0155. நித்ய பஞ்சாயதன பூஜை
ஒவ்வொருவரும் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான கர்மாக்களில் தேவதா ஆராதனை ஒன்று, அதிலும் முக்கியமானது ஸ்ரீ பஞ்சாயதன பூஜை.
விநாயகர்,சூரியன், அம்பிகை, விஷ்ணு, ஈசுவரன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் தினமும் இதற்குரிய மந்திரத்தை உச்சரித்து பூஜித்து வந்தால் சிறப்பான மேன்மை அடையலாம்.
அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.
இந்துக்கள் வீடுகளில், நதியிலிருந்து எடுக்கப்பட்ட விஷேஷ கற்களை வைத்து செய்யப் படும் பூஜை இது.
I. விநாயகருக்கு பீஹாரில் சோனபத்ராவில் உருவான சோணபத்ரக் கல் சிவப்பு நிறக் கல் , கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் கிடைக்கிறது.
II. சூரியனுக்குரிய சூரியாகாந்தக் கல் ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது.
III. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது.
அது தங்க ரேக் ஓடிய கல்.
IV. விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைக்கும்.
V. ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது.
ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.
இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார்.
எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.
தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.
உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்கவும், செல்வம் தழைத்தோங்கவும் உதவுகிறது நித்ய பஞ்சாயதன பூஜை.
இதனை நீங்கள் தினமும் செய்து வந்தால் உயர்ந்த பொருளாதாரம் நிலைத்து நிற்கும்.
இந்த நித்ய பஞ்சாயதன பூஜைகள் செய்வதால் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
நிம்மதியான வாழ்வும், செழிப்பான பொருளாதாரமும் கிட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக