திங்கள், 15 அக்டோபர், 2018

0114. தத்த ஜெயந்தி

0114. தத்த ஜெயந்தி

தத்தாத்ரேயர்

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே.
இந்த கருத்தைச் சொல்ல வந்தது தான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம்.

இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர்.

நித்ய சஞ்சீவிகளில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர்.

இந்து சமயப் பிரிவினர் இவரை திருமாலின் வடிவமாகக் கருதுகின்றனர்.

அவதாரங்களில் 'சிறந்த அவதாரம்' என்று வியாசரால் வணங்கப்பட்டவர்.

'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனஅமைதி உண்டாக, திருஷ்டி, தீவினைகள் விலக ஜெபிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-

1.நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி,மன நிம்மதி உண்டாகும்.
புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.

2.பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||

செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்கப் பீடைகள்,திருஷ்டி,தீவினைகள்,பேய்,பிசாசு தொந்தரவுகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.

புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.

இதை செய்யும் சித்தி செய்த உடல்கட்டு மந்திரம் போட்டுக் கொள்ளவும்.

விரைந்து அருள் செய்பவர்.இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற ,கடன் தீர ,அடமானம் வைத்த பொருள் ,நகைகளை மீட்ட,காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||

ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம் :-

1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||

2.ஓம் குரு தத்த நமோ நமஹ||

குடும்பஸ்தர்கள் மேற்கண்ட மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: