங்கி நான் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ
நீங்கள் அருள் புரிய வேண்டும் என வேண்டி பூசையை நிறைவு
செய்ய வேண்டும்.
9 நாட்கள் இவ்வாறு பூசை செய்த பின் 10ம் நாள் அரிசி, பருப்பு,
தேங்காய், காய் கனிகள் (vetablels and Friuts) உடன் உரிய
தட்சனை வைத்து ஒரு பிராமணரிற்கு தானம் கொடுக்கவும்.
(அப்படி முடியாத பட்சத்தில் பூசை செய்த பொருட்களை பிள்ளையார்
கோவிலில் வைத்து விட்டு தானத்தை ஒரு பிராமணரிற்கு கொடுக்கவும்.)
பின்பு பிள்ளையாரிற்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும்.
நான்கு சன்னியாசிகளிற்கு உரிய தட்சணையுடன் உணவளிக்கவும்.
இந்த பரிகார பூசை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் முதலில்
வினாயகர் பூசை செய்ய வேண்டும்.
பஞ்ச முக தீபம் நல்லெண்ணை ஊற்றி ஏற்றி வைத்து வினாயகரிற்கு மலர்
தூவி, தூப, தீப, நைவேத்திய, ஆராதனை செய்து பின் ஓம் வக்ரதுண்ட
மஹாகாய சூர்ய கோடி சமப்பிரப நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு
சர்வதா (16 தடவை) என்று வினாயகரை வழிபட்ட பின்னரே சர்ப்ப தோச
பரிகார பூசையை செய்ய வேண்டும்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தின்

(I) திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன் கோயில் சிவனும், பெருமாளும்
ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள
மூலவர் சங்கர நாராயணர் ஆகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன்
தழுவுவதாகக் கூறப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு.
இந்தக் கோயிலில் நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கே உள்ள பிரஹாரத்தின் ஒரு பக்கமாய் புற்று மண் பிரசாதம்
சேமிக்கப் படுகிறது.
இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்துப் பற்றுப் போல் நெற்றியில் இட்டுக்
கொள்வார்கள்.
கெடுபலன்களும் குறையும் என்று சொல்வார்கள்.
கோயில் சந்நிதியில் நாகத்தின் தலை உள்ளது.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால் ஊற்றி 
அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
கோயில் அருகில் கடை உள்ளது.

(II) திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் சங்கரன் கோயில்
கோயில் சந்நிதியில் நாகத்தின் உடம்பு உள்ளது.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால்
ஊற்றி அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
அம்பாசமுத்திரத்திலேயே பரிகார பொருட்கள் வாங்கிக்கொள்ளவும்.
கோயில் அருகில் கடையில்லை.

(III) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு
பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில்.
நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக
வழங்கப்படுகிறது. 
இக்கோயிலிற்கு வெளியே அரச, வேம்பு மரங்களின் இணை நிழலில்
விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
இவரைச் சுற்றி வேலி போல நாகராஜர் சிலைகள் உள்ளன.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால்
ஊற்றி அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
கோயில் அருகில் கடை உள்ளது.
நாகராஜனை வணங்குகின்றவர்கள் நோய் நொடியின்றி நலமெல்லாம்
பெற்று வாழ்வர் என்பதும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில
சரும நோய்கள் கூட நாகராஜரை தொடர்ந்து வணங்குவதால் மறைந்து
போகும் என்றும் இத்திருக்கோயில் விவர ஏடு தெரிவிக்கிறது. 
வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நாக தோஷங்களைப் போக்கும்
முக்கியத் தலமாகவும் இத்திருத்தலம் திகழ்கிறது.
கோயில் சந்நிதியில் நாகத்தின் வால் உள்ளது.

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம் இதைப் பார்த்து ஏத்த கணத்தில்
பூஜை செய்யவும்.
இந்தத் தோசம் விலக ராகு காலத்தில் இந்த பரிகார பூஜை செய்யவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

கருத்துகள் இல்லை: