ஞாயிறு, 25 நவம்பர், 2018
0158. ஆத்யந்த பிரபு
0158. ஆத்யந்த பிரபு
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர்.
ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள்.
ஆதி' என்றால் முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'.
எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும்
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது’ என்பார்கள்.
அதற்கு ‘மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது’ என்று பொருள்.
அனுமன், சிவனின் அம்சம்.
விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.
இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு!
பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்!
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக