செவ்வாய், 29 மார்ச், 2016

088. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = I

088. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = I

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்
(குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள்.
ராகு, கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள்.
ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது
வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது
இடம்பெறும்.
இருவரும் திசைகள் மற்றும் பிற கிரக தசையின் புத்திகளில் யோக, அவ
யோகங்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள்.
ராகு, கேதுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு.
இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள்.
மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும்
உண்டு.
பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு,
கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள்,
யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.
லக்னத்துக்கு 9ம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகு
அல்லது கேது இருந்தால் ஏட்டுக் கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும்
பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும் புத்தி
சாதுர்யமும் வெளிப்படும்.
கல்வி, அறிவு தருவதில் ராகு கேது மிக முக்கியமானவர்கள்.
மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள்
அவசியம்.
திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது
மிக அவசியம்.
10ம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற
முடியும்.
செவ்வாயுடன் ராகு சேர்ந்து இருந்தால் பல கலைகளில் வித்தகராகலாம்.
சனியும் ராகுவும் சேர்ந்து இருந்தால் கலைத்துறை, நிழற்படம், எடிட்டிங்,
அனிமேஷன் போன்ற துறைகள் அமையும்.
லக்னத்துக்கு 12ல் கேது இருந்தால் மோட்ச அம்சம் என்பார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய
ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும்.
ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது
சேர்க்கை மிக முக்கிய அம்சம்.
ராகு திசை, கேது திசை நடப்பவர்கள் பரிகார பூஜை செய்யலாம்.
கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் பரிகார பூஜை செய்யலாம்.

ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் :-

ராகு ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய
தெய்வங்களை வழிபடலாம்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (வடக்கு கோவில்) பரிகார
ஸ்தலமாகும்.
விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும்.
கேது கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை
வழிபடலாம்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (தெற்கு கோவில்) பரிகார
ஸ்தலமாகும்.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள்,
அர்ச்சனை செய்து வழிபடலாம்.
கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்புமிக்கதாகும்.
மாரியம்மன் வழிபாடு, புற்றுக்கு பால்வைத்து வழிபாடு செய்து வரவும்
சர்ப்ப தோசம் நீங்கும்.
மாதசிவராத்திரி நாட்களிலும், மகா சிவராத்திரியிலும் முறைப்படி
நோன்பு நோற்று சிவவழிபாடு செய்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
குளக்கரையில் வேப்பமரம், அரசமரம் இணைந்துள்ள இடத்தில் இரண்டு
நாகங்கள் இணைந்துள்ள நாகர் சிலை செய்து பிரதிஸ்டை செய்ய சர்ப்ப
தோசம் நீங்கும்.
வினாயகர் மகாமந்திர வழிபாடு, வினாயகர் கவச வழிபாடு, வினாயகர்
விரத வழிபாடு முறைப்படி செய்து வர சர்ப்பதோசம் விலகும் கரும்பாம்பு
(இரும்பு) செம்பாம்பு(செம்பு) செய்து, (இரும்பில் பாம்பு செய்ய
முடியாவிட்டால் வெள்ளியில் பாம்பு செய்யலாம்) அவற்றை ஒரு இரும்பு
அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து அவை முழுகும் வரை
நல்லெண்ணை ஊற்றி பூசை அறையில் வைத்து, மலர் தூவி, தூப, தீப,
ஆராதனை செய்து (சாம்பிராணி தூபம், நெய் தீபம, கற்பூர தீபம் காட்டி)
ராகு கேதுவை நினைத்து வழிபடவும்.

மந்திரம்

மந்திரம் சொல்லி; சிகப்பு அரலிப்பூவினால் (சிகப்பு அரலிப் பூ கிடைக்காத
பட்சத்தில் விபூதியினால் மந்திரம் சொல்லலாம்) வழி படவேண்டும்.
இந்த பூசை இரவு 6 மணிக்கு மேலேயே செய்யப்படவேண்டும்.

ராகு மந்திரம்----

ஓம் நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரயோதயாத் (108 தடவை).
ஓம் ஹிறியும் ராகுவே நம . (108 தடவை)

கேது மந்திரம்----

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரயோதயாத் (108 தடவை).
ஓம் ஹ{ம் கேதுவே நம. (108 தடவை)

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

கருத்துகள் இல்லை: