சனி, 29 டிசம்பர், 2018

0165. புணர்ப்பு தோஷம்

0165. புணர்ப்பு தோஷம்

சனி-சந்திர சேர்க்கை:

இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவை புணர்ப்பு தோஷம்

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

மகாவிஷ்ணுவின் திருப்பெயரே ஸ்ரீ சத்தியநாராயணர் ஆகும்.

சத்தியநாராயணா பூஜையை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று மாலை சந்திரன் உதயமாகும் நேரத்தில் செய்ய வேண்டும்.

பௌவுர்ணமியன்று வீட்டில் சத்யநாராயணா பூஜை செய்து வந்தால், வீட்டில் சுபிக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை.

இந்த பூஜையை புரோகிதர் வைத்தும் செய்யலாம், அல்லது ஒரு நல்ல புத்தகத்தைப் பார்த்தும் நாமாகவே கூட செய்யலாம்.

பூஜை முறை:

பௌர்ணமி அன்று மாலை, குளித்துவிட்டு பூஜை அறையை மெழுகி, தாமரை மலர் கோலமிட வேண்டும். மாலை 4.30- 6.00மணிக்குள் பூஜையை தொடங்கி முடித்துவிடவேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும். ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும்.

மனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்கியதுடன், ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். சத்தியநாராயணருக்கும், கும்பத்திற்கும் சாம்பிராணி, கற்பூரம் காட்டி விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து 108 போற்றி பாடல்களையும் பாடலாம். பூஜையின் முக்கிய அம்சமாக அன்னதானம் செய்ய வேண்டும்.

பக்தியுடன், உள்ளப்பூர்வமாக ஸ்ரீசத்தியநாராயணனை வணங்கி இந்த விரதத்தை மேற்கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம்.

சத்தியநாராயணா பூஜையை செய்பவர்கள் பகவானின் அருளை பூரணமாக பெறுவார்கள். ஏழ்மை விலகி செல்வம் சேரும். பொய் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பயம் நீங்கும். பக்தர்கள் விரும்பிய கோரிக்கைகள் நிறைவேறும்.

இந்த பூஜையை பௌர்னமியன்று செய்ய முடியாதவர்கள் தமிழ் மாதத்தின் துவக்கநாள் அமாவாசை, அஷ்டமி, ஏகாதசி திதி துவாதசி, ஸங்கராந்தி, தீபாவளி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் எப்பொழுது சந்திரன் பலம் உள்ள நாளில் செய்யலாம். பொதுவாக பௌர்ணமி சந்திரபலம் உள்ள நாள் என்பதால் பௌர்ணமியில் அனுஷ்டிக்கபடுகிறது.

ஸ்ரீ சத்யநாராயணர் மகாவிஷ்னுவின் அவதாரம். அவரும், அவர் பேருக்கேற்றார் போல் சத்தியமானவர். நம்பிக்கையுடன் இதனை செய்தால் கண்டிப்பாக கை மேல் பலன் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: