சனி, 29 டிசம்பர், 2018

0165. புணர்ப்பு தோஷம்

0165. புணர்ப்பு தோஷம்

சனி-சந்திர சேர்க்கை:

இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவை புணர்ப்பு தோஷம்

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

மகாவிஷ்ணுவின் திருப்பெயரே ஸ்ரீ சத்தியநாராயணர் ஆகும்.

சத்தியநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.

பௌவுர்ணமியன்று வீட்டில் சத்யநாராயணா பூஜை செய்து வந்தால், வீட்டில் சுபிக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த பூஜையை புரோகிதர் வைத்தும் செய்யலாம், அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம்.

பூஜை முறை:

பௌர்ணமி அன்று மாலை, குளித்துவிட்டு பூஜை அறையை மெழுகி, தாமரை மலர் கோலமிட வேண்டும். மாலை 4.30- 6.00மணிக்குள் பூஜையை தொடங்கி முடித்துவிடவேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும். ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும்.

மனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்கியதுடன், ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். சத்தியநாராயணருக்கும், கும்பத்திற்கும் சாம்பிராணி, கற்பூரம் காட்டி விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து 108 போற்றி பாடல்களையும் பாடலாம். பூஜையின் முக்கிய அம்சமாக அன்னதானம் செய்ய வேண்டும்.

பக்தியுடன், உள்ளப்பூர்வமாக ஸ்ரீசத்தியநாராயணனை வணங்கி இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.

சத்தியநாராயணா பூஜையை செய்பவர்கள் பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள். ஏழ்மை விலகி செல்வம் சேரும். பொய் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பயம் நீங்கும். பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும்.

இந்த பூஜையை பௌர்னமியன்று செய்ய முடியாதவர்கள் தமிழ் மாதத்தின் துவக்கநாள் அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி திதி துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் பலம் உள்ள நாளில் செய்யலாம். பொதுவாக பௌர்ணமி சந்திரபலம் உள்ள நாள் என்பதால் பௌர்ணமியில் அனுஷ்டிக்கபடுகிறது.

ஸ்ரீ சத்யநாராயணர் மகாவிஷ்னுவின் அவதாரம். அவரும், அவர் பேருக்கேற்றார் போல் சத்தியமானவர். நம்பிக்கையுடன் இதனை செய்தால் கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்கும்.

வியாழன், 20 டிசம்பர், 2018

0164. வம்ச விருத்தி

0164. வம்ச விருத்தி

பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும்.

ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.

'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.

அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.

பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும்.

தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும்.

வம்ச விருத்தி கவசம்!

ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை
துர்க்காயை ஸததம் நம:

புத்ரபாக்யம் தேஹி தேஹி
கர்ப்ப விருத்திம் குருஷ்வந:

ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ
மகா சரஸ்வதீ ரூபிண்யை
நவகோடி மூர்த்யை நம:

ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ
ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி
வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர
கர்ப்ப ரட்சாம் குரு குரு
குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம்
க்ருதாம்ஸ நாஸய நாஸய
ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:
கர்ப்பம் போஷய போஷய
சர்வோ பத்ரவம் சோஷய சோஷய ஸ்வாஹா

அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரிதம்
ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்
கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
அனேன கவசேனாத மார்ஜீதாய நிசாகமே
ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:
அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:

இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.

திங்கள், 17 டிசம்பர், 2018

0163. ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி’

0163. ‘வைகுண்ட முக்கோடி ஏகாதசி’

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட முக்கோடி ஏகாதசி எனப்படுகின்றது.

இந்து சமயத்தவர்கள், வைணவர்கள் வைகுண்ட முக்கோடி ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு

கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை.

இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினாராம். பகவானும் பிரம்ம, தேவர்களுக்குத் தரிசனமளித்து அவர்களைக் காத்தருளினாராம் இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

ஏகாதசிக்கு விரதம் இருக்கும் முறை

1. ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்

2. ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

3. இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.

4. பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

0162. மார்கழி முதல் புதன்கிழமை குசேலர் தினம்

0162. மார்கழி முதல் புதன்கிழமை குசேலர் தினம்

மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று குருவாயூர் கோவிலில் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது.

"குசேலம்" என்றால் கிழிந்து நைந்துபோன துணியைக் குறிக்கும்.
ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்த படியால், சுதாமா என்ற அவரது இயற்பெயர் மறைந்து குசேலர் என்ற பெயராலேயே அழைக்கப்படலானார்.

கண்ணன் சிறுவயதில் சாந்தீபனி என்ற முனிவரின் குருகுலத்தில் வேதங்கள் பயின்றபோது, அவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுதாமா.
திருமணம் முடிந்து 27 குழந்தைகள் பெற்றெடுத்து மிகவும் வறுமையில் வாடினார் சுதாமா.
இவரது மனைவி பெயர் "க்ஷுத்க்ஷாமா(சுசீலை) என்பதாகும்.
பசியால் வருந்தி மெலிந்த தேகம் உடையவள் என்பது இப்பெயரின் பொருள்.
தங்கள் வறுமை நீங்கும் பொருட்டு சுதாமாவின் இளமைக்கால நண்பரான யாதவ குல அரசன் கண்ணனைப் போய் பார்த்து வரும்படி அவள் கேட்டுக் கொண்டு, கண்ணனுக்குக் கொடுக்கும் பொருட்டு பலரிடம் யாசகம் பெற்று நான்கு பிடி அவலை ஒரு கிழிந்த துணியில் முடிந்து தன் கணவனிடம் அளித்தாள் அவள்.

தன் இளமைக்கால நண்பனைக் கண்ட கண்ணன் மிகவும் மகிழ்ந்து, தனது மனைவி ருக்மிணியுடன் பணிவிடைகள் புரிந்தார். குசேலர் கொடுக்கத் தயங்கிய அவலை அவரே கையிலிருந்து பிடுங்கி ஒரு கைப்பிடி எடுத்து வாயில் போட்டுக் கொள்ள, அந்த நிமிடமே குசேலரின் வறுமை அகன்று குபேரனைப் போன்ற பெரிய செல்வத்தைப் பெற்றார் என்பது கதை.

ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று அவலே முக்கிய நிவேதனமாக அமைகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களும் கண்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், செல்வச் செழிப்பு தங்களுக்கும் கிடைக்க வேண்டு மென்று வேண்டிக் கொண்டு, படிக்கணக்கில் இறைவனுக்கு அவல் காணிக்கை செலுத்துகின்றனர்.

குசேலர் தினமான மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று நம் வீடுகளிலும் குருவாயூரப்பன் படம் அல்லது கிருஷ்ணர் படம் வைத்துப் பூஜித்து, வெல்லம் கலந்த அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

குசேல சரித்திர ஸ்லோகம்

குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்
கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:
த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ
தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ

ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் அந்தணனான குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட பரிபூ ரண பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா?
கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா?

ஸமான ஸீலாபி ததீயவல்லபா
ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே
ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே

குசேலருடைய பத்தினியானவள் அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந் தாள்.
ஜீவனத்திற்கு ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது.
அதனாலேயே ‘லக்ஷ்மீபதியான கோபாலன் தாங் களுக்கு நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள்.
அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல் லவா?

இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா
ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே
ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ
வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்

குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர் கிருஷ்ணனை காண புறப்பட்டார்.
லௌகீகமான பொருளைப் பெறும் ஆசையும் பேராசையான மதமும் அவரிடத்தில் இல்லை.
ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண் டார்.
அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா?

கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்
க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்
ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதிஸம்பாவனயா து கிம் புன:

ஆச்சரியமான அழகைக் கொண்டுள்ள உன்னுடைய பட்டினத்தை அடைந்து ருக்மிணியுடன் நீ வசிக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்தபோது அவர் வைகுண்டத்தை அடைந்தவர்போல் ஆனந்தமானார்.
அதற்கும் மேலாக குசேலரை நீயே பூஜித்ததால் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
அப்படித்தானே?

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வாகதய: புராக்ருதம்
யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை
ரபர்த்துவர்ஷந் தமமர்ஷி கானனே

நீ குசேலனைப் பூஜித்தாய்; ருக்மிணி தேவியும் பூஜித்தார்கள்.
குசேலர் பேரானந்தமடைந்தார்.
அப்போது பழைய சில சம்பவங்களை நினைவுகூர்ந்தீர் களே?
ஒருமுறை குசேலரும் நீயும் குருபத்தினிக்கு உதவுவதற்காக விறகு கொண்டு வர காட்டிற்குச் சென்றீர்கள்.
வரும்போது பெருமழையில் சிக்கினீர் களே?
பொறுமையாக அந்த மழையைப் பொறுத்துக் கொண்டு விறகு கொண்டு வந்து குருமாதாவிடம் கொடுத்தீர்களல்லவா?

த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமா கிலோபேத்யகரம் ருரோத தே

குசேலர் தான் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து வைத்திருந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார்.
நீதான் குசேலரிடமிருந்து அவலை வலுக்கட்டாயமா கப் பிடுங்கி எடுத்து ஒரு பிடி சாப்பிட்டாய்.
அப்போது லக்ஷ்மியான ருக்மிணிதேவி, ‘‘இவ்வளவு போதும் போதும்’’ என்று உன்னைத் தடுத்து நிறுத்தினார்கள், இல்லையா?

பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா
புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்
பதாபரேத்யுர்த்ரவிணம் வினா யயௌ
விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ :

உன்னால் பூஜிக்கப்பட்ட அந்த குசேலர் ஓர் இரவு மகா சுகமாய் உன் பட்டினத்தில் தங்கி, மறுதினம் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக் கவோ, பெறாமலோ தன் இருப்பிடம் திரும்பினாரல்லவா?
இப்படி குசேலருக்கு நீ செய்த அனுக்கிரகம் விசித்திரமானதல்லவா?

யதி ஹ்யயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ
வதாம பார்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ
த்வதுக்திலீலாஸ்மிதமக்னதீ: புன:
க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்

‘நான் யாசித்திருந்தால் அச்சுதன் கொடுத்திருப்பார்.
மனைவியிடத்தில் என்னவென்று சொல்வேன்’ என்று யோசித்தபடியே தன் ஊருக்கு நடந்து சென்றாலும் அவர், உன் பேச்சின் ரஸம், அழ கிய சிரிப்பு இவற்றில் தம்மை மறந்தபடியே பயணப்பட்டார்.
ஆனால் ஊருக்குள் நுழைந்தபோது நவமணிகளால் பிரகாசிக்கும் தன் வீட்டைப் பார்த்துத் திகைத்தாரல்லவா?

கிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்
க்ருஹம் ப்ரவிஷ்டஸ்ஸ ததர்ஸ வல்லபாம்
ஸகீபரீதாம் மணிஹேமபூஷிதாம்
புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்

‘ஆஹா, நான் கிருஷ்ண சிந்தனையில் திசை தவறி வந்து விட்டேனோ!’ என்று கண நேரம் குழம்பினார்.
பிறகு பிரமித்துப்போய் தனது வீட்டிற்குள் நுழைந்தார்.
சகிகளால் சூழப்பட்டவளும் ரத்தினம், தங்கம் முதலிய ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டவளுமான பத்தினியைப் பார்த்தார்.
உடனே, மிகவும் ஆச்சரியமான உனது கருணையை அப்போது அவர் உணர்ந்தாரல்லவா?

ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்
ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ
த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.

ஹே குருவாயூரப்பா! ரத்தினமயமான வீட்டில் வசித்த அந்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்துகொண்டவராகவே வாழ்ந்து இறுதியில் மோட்சமடைந்தார் அல்லவா?
இதைப்போலவே பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த நீ, எனது ரோகத்தையும் போக்க வேண்டும்.

இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்...

இத்துதியை அட்சய த்ருதியை தினத்தன்று பாராயணம் செய்தால் வறுமை நீங்கும்.
சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும்.
உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

வியாழன், 13 டிசம்பர், 2018

0160. பாவை நோன்பு

0160. பாவை நோன்பு

ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

ஆண்டாள் தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.

கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள்.

திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள்.

திருப்பாவை ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 474 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.

முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது. ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது.

காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை தினமும் 1 பாடலை மூன்று முறை படிக்க வேண்டும்

மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும்.

இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும்.

ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

0159. சந்திராஷ்டம தின வழிபாடு

0159. சந்திராஷ்டம தின வழிபாடு

சந்திராஷ்டம தினத்தில் பல பிரச்சினை ஏற்படும். உங்களின் ஜாதகத்தில் ஒவ்வொரு மாதத்திலும் எந்த நாளில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தியது என்று குறித்துக்கொண்டு வந்தால் அது சந்திராஷ்டம நாளாக இருக்கும்.

27 நாட்களுக்கு ஒருமுறை இந்த சந்திராஷ்டமம் ஏற்படும்.

கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் சந்திரன் வரும்போது சந்திராஷ்டமம் தான். அப்போது கண்டிப்பாக, மன நிலை கோபமாக அல்லது வருத்தமாக மேலும் குழப்பமாக இருக்கும்.

ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டம தினத்தன்று எந்த முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். சந்திரன் மனோகாரகன் என்பதால், அன்றைய தினம் மனதின் தன்மை நிலையற்றதாக இருக்கும்.

கடுமையான சந்திராஷ்டம தினங்கள் எந்த ராசிக்கு?

கடுமையான சந்திராஷ்டம தினங்கள் என்று பார்க்கும் போது ரிசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் வரும் போது மிகுந்த தாக்கத்தைத் தரும் காரணம் என்ன வென்றால் அவர்களின் ராசிக்கு எட்டாவது ராசியதிபதி பகையாக இருக்கும்.

மற்ற ஆறு ராசிகளான மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிக்கு சந்திராஷ்டமத்தாக்கம் குறைவாகவே காணப்படும். இதனைத்தான் அனுகூல சந்திராஷ்டம தினங்கள் என்றெல்லாம் சொல்வர்.

என்னதான் சந்திரன் மனக்காரன் என்றாலும், அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்படுத்துவது கேது தான்,

8ஆம் அதிபதியின் அதி தேவதை, சந்திரனின் அதி தேவதையான பார்வதி தேவி வழிபாடு, கேதுவின் அதி தேவதையான இந்திரன் வழிபாடு,

இறை வழிபாடு செய்து கீழ்கண்ட பரிகாரம் செய்ய நல்ல பலனைத் தரும்.

மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.

மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.

கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.

தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம்.

இதனால் சந்திராஷ்டமம் வரும் நாளில் தவிர்க்க முடியாக் காரியங்களை செய்யும் பொது தடங்கல்கள் வராமல் தவிர்க்கலாம்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம தினத்தை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி -– அனுஷம், பரணி –- கேட்டை, கிருத்திகை –- மூலம், ரோகிணி – பூராடம், மிருகசீரிஷம் – உத்திராடம், திருவாதிரை –- திருவோணம், புனர்பூசம் – அவிட்டம், பூசம் – சதயம், ஆயில்யம் – - பூரட்டாதி, மகம் –- உத்திரட்டாதி, பூரம் – ரேவதி, உத்திரம் – அஸ்வினி, அஸ்தம் – பரணி, சித்திரை – கிருத்திகை, சுவாதி – ரோகிணி, விசாகம் – - மிருகசீரிஷம், அனுஷம் – திருவாதிரை, கேட்டை – புனர்பூசம், மூலம் – பூசம், பூராடம் – ஆயில்யம், உத்திராடம் – மகம், திருவோணம் – பூரம், அவிட்டம் – உத்திரம், சதயம் – அஸ்தம், பூரட்டாதி – சித்திரை, உத்திரட்டாதி – சுவாதி, ரேவதி – விசாகம்.

சந்திராஷ்டம தினங்களில் இறைவழிபாடு நன்மையா?

பொதுவாக இந்த தினங்களில் கோவிலுக்குச் சென்று வருவது நன்மை தரும்

சந்திராஷ்டம தினம் மற்றும் பௌர்ணமி , திங்கட்கிழமைகளிலும் இந்த துதியை பாராயணம் செய்து வந்தால் பாதிப்பில் இருந்து மீளலாம்.

சந்திராஷ்டம பாதிப்புகளை நீக்கும் சந்திர பகவான் துதி

ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

பொருள்:

வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.

Cantirasṭama patippukaḷai nikkum cantira pakavaṉ tuti

Swethambaran is the Vasuprabharanam
Svetesvuccadakam Suresavithirim
Durmayam Thuruthapavaramam Dhamtams
Shravathas mouthed quality Pramanamami Nithyam.

Meaning :

I have a white whiteness, a white whitish, who walks in the white horse, and has the salutations of the devotees worshiped in the hands of both hands, holding the seals, and giving the gifts, the Amrutha and the pearl of Srivatasam.

மந்திரங்களை ஜபிப்பதும் மிகவும் நல்லது. மேலும், சந்திரனை வழிபடுவதும் மிக்க நன்று.

திங்களுர் சென்று வருவதும் நன்மை தரும்.

சந்திரனின் காயத்ரி மந்திரம்

பத்மத் வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி|

தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||

(அல்லது)

ஒம் நிஷாகராய வித்மஹே

கலா நாதாய தீமஹி

தந்நோ: சந்த்ரப்ரசோதயாத்!!

சந்திரனின் காயத்ரி மந்திரத்தை சந்திராஷ்டம தினத்தன்று 108 முறை உச்சரிப்பது மிகவும் நல்லது. அன்று ஏற்படும் பிரச்சினைகள் குறையும், மனம் சாந்தியடையும்.

Mantras are very good. And it is better to worship the moon.

Things are also good for traveling.

Chandran's Gayatri Mantra

Padmat Wajaya Vidmahey

Hema Rupai Taimahi |

Thanono Soma: Brododayat ||

(Or)

Oh nishakara vidmahee

Kala Nathaya Taimahi

Thanono: Chandraprasadayath !!

Chandran's Gayatri Mantra is celebrated 108 times on Chandrasaktham day. Problems will be reduced and will be calm.

விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

குருவின் ஆதிக்கம்பெற்ற விரளி மஞ்சளை கையில் காப்பாக கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

0158. ஆத்யந்த பிரபு

0158. ஆத்யந்த பிரபு விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். ஆதி' என்றால் முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது’ என்பார்கள். அதற்கு ‘மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது’ என்று பொருள். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்! மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

சனி, 24 நவம்பர், 2018

0157. தத்தாத்ரேயர் வழிபாடு

0157. தத்தாத்ரேயர் வழிபாடு

நித்ய சஞ்சீவிகளில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர்.
பூவுலகில் சகல உயிர்களும் ஞானத்தோடு வாழவேண்டும் என்று எண்ணிய மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து குருவாக உருவம் பெற்று வந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் தத்தாத்ரேயர்.
மார்கழி மாதம் பெளர்ணமி நாளில், மிருகசீரிட நட்சத்திரத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா மூவரையும் உள்ளடக்கிய தத்தாத்ரேயர்.
இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர்.

இவரது 'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனஅமைதி உண்டாக, திருஷ்டி, தீவினைகள் விலக ஜெபிக்கப்பட்டு வருகிறது.

செல்வவளம் உண்டாக, பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலக இந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-

1.நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

2.பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||

Shri Dattatreya Shanti Mantras: -

1.Imasthe Lord Dattatreya Jagatthae |
Sarva Badha Chiramangam Guru Shanti Prayach May

2.Butta Pathacha Yasya Smarana Mathrathah |
Duradeva Balayante Dattatreya Namasamtham ||
Prechchi Manchu Hoom Image Svaha ||

குடும்பத்தில் அமைதி, மனநிம்மதி உண்டாகும்.
செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில்
புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.

தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.

புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 21 நவம்பர், 2018

0155. நித்ய பஞ்சாயதன பூஜை

0155. நித்ய பஞ்சாயதன பூஜை

ஒவ்வொருவரும் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான கர்மாக்களில் தேவதா ஆராதனை ஒன்று, அதிலும் முக்கியமானது ஸ்ரீ பஞ்சாயதன பூஜை.

விநாயகர்,சூரியன், அம்பிகை, விஷ்ணு, ஈசுவரன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் தினமும் இதற்குரிய மந்திரத்தை உச்சரித்து பூஜித்து வந்தால் சிறப்பான மேன்மை அடையலாம்.
அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.

இந்துக்கள் வீடுகளில், நதியிலிருந்து எடுக்கப்பட்ட விஷேஷ கற்களை வைத்து செய்யப் படும் பூஜை இது.

I. விநாயகருக்கு பீஹாரில் சோனபத்ராவில் உருவான சோணபத்ரக் கல் சிவப்பு நிறக் கல் , கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் கிடைக்கிறது.

II. சூரியனுக்குரிய சூரியாகாந்தக் கல் ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது.

III. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது.
அது தங்க ரேக் ஓடிய கல்.

IV. விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைக்கும்.

V. ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது.

ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார்.
எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.

தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்கவும், செல்வம் தழைத்தோங்கவும் உதவுகிறது நித்ய பஞ்சாயதன பூஜை.
இதனை நீங்கள் தினமும் செய்து வந்தால் உயர்ந்த பொருளாதாரம் நிலைத்து நிற்கும்.
இந்த நித்ய பஞ்சாயதன பூஜைகள் செய்வதால் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
நிம்மதியான வாழ்வும், செழிப்பான பொருளாதாரமும் கிட்டுகிறது.

சனி, 17 நவம்பர், 2018

0152. மேகலா வீட்டின் ஸ்ரீ சக்கரம் வழிபாடு 12/11/2018

0151. மேகலா வீட்டின் நவராத்திரியில் அகண்ட தீபம் வழிபாடு 09/10/2018

0150.மேகலா வீட்டின் ஆடி மாசம் நான்காவது வெள்ளி தாமரை விதை & சங்கு பூஜை 10/08/...

0149. மேகலா வீட்டின் தீபாவளி அன்று இந்த பொருளை வாங்கவும் 06/11/2018

0148. மேகலா வீட்டின் எந்த வகையான விளக்கு ஏற்றலாம் ?

0147. மேகலா வீட்டின் ஆடி மாசம் மூன்றாவது வெள்ளி ரக்ட் குஞ்ஜா பூஜை 03/08/2018

0146. மேகலா வீட்டின் கிருஷ்ண ஜெயந்தி புஷ்ப யாகம் 02/09/2018

0145. மேகலா வீட்டின் ஆனி மாதம் சனிக்கிழமை அனுமன் தைல காப்பு 16/06/2018

0144. மேகலா வீட்டின் பூஜை அறை ஏற்பாடு வீடியோ

0143. மேகலா வீட்டின் ஐப்பசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை பஞ்ச லட்சுமியில் நாண...

0141. மேகலா வீட்டின் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை திருப்பதி வெங்கடாசலபதி ,...

0140. மேகலா வீட்டின் பூஜை அறை அமைத்தல்

0139. மேகலா வீட்டின் தீபாவளி அன்று காலை லஷ்மி குபேர் நாணயங்கள் வழிபாடு 06/11/2018

0138. மேகலா வீட்டின் ஆடி மாசம் இரண்டாவது வெள்ளி லக்ஷ்மி கௌடி பூஜை 27/07/2018

0137. மேகலா வீட்டின் பூஜை அறை ஏற்பாடு வீடியோ

0136. மேகலா வீட்டின் சாளக்கிராமம்

0135. மேகலா வீட்டின் தினமும் எற்றபடும் தீபம்

0133. மேகலா வீட்டில் பூஜையறை ஏற்பாடு

0132. மேகலா வீட்டின் ஐப்பசி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை லஷ்மி குபேர் நாணயங்க...

0131. மேகலா வீட்டின் தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்று...

030. மேகலா வீட்டின் ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கதிர் போட்ட நாணய வழிபாடு...

0129. மேகலா வீட்டின் சங்கு தீபம்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

0128. துளசி கல்யாணம்

0128. துளசி கல்யாணம்

ஸ்ரீ துளசி தேவிக்கும் ஸ்ரீமான் நாராயணனுக்கும் (கிருஷ்ணனுக்கும்) கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர்.

கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசி அன்று நெல்லி மரத்தை துளசிச் செடிக்கருகே நடுவார்கள்.

துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின்,

கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம்.
வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும்.

"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி
நேச்வர பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத்
வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம்
துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'

என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும்.

துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

வெள்ளி, 9 நவம்பர், 2018

0127. கன்னன் - கண்ணன்

0127. கன்னன் - கண்ணன்

கன்னன் - கண்ணன்.
இரண்டும் இருவரது பெயர்கள்.
முன்னவன் கர்ணன், பின்னவன் கிருஷ்ணன்.
தமிழ் ஒலியமைப்பில் எழுத்து வடிவில் கர்ணன் கன்னன் எனவும், கிருஷ்ணன் கண்ணன் எனவும் ஆயினர்.
ஆக்கியவர் வில்லிபுத்தூரார்.
இப்படியாக்கிட வழியுரைத்தவர் தொல்காப்பியர்.

I. கர்ணனுக்கு மறு பெயர் கன்னன்?
"தோரோட்டியின் மகன்' என்று ஏசப்பட்டவன்.

II. கிருஷ்ணனுக்கு மறுபெயர் கண்ணன்?
பார்த்தனுக்குச் (அர்ச்சுனனுக்கு) சாரதியாகக் குதிரை ஓட்டி, எல்லாராலும் பூஜிக்கப்பட்டவன்.

வியாழன், 8 நவம்பர், 2018

0126. மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன,

0126. மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன

மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.

கீழ்நோக்கு நாள்: கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட் டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.

சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிரு கசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 7 நவம்பர், 2018

0125. பஞ்சாங்கம் படியுங்கள்

0125. பஞ்சாங்கம் படியுங்கள்

சித்திரை முதல் நாளன்று வீடுகளை சுத்தம் செய்து வாசல் படிகளுக்கு மஞ்சள் - குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்.
சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தூய ஆடைகளை அணிய வேண்டும்
பிறகு அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் இறைவனின் சந்நிதானத்தில் வைக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து விநாயகர், நவக்கிரகஙக்ள், குல தெய்வம் ஆகியவைகளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.
பின் பூஜையில் வைத்த பஞ்சாங்கத்தை எடுத்து அதில் உள்ள பலன்களைப் படிக்க வேண்டும்.
இன்றும் சில கிராமங்களில் வீட்டு திண்ணை பொது மண்டபங்களில் பெரியவர்கள் இத்திருநாளன்று அமர்ந்து பஞ்சாங்கம் படிக்க மற்றவர்கள் கேட்கும் வழக்கம் உள்ளது.

சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்.
விரதத்தைப் பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப் பற்றிச் சொன்னால், செல்லச் செழிப்பும் காரணத்தை பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும்.
அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும்.
யோகத்தைப் பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 3 நவம்பர், 2018

0124. ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல்

0124. ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல்

உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி
உன்பாதம் சரணடைந்தோம் அஷ்டலக்ஷ்மி
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலெக்ஷ்மி
கலையாவும் நிறைந்தவளே அஷ்டலக்ஷ்மி
நிலையான அருட்செல்வம் அருள்பவள் அவளே
உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே (உலகெங்கும்)

ஸ்ரீ லக்ஷ்மி

பாற்கடலில் தேவர் அமுதம் கடையும் போது
பாரெல்லாம் வியந்திட நாரணி உதித்தாள்
நாரணனும் தேவியை மார்பினில் தாங்கி நின்றார்
பூரணியும் பூவுலகைக் காக்க வந்தாள்
அவளே ஸ்ரீ லக்ஷ்மி தேவி லக்ஷ்மி

1. ஸ்ரீ ஆதிலக்ஷ்மி

இரு கண்கள் திருக்கரங்கள் கொண்டவள் அவளே
இகபரசுகம் யாவும் கொடுப்பவள் அவளே
அபயம் அளிப்பவளே ஆதிலக்ஷ்மி அவளே
ஆபரணம் அணிந்த ஒளிக்கதிர் ராணி அவளே
எழில் மலரத் தோரணங்கள் சூழ்பவள் அவளே
அழகிய தாமரைமேல் வாழ்பவள் அவளே
மஞ்சள் நிறஉடை தரித்து மலர்மாலை அணிந்தவளே
மங்களம் நிறைந்தவளே வல்லமை மிகுந்தவளே
ஆதிலக்ஷ்மி அன்னை ஆதிலக்ஷ்மி

2. ஸ்ரீ சந்தானலக்ஷ்மி

ஜடாமகுடம் அணிந்து காட்சி தந்தாள்
அன்னை இடுப்பினில் சுகுமாரனை ஏந்தி நின்றாள்
வீரம் மிகுந்த அபயக் கரங்கள் இரண்டிலே
பூரணக் கும்பமும் வைரக் கங்கணமும் விளங்க
அழகிய மாதரும் தீ பமும் தாங்கியே
எழில் வெண் சாமரம் வீசியிருக்க
முத்திழைத்த உரையோடு துலங்கும்
சக்தியோடு எழில் ராணியாக
சந்தானலக்ஷ்மி அவதரித்தாள்
அவள் சந்தான சௌபாக்கியம் தந்திடுவாள்

3. ஸ்ரீ கஜலக்ஷ்மி

பொன்னிறக் குடம் தாங்கி
வெண்ணிறயானை யிரண்டு
தன்னிரு துதிக் கையினால்
அபிஷேக நீர் கொண்டு
அன்னைக்கு நீராட்ட
அலங்கார தேவதையாய்
வெண்பட்டு புடவையுடன் காட்சி தந்தாள்
கரங்கள் நான்கும் உடையவளாம் கஜலக்ஷ்மி
திருக்கரத்தில் ஞானமுத்திரை உடையவளாம் கஜலக்ஷ்மி
இரவும் பகலும் துதிப்பவர்க்கே கஜலக்ஷ்மி
அரச போகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி

4. ஸ்ரீ தனலக்ஷ்மி

செல்வ திருமகளாம் மோகனவல்லி
எல்லோரும் கொண்டாடும் வேதவல்லி
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணிஸ்யாமாளை
வரத முத்திரை காட்டியே பொருள் செல்வம்
வழங்கிடும் அம்பிகை
மாமனோகர தேவி மார்பினில்
ஒற்றைவடப் பொன்னட்டிகை
சிரத்தினில் மணி மகுடமும்
தாங்கிடும் சிந்தாமணி - பல
வரங்கள் வழங்கிடும் ரமாமணி - அவள்
வரதராஜ சிகாமணி அவள்தான் தனலக்ஷ்மி

5. ஸ்ரீ தான்யலக்ஷ்மி

ஆற்றோரம் தன்னில் சுகாசனத்தில் அமர்ந்து
போற்று மன்பரைக் கண்டு மலர்ச்சியும் கொண்டுஎழில்
வாழை மரங்கள் மலர்தேன் பொழிந்து பூஜிக்க
ஆழ்கடல் அன்னையவள் காட்சி தந்தாள்
இடக்கை மேல்புறத்தில் செழுங்கரும்பை யேந்தி
இகத்தினில் நிலவளம் செழிக்க வந்தாள்
அவள்தான் தான்யலக்ஷ்மி! தான்யலக்ஷ்மி

6. ஸ்ரீ விஜயலக்ஷ்மி

சிங்கார முடிதனிலே அலங்காரக் கூந்தல்
செம்மேனியில் சிறந்த பொன்னாபரணங்கள்
அங்குச பாசமும் பல ஆயுதம் கையில் கொண்டு
செங்கோல் செலுத்தும் ராஜவடிவம் கொண்டாள்
அன்னையின் முகம் தன்னில் தவழ்ந்திடும்மந்தஹாசம்
அன்னைப் பறவை தாங்கும் அழகிய மலர்ப்பாதம்
அன்பரைக் காத்து நிற்கும் அவளது தாய்ப்பாசம்
துன்பங்கள் நேராமல் காத்திடும் அவள் நேசம்
விஜயலக்ஷ்மி தேவி விஜயலக்ஷ்மி !

7. ஸ்ரீ மகாலக்ஷ்மி

நிறைந்திடும் அழகோடு வளரும் பொன்மேனியாள்
அறம், பொருள், வீடு, இன்பம் தரும்
நான்கு கரம் கொண்டாள்
அழகிய மலர் கொண்டு யானைகள் வணங்கி நிற்க
எழிலாக காட்சி தந்தாள் எங்கள் தாய்
சௌபாக்கியம் தரும் தெய்வம் தேவி லக்ஷ்மி
அபயக்கரம் நீட்டி அணைக்கும் மகாலக்ஷ்மி !

8. ஸ்ரீ வீரலக்ஷ்மி

ஒன்பது பனைமரங்கள் அடுத்து நிற்க தேவி
சிம்மாசனத்தின்மேல் அமர்ந்திருக்க
வெற்றி எட்டு கைகளிலும் சூலம்
கபாலம் கொண்டாள்
நற்கதியும் நமக்கருள நானிலத்தில் அவதரித்தாள்
பொற்பதம் பணிந்தவர்க்கு பொன்னாவரம் தந்து
வெற்றியுடன் வாழவைப்பாள் வீரலக்ஷ்மி
வரவேண்டும் வரவேண்டும் அஷ்டலக்ஷ்மி
அருளைத் தரவேண்டும் தரவேண்டும் ஆதிலக்ஷ்மி
சந்ததியைத் தந்திடுவாய் சந்தான லக்ஷ்மி
எண்ணும் பல யோகங்கள் தருவாயே கஜலக்ஷ்மி
தனம் பெருக மனமும் மகிழ காண்பாராய் தனலக்ஷ்மி
மனம் குளிர நிலம் செழிக்க நீயருள்வாய் தான்யலக்ஷ்மி
கலைகளில் வெற்றிதனைக் காண அருள் விஜயலக்ஷ்மி
சகல சௌபாக்கியம் தந்திடு மகாலக்ஷ்மி
உலகெங்கும் வீரத்தை நீயருள்வாய் வீரலக்ஷ்மி
உன்நாமம் சொல்பவர்க்கு அருள்புரிவாய் அஷ்டலக்ஷ்மி

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 2 நவம்பர், 2018

0123. சாளக்கிராம வழிபாடு

0123. சாளக்கிராம வழிபாடு

கல்லிலும் புல்லிலும் தூணிலும் துரும்பிலும் கடவுளைக் கண்டவர்கள் நம் முன்னோர்கள்.
அதன்படி சாளக்கிராம ஸ்படிக கற்களாக வடிவம் கொண்ட மகாவிஷ்ணுவை வழிபடுவது காலம் காலமாக பல குடும்பங்களில் இருந்து வரும் ஒரு பழக்கம்.
சாளக்கிராமத்தினால் உருவாக்கப்பட்ட ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், சந்தன கோபாலன் போன்ற தெய்வ மூர்த்தங்கள் உண்டு. எல்லாக் கோயில்களிலும் இந்தச் சாளக்கிராம பூஜை முக்கிய இடம் பெறுகிறது.
சாளக்கிராம பூஜை முடிந்த பிறகுதான் மூலவருக்கும் இதர தெய்வங் களுக்கும் பூஜை செய்வார்கள்.
பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி அதன்மீது சாளக்கிரா மத்தை வைத்துச் செல்வது சிலர் வழக்கம்.
பால், நீர் அபிஷே கம் செய்து சாதம், பருப்பு, பாயசம், நெய் என்று நைவேத்யம் செய்யலாம்.
சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட லோகப் பேறு கிடைக்கும் என்பர். சாளக்கிராம கற்கள் பின்னப்பட்டு உடைந்து விட்டாலும் அதை செப்பு, வெள்ளி கம்பிகளில் இணைத்து வைத்து பூஜைக்குப் பயன்படுத்தலாம். அதை பூஜையிலே வைத்து அபிஷேக ஆராதனை செய்யலாம்.
ஆடி மாதம் சாளக்கிராம வழிபாடு

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0122. அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு

0122. அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு:- அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும்.
இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர். அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் மந்திரம் I. இந்திரன் = கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார். ஐராவத கஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடிநம் ஸகஸ்ர நயநம் ஸக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத் II. அக்னி தேவன் = தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும். ஸப்தார்சிஷம் ச பிப்ராணம் அக்ஷமாலாம் கமண்டலும் ஜ்வாலாமாலாகுலம் ரக்தம் ஸக்திஹஸ்தம் சகாஸநம் III. யமன் = தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார். சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார். இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவாhர். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். இவரை வழிபட நம்மைப் பற்றிய தீவினைகள் நீக்கி நல்வழி கிடைக்கும். க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயாநகம் காலபாஸதரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிணதிக்பதிம் IV. நிருதி = இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.
ரக்தநேத்ரம் ஸவாரூடம் நீலோத்பல தளப்ரபம் க்ருபாணபாணி மாஸ்ரௌகம் பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம் V. வருண பகவான் = மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு,குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன ஐவ‌கை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார். இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும். நாகபாஸதரம் ஹ்ருஷ்டம் ரக்தௌகத்யுதி விக்ரஹம் ஸஸாங்க தவளம் த்யாயேத் வருணம் மகராஸநம் VI. வாயு பகவான் = வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட ஆயுள் விருத்தி கிடைக்கும். ஆபீதம் ஹரிதச்சாயம் விலோலத்வஜ தாரிணம் ப்ராணபூதம்ச பூதாநாம் ஹரிணஸ்தம் ஸமீரணம் VII. குபேரன் = வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன. இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும். குபேரம் மநுஜாஸீநம் ஸகர்வம் கர்வவிக்ரஹம் ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம் உத்தராதிபதிம் ஸ்மரேத் VIII. ஈசானன் = வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார். இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும். ஈஸாநம் வ்ருஷபாரூடம் த்ரிஸூலம் வ்யாலதாரிணம் சரச்சந்த்ர ஸமாகாரம் த்ரிநேத்ரம் நீலகண்டகம். நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

0121. ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

0121. ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:

ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண் மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்ய புஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:

ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம:
ஓம் அனுக்ரஹபதாயை நம:

ஓம் புத்யை நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோக சோக விநாசிந்யை நம:
ஓம் தர்ம நிலயாவை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:

ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பக்மோத்பவாயை நம:
ஓம் பக்த முக்யை நம:
ஓம் பத்மனாப ப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்ம மாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:

ஓம் பத்மிந்யை நம:
ஓம் பத்மகந்திந்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸந்நாயை நம:
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதநாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப் புஜாயை நம:

ஓம் சந்த்ர ரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்து சீதலாயை நம:
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்ய ஜநந்யை நம:

ஓம் புஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம:
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வ நிலாயாயை நம:
ஓம் வராய ரோஹாயை நம:
ஓம் யச்சஸ் விந்யை நம:

ஓம் வாஸுந்தராயை நம:
ஓம் உதா ராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் த ந தாந்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம:
ஓம் வரலக்ஷம்யை நம:

ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ர தநயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்கள தேவதாயை நம:
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம:
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம:
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:

ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம:
ஓம் நவ துர்காயை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம:
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம:
ஓம் புவனேச்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்

குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்வை பட்டு எல்லா வளமும் பெறுவீர்களாக.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 1 நவம்பர், 2018

0120. தீபாவளி

0120. தீபாவளி

தீபத் திருநாள் / தீப ஒளித்திருநாள்.
தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற, ஓர் இந்துப் பண்டிகையாகும்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, துவிதியை ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய்

1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

0119. கங்கோத்பத்தி

0119. கங்கோத்பத்தி

கங்காஷ்டகம்

1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-

கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!

அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்

விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!

பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ, தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ

ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!

க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ

பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!

ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்

ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி

ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்

பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் II

யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது.
குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது.
காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை, புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்

பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!

பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்

கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் !!

முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I

பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I

சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ

காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி

காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது.
அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்

த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!

த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்

ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!

ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது.
சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய்.
உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்

விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !

ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே

தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!

ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்

த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !

ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே

பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!

கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன்.
உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம்.
அப்பொழுது ஹரியும்,

ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி

ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி !!

புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.

கங்காஷ்டகம் முற்றிற்று.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 27 அக்டோபர், 2018

0118. ஸ்ரீ ராம ஜெயம்

0118. ஸ்ரீ ராம ஜெயம்

ஆஞ்சநேயருக்குரிய தாரக மந்திரம், ‘ஸ்ரீ ராம ஜெயம்’.
"ராம' என்றாலும்"பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள்.

இந்த மந்திரத்தை உச்சரித்தால் அவர் மனம் மகிழ்ந்து பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருவார்.

ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர்.
வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர்.

ஆஞ்சநேயரை வணங்கி எழுத துவங்கலாம்.
இதனால் எடுத்த செயல்கள் வெற்றியடையும்

ஸ்ரீராம ஜெயத்தை முதன்முதலாக எழுத விரும்பும் பக்தர்கள், அனுமன் ஜெயந்தியன்றும், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அருகிலுள்ளக் கோவிலுக்கு வந்து மந்திரம் எழுதத் தொடங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0117. தீபாவளி லட்சுமி குபேர பூஜை

0117. தீபாவளி லட்சுமி குபேர பூஜை

வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும்.

நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும்.
அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான்.

விநாயகர் துதி

மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும்

தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.

குபேர மந்திரங்கள்

‘ஓம் ய க்ஷய குபேராய
வைஸ்ரவணாய
தந தா நியாதி பதயே
தந்தாந்ய ஸம்ருத்திம்மே
தேவி தாபய ஸ்வாஹா’

(அ) “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும்.
தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.

‘மகாலட்சுமி தாயே! என் கடன்கள் விரைவில் தீர வேண்டும்.
எனக்கு லாபம் கிடைக்க வேண்டும்நை

வைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும்.

பூஜையில் தட்சணையாக காசுகள் வைக்கப்பட வேண்டும்

குபேர தீபம்

வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும்.
முதலில் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி ஏற்ற வேண்டும்.

லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது.

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும்.
இந்த பூஜை சிறப்பு மிக்கது.

தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என பூஜிக்க வேண்டும்.
அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 15 அக்டோபர், 2018

0116. அர்த்த நாரீஸ்வரர்

0116. அர்த்த நாரீஸ்வரர்

பிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர்.
ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன்.
கயிலைநாதன் தான் என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார்.

தன் கணவரை விட்டு ஒரு கணமும் பிரியா வரம் வேண்டும் என்று தவமிருந்தாள்.
கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார்.
சிவனை கண்ட பார்வதி ஒரு நாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள்.

பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார்.
இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள் தான் கேதார கெளரி விரதநாள்.

கேதார கெளரி விரதம். 21 நாள் விரதம் இருந்து தீபாவளி தினத்தன்று சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும். தம் மாங்கல்யபலம் நீடிக்கவும் கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன்
பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார்.
இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார்.

ஸ்ரீ் அர்த்த நாரீஸ்வரர் காயத்ரி
ஓம் தபஸ்ய ச வாம பாகமாய வித்மஹே
சிவசக்த்யாய தீமஹி
தன்னோ அர்த்த நாரீஸ்வரா ப்ரசோதயாத்!

இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும்.
வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0115. சங்கர-நாராயணர்

0115. சங்கர-நாராயணர்

சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது.
தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர்.
இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள்.
இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர்.

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த ஆடித் தபசு

சிவன் மற்றும் விஷ்ணு ஒரே தெய்வம், இரண்டு தெய்வங்களை ஒரே வடிவமாக வணங்க வேண்டுமென்று சைவ சமயத்தவர்களும் இந்துக்களும் விரும்பினர்.

ஆடி தபசு
தை மாத கடைசி வெள்ளிக்கிழமை

ஸ்ரீ் சங்கர நாராயணர் காயத்ரி

ஓம் சிவா-விஷ்ணு ச ஏக ரூபமாய வித்மஹே
தபஸ் சக்த்யாய தீமஹி
தன்னோ சங்கர நாராயண ப்ரசோதயாத்!

Sri Sankara Narayana Gayathri

Om Siva-Vishnu cha Yega Roobamaya Vithmahe
Thapas Sakthyaya Theemahi
Thanno SankaraNarayana Praschothayath

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0114. தத்த ஜெயந்தி

0114. தத்த ஜெயந்தி

தத்தாத்ரேயர்

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே.
இந்த கருத்தைச் சொல்ல வந்தது தான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம்.

இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர்.

நித்ய சஞ்சீவிகளில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர்.

இந்து சமயப் பிரிவினர் இவரை திருமாலின் வடிவமாகக் கருதுகின்றனர்.

அவதாரங்களில் 'சிறந்த அவதாரம்' என்று வியாசரால் வணங்கப்பட்டவர்.

'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனஅமைதி உண்டாக, திருஷ்டி, தீவினைகள் விலக ஜெபிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-

1.நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி,மன நிம்மதி உண்டாகும்.
புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.

2.பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||

செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்கப் பீடைகள்,திருஷ்டி,தீவினைகள்,பேய்,பிசாசு தொந்தரவுகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.

புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.

இதை செய்யும் சித்தி செய்த உடல்கட்டு மந்திரம் போட்டுக் கொள்ளவும்.

விரைந்து அருள் செய்பவர்.இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற ,கடன் தீர ,அடமானம் வைத்த பொருள் ,நகைகளை மீட்ட,காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||

ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம் :-

1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||

2.ஓம் குரு தத்த நமோ நமஹ||

குடும்பஸ்தர்கள் மேற்கண்ட மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

0113. புரட்டாசி சனிக்கிழமை

0113. புரட்டாசி சனிக்கிழமை

B. புரட்டாசி சனி

புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.

ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும்.
திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.

புரட்டாசி சனி (Puraddasi Sani)
C. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
(I) வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும்.
(II) வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
(III) துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில்.
எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள்.
அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார்.
சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான்.

‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும்.

ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம் :

‘ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்’

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0112. You Tube Megala Home Channel

0112. You Tube Megala Home Puja Channel

மேகலா வீட்டில் மா பதியம் செய்வது எப்படி?

மேகலா வீட்டின் தினமும் எற்றபடும் தீபம்
மேகலா வீட்டின் எண்ணெய் காப்பு
மேகலா வீட்டின் நாக வழிபாடு
மேகலா வீட்டின் யம தீபம்
மேகலா வீட்டின் சங்கு தீபம்
மேகலா வீட்டின் கிருஷ்ண ஜெயந்தி புஷ்ப யாகம்
மேகலா வீட்டின் பஞ்ச லட்சுமியில் நாணயங்கள் வழிபாடு

மேகலா வீட்டின் ஆடி மாசம் 4வது வெள்ளி தாமரை விதை & சங்கு பூஜை

மேகலா வீட்டின் ஆவணி மாதம் 1ம் ஞாயிறு சூரிய நமஸ்காரம்
மேகலா வீட்டின் ஆவணி மாதம் 2வது ஞாயிறு சூரிய குதிரை வழிபாடு
மேகலா வீட்டின் ஆவணி மாதம் 3வது ஞாயிறு சூரிய அஸ்வ கலசம் வழிபாடு
மேகலா வீட்டின் ஆவணி மாதம் 4வது ஞாயிறு சூரிய பித்ரு பூஜை

மேகலா வீடு கிரகபிரவேசம்
மேகலா வீட்டின் 2 வது படுக்கையறை அமைப்பு
வாங்க மேகலா வீட்டை பார்க்கலாம் பகுதி I
வாங்க மேகலா வீட்டை பார்க்கலாம் பகுதி II
வாங்க மேகலா வீட்டை பார்க்கலாம் பகுதி III

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 5 செப்டம்பர், 2018

0111. கோமதி சக்கரம் வழிபாடு

0111. கோமதி சக்கரம் வழிபாடு

கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும்.

சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

கோமதி சக்கர கல்லை பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.

நோய் தீர்க்கும் வைத்திய கற்களாக கோமதி சக்கர கல் பயன்படுகிறது.

வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்க பயன்படுத்தினர்

கோமதி சக்கர வழிபாடு சகல பாவமும் விலகும்.

கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவகோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை.
இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவளாக மாறுவாள்.

கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் உள்ளதால் அவ்விடம் குபேர வாசம் உண்டாகும்.

நீத்தாருக்கு திதி கொடுக்காத தோஷம் முதல் கடின தோஷங்கள் இக்கோமதி திருவல சுழியை பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறது.

1 . அன்னை பூஜை - தொப்பு = ஓம் ஹ்ரீம் மாதாவே நமக;
ஓம் ஹ்ரீம் மாதாவே நமக; என 21 முறை கூறவும்.

2 . தந்தை பூஜை - மார்பு = ஓம் ஹ்ரீம் பிதாவே நமக; என 21 முறை கூறவும்.

3 . குரு பூஜை - குரு = ஓம் ஹ்ரீம் குருவே நமக; என 21 முறை கூறவும்.

4 . பித்ரு பூஜை - நெற்றிக்கண் = ஓம் ஹ்ரீம் பித்ரு தேவதாய நமக; என 21 முறை கூறவும்.

5 . குல தெய்வ பூஜை - உச்சி தலை = ஓம் ஹ்ரீம் குலதேவதாய நமக; என 21 முறை கூறவும்.

6 . பிரம்மா சரஸ்வதி (கல்வி) பூஜை - கட்டைவிரல், சுண்டுவிரல் இவ்விரு விரல்களால் மட்டும் =
ஓம் நமோ பிரம்ம தேவாய நமக என ஏழு முறை கூறவும்.
அடுத்து ஓம் ஐம் சரஸ்வத்யை நமக என ஏழுமுறை கூறவும்.

7 . லட்சுமி நாராயனர் (செல்வம்) பூஜை - வலது கை ஐந்து விரல்களாலும் பிடித்து மார்பு குழியில் வைத்து =
ஓம் நமோ நாராயணாய நமக என எட்டு முறை கூறி
பின்பு ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக என எட்டு முறை கூறி வணங்கவும்.

8 . சக்தி சிவன் (வீரம்) பூஜை - கட்டைவிரல் மோதிரவிரல் இவ்விரு விரல்களை மட்டும் =
ஓம் சிவசிவ ஓம் என ஒன்பது முறை கூறி
பிறகு ஓம் ஹ்ரீம் பராசக்தியே நமக என 9 முறை கூறி வணங்கவும்.

இப்போது தாங்கள் பூஜித்த 6, 7, 8-வது சக்கர வழிபாடு விஷ்ணு லோகத்தை வழிபட்ட பலன் கிடைக்க செய்யும்.

9 . பௌர்ணமி (ஆகாயம்) பூஜை - சிவலோக வழிபாடாகும் = நல்லதே நடக்கும்.
மந்திரத்தின் இறுதியில் நமக இதற்கு மட்டும் சேர்க்க வேண்டாம். =
ஓம் ஹரீம் மகா காலபைரவாய நமக என்னும் மந்திரத்தை 21 முறை கூறவும்.

10 . அமாவாசை (பாதாளம்) பூஜை - வலது கை ஐந்து முனை விரல்களாலும் எடுத்து பூஜிக்க வேண்டும். = 11 . ஏகாதசி (லாபம்) பூஜை - இடது கையால் எடுத்து வலது கை உள்ளங்கையில் உங்கள் மார்பு உயரத்திற்கு நேராக கையை நீட்டவும்.=
நான் நேசிக்கும் அத்தனை லாபங்களையும் தட்டாமல் தயவுடன் தாருங்கள் .
என தயவுடன் வேண்டுதலாக கேட்கவும்.
இதையே மந்திரமாக பாவித்து 9 முறை திரும்ப திரும்ப கூறவும்.

12 . சிவராத்திரி (சுகம்) பூஜை - 11 பூஜை முடித்து சக்கரத்தை கீழே வைக்காமல் அந்த இரு கையும் அப்படியே தொப்புளுக்குக்கீழ் கொண்டுவந்து வைக்கவும் =
அத்தனை சுகங்களையும் இப்பிறவியிலேயே வேண்டி கேட்கிறேன் தாருங்கள்.
சங்கு சக்கரமும், உலக சுழியும் தங்கள் வசம் உள்ளதுபோல் நான் பெற நினைக்கும் நியாயமான சந்தோஷங்களைத் தாருங்கள்
என இதையே மந்திரமாக பாவித்து 9 முறை கூறவும்.

13 . ஜென்ம பூஜை - வலது கை உள்ளங்கையில் வைத்து மூடிக்கொள்ளவும். =
இனி நான் நி - னைத்தவையெல்லாம் ஜெயமாகும்.
எல்லாம் என் வசியமே நம என 3 முறை கூறவும்.

பிறகு உங்கள் லக்கணம் தெரிந்தால்
ஓம் ஐம் (இவ்விடம் லக்கனபெயர் சொல்லவும்) உயிராய நம
உதாரனமாக உங்கள் லக்கணம் மேஷம் என்றால் ஓம் ஐம் மேஷம் உயிராய நம என 9 முறை கூறவும்.

அடுத்து ராசி தெரிந்தால்
ஓம் ஸ்ரீம் ராசிபெயர் உடலாய நம
என 9 முறை கூறவும். அடுத்து உங்கள் பெயர் மந்திரம் 21 முறை கூறவும்.

ஓம் ஹ்ரீம் தங்கள் பெயர் ஆத்மாவே நம
(மேற்க்கண்டதுதான் பெயர் மந்திரம் யாருடைய பெயரையும் மந்திரத்தின் நடுவில் சேர்த்து சொல்லலாம் .இது யாவருக்கும் பொதுவானதாகும்) .

இவ்வாராக பெயர் மந்திரம் 21 முறை கூறவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

0110. பித்ரு பூஜை

0110. பித்ரு பூஜை

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.

ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய!
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.

அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

0109. சங்கு தீபம்

0109. சங்கு தீபம்

இறைவழிபாட்டுக்கு பல வகை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்
அதில் தன ஆகார்ஷனத்திற்க்கென சில தீப வழிபாடுகள் உள்ளன
இந்த தீபங்கள் பணவரவை மட்டுமன்றி தீய எண்ணங்கள் தீய சக்திகளின்
ஆதிக்கத்தையும் கண் திருஸ்டி ஏவல் பில்லி சூன்ய பாதிப்பில் இருந்தும்
நம்மை காக்கிறது,

சங்கில் இடம்புரி வலம் புரி என இரண்டு வகை உள்ளது
வலம்புரி சங்கிற்க்கு அபார சக்தி உள்ளது
ஆனால் சங்கு தீபம் ஏற்ற இரண்டு வகையுமே ஏற்றது

உங்கள் சக்திக்கு தகுந்தாற்போல சிறிய அல்லது பெரிய சங்கு வாங்கி
அதை முதலில் சுத்தமான நீரில் கழுவி பின்பு பண்ணீரில் பத்து நமிடம்
ஊற வைத்து அதை சுத்தமான துணியில் துடைத்து விட்டு சந்தனம்
குங்குமம் வைக்கவும்

ஒரு தட்டில் சிறிது பச்சரிசியில் மஞ்சள் கலந்து பரப்பி அதன் மேல் சங்கை
வைத்து நல்லெண்னை மற்றும் பசு நெய் சம அளவில் நிரப்பி திரி
விளக்கேற்றவும்சங்கை சுத்தம் செய்ய வேண்டும்.
அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும்.

லட்சுமிக்கு பசு நெய், நாராயணனுக்கு நல்லெண்ணெய் விட்டு
தீபம் ஏற்ற வேண்டும்.

இடம் புரி சங்கில் இலுப்பை என்னை ஊற்றி சிகப்பு சேலை துண்டு
திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் துஸ்டதிய
சக்திகளும் தரிதிரங்களும் விளகும்.

வலம்புரி சங்கு வழிபாடு நமக்கு வளத்தை கொடுக்கும்.
இடம்புரி சங்கு வழிபாடு நமக்கு இடர்களை நீக்கி நன்மையை உண்டாக்கும்...

'ஓம் ஸ்ரீம் கம் கணபதயே நம:’
'ஸ்ரீ குருப்யோ நம:’ என்று 3 முறை சொல்லி மலரிட்டு வணங்கியும்,
'சங்க பூஜாம் கரிஷ்யே’ எனச் சொல்லி வழிபடவும் வேண்டும்.

சங்க மத்யே ஸ்திதம் தோயம்ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்..

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பாவ மானாய த்மஹி
தந்நோ சங்க ப்ரசோதயாத்

என்னும் சங்கு காயத்ரியை 3 or 11 முறை

ஸ்ரீ லக்ஷ்மீ குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும்,

உங்களின் கோரிக்கையை வைக்க அது விரைவில் நிறைவேறும்
ஒரு கோரிக்கை நிறைவேறியதும் அடுத்த கோரிக்கை வைக்கவும

துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில்
செய்து முடிக்கலாம்.

ஆடி மாத பூரம், புரட்டாசி மாத பவுர்ணமி,
ஆனி மாத சுக்லபட்ச அஷ்டமி, சித்திரை மாத பவுர்ணமி
எல்லாம் சங்கு தீபம்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 1 ஜனவரி, 2018

0108. பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

0108. பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

01. கன்னி மூலை (தென்மேற்கு) வீற்றிருக்கும் விநாயகர்.
நிருதி (தென்மேற்கு) மூலை

02. கிழக்கு – இந்திரன் யானை

03. வடக்கு திசைக்கு – குபேரன்.

04. வாயு மூலை வடமேற்கு தெற்கே தெய்வங்களை வைத்து வடக்கு முகமாக (சிவசக்தி
சொரூபம்) வைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
வாயு மூலை வடமேற்கு அனுமன்

05. பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை,
மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, பசு, கண்ணாடி, உள்ளங்கை,
தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

06. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

07. இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும்,
மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.
அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும். 

08. சங்கு

09. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது சிறப்பு.

010. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க
வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி
பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

011. சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில்
உபயோகிக்கவேண்டும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.