வெள்ளி, 11 மார்ச், 2016

075. மாலை அணிவித்து, தீபமிட்டு வழிபாடு

075. மாலை அணிவித்து, தீபமிட்டு வழிபாடு

மேஷம் ஹயக்ரீவருக்கு வியாழக்கிழமை துளசி மாலை சூட்டி, நெய்
தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்து வந்தால் சகல சம்பத்துக்களும்
வந்து சேரும். 5 வாரம்.
ரிஷபம் சுதர்சன பெருமாளுக்கு சனிக்கிழமை அன்று துளசி மாலை
அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்வதால் முயற்சிகளில்
வெற்றி கிடைக்கும்.5 வாரம்.
ரிஷபம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை
சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு சகல நன்மைகளும்
வந்து சேரும்.5 வாரம்.
கடகம் குருபகவானுக்கு வியாழக்கிழமை வில்வ மாலை
அணிவித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் சகல நலன்களும்
உண்டாகும். 3 வாரம்.
சிம்மம் பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை அணிவித்து,
நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால் நிலுவையில் உள்ள வரவுகள்
தடையின்றி கிடைக்கும்.5 வாரம்.
கன்னி ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை அன்று வெற்றிலை மாலை
சூட்டி, வெண்ணெய் சாத்தி, நெய் தீபமிட்டு வழிபாடு
செய்பவர்களுக்கு தொல்லைகள் விலகும்.
கன்னி மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமையில் செந்தாமரை மலர்
சமர்ப்பித்து, நெய் தீபமிட்டு வழிபாடு செய்துவர சகல
சவுபாக்கியங்களும் தேடி வரும்.
துலாம் லட்சுமி நரசிம்மருக்கு புதன்கிழமை துளசிமாலை சூட்டி,
நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் செய்யும்
செயல்களில் வெற்றி தேடி வரும்.
விருச்சிகம் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை அன்று வில்வ
மாலை அணிவித்து, நெய்தீபமிட்டு வழிபாடு செய்பவர்களுக்கு
சகல நலன்களும் ஏற்படும்.
விருச்சிகம் பராசக்திதேவிக்கு திங்கட்கிழமை மல்லிகை, முல்லை
போன்ற மலர்களால் மாலை சூட்டி, நெய் தீபமிட்டு வழிபாடு
செய்தால் குறைகள் தீரும்.
மகரம் மகாலட்சுமி தேவிக்கு வெள்ளிக்கிழமை செந்தாமரை மலர்
மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றிவைத்து வழிபடுபவர்களுக்கு
சகல செல்வங்களும் தேடி வரும்.
மகரம் வெங்கடாசலபதிக்கு புதன்கிழமை அன்று துளசி மாலை
அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர நலன்கள்
அனைத்தும் தேடி வரும்.
கும்பம் சுதர்சன பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை சூட்டி,
நெய் தீபமிட்டு வழிபாடு செய்தால்எண்ணும் எண்ணங்கள் எளிதில்
வெற்றியாகும்.
மீனம் குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் முல்லை மலர் மாலை
அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: