புதன், 25 செப்டம்பர், 2013

014. செவ்வாய் வழிபடும் முறை

014. செவ்வாய் வழிபடும் முறை

வழிபடும் முறை

ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை.
செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம்.
செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம்.
ஸ்தல பெயர் : திருக்கோளூர் அம்சம் : செவ்வாய்
மூலவர் : வைத்தமாநிதி
உற்சவர் : நிக்சொபவிந்தன்
தாயார் : குமுதவல்லி ,கொளுர்வல்லி
மார்க்கம் : தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார் திருநகரி வரும் வழியில்
மூன்று கிலோமீட்டர் வந்து தெற்கே போகும் பாதையில் இரண்டு கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது .

செவ்வாய்க் கிழமை

அங்காரகன் (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 21 செப்டம்பர், 2013

013. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = I

013. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = I

மூலவர் : வெங்கடாசலபதி
அம்மன் / தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : அரசமரம்
வருடம் : 2002 வருடம்
ஊர் : அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா

திருவிழா : சித்திரை,வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக
கொண்டாடப்படும்.
ஆனி சித்திரை = சக்கரத்தாழ்வார்
ஆடிப்பூரம் = ஆண்டாள்
ஆடி சுவாதி = கருடாழ்வார்
ஆவணி மாதம் அஷ்டமி திதி = கோகுலாஷ்டமி
நவராத்திரி - புரட்டாசி - 10 நாட்கள்
திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை
மார்கழி = வைகுண்ட ஏகாதசி
பங்குனி நவமி = ராமநவமி
தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, தை பொங்கல் ஆகிய விசேச நாட்களில்
பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு.
மார்கழி மூலம் = அனுமத் ஜெயந்தி
திருவாதிரை = ராமானுஜர்
வாரத்தின் சனி கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும்
அதிகமாக இருக்கும்.

தல சிறப்பு : இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான அரசமரம் இருக்கிறது.
வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார்.
இவருக்கு படைக்கப் படும் பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய், நொடி எதுவும் வராது.
கோயில் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மருக்கு சன்னதி இருக்கிறது.
சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும்.
மனதில் தீய குணங்களுடன் இருப்பவர்கள் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் மன்னிப்பு பெறலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இவருக்கு பின்புறத்தில் எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார்.
இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் விசேஷமானது.
கோயில் பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு சன்னதி இருக்கிறது.
கோயில் பிரகாரத்தில் உள்ள தூணில் விஷ்ணு தசாவதாரம் இருக்கிறது.

விஷ்ணு தசாவதாரம்

001. மச்ச அவதாரம் – (மீன் - நீர் வாழ்வன)
002. கூர்ம அவதாரம் – (ஆமை - நீர் நில வாழ்வன)
003. வராக அவதாரம் – (பன்றி - நிலத்தில் வாழும் பாலூட்டி)
004. நரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து மனிதனாக மாறும் தன்மை)
004. நரசிம்ம அவதாரம் - (மனிதன் பாதி சிங்கம் பாதி)
005. வாமண அவதாரம் – (மனித தோற்றம்)
006. பரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)
007. இராம அவதாரம் – (குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)
008. பலராம அவதாரம் – (விவசாயம் செய்யும் மனிதன்)
009. கிருஷ்ண அவதாரம் – (கால்நடைகளை மேய்க்கும் மனிதன்)
010. கல்கி அவதாரம்

திறக்கும் நேரம் : காலை 06.00 மணி முதல் 11 மணி வரை,
மாலை 05.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
திருநெல்வேலி - 627007
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ்நாடு மாநிலம்
போன் : +91-

பொது தகவல் : கோலம் - நின்ற கோலம்.
லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம்.
தாமிரபரணி ஆற்றுக்கு தெற்கு நோக்கிய ஒரு ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது.
01. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
02. பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.
சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர்.
கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.
03. ஆடி சுவாதி கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை,மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
ஆடி சுவாதியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது.

பிரார்த்தனை : திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால்,
திருமணம் நிச்சயமாகும்.

வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.
தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் பிரிந்த தம்பதியினர் ஒன்று கூட, யோக நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும்.
எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட யோக நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து பானகம் படைத்து துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , குழந்தை பாக்கியம் வேண்டி ரோகிணி நட்சத்திரத்தில் வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
அனுமர்கள் வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல்

நேர்த்திக்கடன் : ஊதுபத்தி, சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம்.
பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

தானம் : அரிசி தானம் – பாவங்களைப் போக்கும்.
அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
அன்னதானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
எண்ணை தானம் – நோய் தீர்க்கும்.
ரோக நாசனம் , வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
கோ தானம் ( வெள்ளி OR பித்தளை பசுமாடு ) – பித்ருசாப நிவர்த்தி,தோஷங்கள் விலக
கோதுமை தானம் – ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகிய வற்றை அகற்றும்.
தட்சணை தானம் : காணிக்கை அளித்தல்.
தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்
தண்ணீர் பந்தல் : பானகமும் மோரும் தருதல்.
தீ தானம் : ஒளி, விளக்கு தருதல்.
தீப தானம் – கண்பார்வை தீர்க்கமாகும்.
தேங்காய் தானம் – நினைத்த காரியம், நிறைவேறும். கவலை அகலும்.
தேன் தானம் – சுகம்தரும் இனியகுரல் , புத்திர பாக்கியம் உண் டாகும்.
நெய் தானம் – நோய் தீர்க்கும். ரோக நாசனம் , வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
பால் தானம் – சவுபாக்கியம் பால் தானம் – துக்கம் நீங்கும்.
மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்
மணி தானம் : மணியோசைக்கு மணி தருதல்.
மாங்கல்ய தானம் : தாயாருக்கு மாங்கல்யம் செய்து தருதல்.
வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி , ஆயுளை வருத்தி செய்யும்
வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.
தான்யதானம் - தான்யங்களை தருதல்.
வாகன தானம் - திருவிழா வாகனம் தருதல்.
புத்தக தானம் - புத்தகங்கள் தருதல்.

தல வரலாறு : ஆண்டும் தோறும் மார்கழி மாதம் முப்பது நாட்கள் அரசு அலுவலர் 'அ' குடியிருப்பில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஆண்டாள் திருப்பாவை பக்தியுடன் பாடுவார் ஒரு பக்தன்.
ஸ்ரீகிருஷ்ணர் அவரிடம் எனக்கு தனியாக ஒரு கோயில் எழுப்புமாறு கூறினார்.
அதன்பின் அங்குள்ள பக்தரிடம் பேசி, திருமலை திருப்பதியிலிருந்து வெங்கடாசலபதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

012. ரத சப்தமி திருவிழா

012. ரத சப்தமி திருவிழா

ரத சப்தமி மகிமை : -

ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவன் யுவனவன்.
இந்த மன்னனுக்கு சந்ததி இல்லை.
அதனால் வருத்தப்பட்டு மகரிஷிகள் சொல்படி
புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான்.
அவர்கள் நீரை மந்திரித்து ஒரு கலசத்தில் பத்திரப்படுத்தி
மன்னனின் மனைவி குடிக்க வேண்டும் என்றார்கள்.
அந்தக் கலச நீர் யாகவேதியின் நடுவே இருந்தது.
அனைவரும் உறங்கி விட்டனர்.
ஆனால் அந்த இரவில் மன்னனுக்கு தாகம் எடுத்தது.
யாகவேதியின் நடுவே வைத்திருப்பது மகரிஷிகளால்
மந்திரித்து வைக்கப்பட்ட நீர் என்று தெரியாமல் மன்னன்
அதையெடுத்துக் குடித்து விட்டான்.
மன்னன் வயிற்றில் கரு வளர்ந்தது.
அந்தக் குழந்தை தன் கட்டை விரலால் மன்னனின்
வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தது.
அதனால் மன்னன் மாண்டு விட்டான்.
அழுத குழந்தைக்குப் பாலூட்ட இந்திரன் தன் பவித்திர
விரலை குழந்தையின் வாயில் வைக்க அதிலிருந்து
பெருகிய அமிர்தத்தைப் பருகி குழந்தை வளர்ந்தது.
இந்தக் குழந்தை ‘மாந்ததாதா’ என்ற பெயரில் உலைக
ஆட்சி புரிந்தது என்பது ஒரு வரலாறு.
சூரியனின் பிறந்த நாளை ரதசப்தமியாகக்
கொண்டாடுகின்றனர்.
“சூரிய ஜெயந்தி’ என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர்.
சப்தம் என்றால் ஏழு.
இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த
ஏழாம் நாளை, “சப்தமி திதி’ என்கிறோம்.
தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி.

(A) யாரல்லாம் வழிபடலாம் : -

(i) பிதுர் தோஷம்
(ii) சூரிய தோஷம் : -
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய
இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும்.
இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று
அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம்
நிவர்த்தியாகிறது.
(iii) கிழமை : ஞாயிறு
(iv) தேதிகள் : 1, 10, 19, 28
(v) நட்சத்திரம் : கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
(vi) தமிழ் மாதம் : சித்திரை, ஆவணி
(vii) மேஷத்தில் உச்சம்,
(viii) சிம்மத்தில் ஆட்சி
(ix) சூரிய திசை - புத்தி - அந்தரம் சூரியனின் ஆதிக்கத்தில்
பிறந்தவர்கள்

(B) ரதசப்தமி விரத முறை : -

(i) அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி
அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு.
இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது
சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.
(ii) ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள்,
கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை
ஊற்ற வேண்டும்.
தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி
மற்றும் அட்சதையும்,
ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும்,
ஆரோக்கியத்தையும் தரும்.
அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை
நமஸ்கரிக்க வேண்டும்.
அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும்.

© ரதசப்தமி விரத வழிபாடு : -

(i) ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க
வேண்டும்.
(ii) இளைஞர்கள் ரதசப்தமி நாளில் சூரியனுக்குரிய ஆயிரம்
பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும்.
(iii) பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு.
(iv) ரதசப்தமி நாளில் துவங்கி, தினமும் சூரியோதய
நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான்.
(v) கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம்
போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

(D) ரதசப்தமி விரத வழிபாடு கோயிலில் : -

(i) திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில்
(ii) ஸ்ரீரங்கம் கோவில்
(iii) கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை
சூரியனார் கோயிலில்
(iv) சென்னை அருகே கொளப்பாக்கம்
அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம்
சூரியனுக்குரிய ஸ்தலமாகும்.
(v) நவதிருப்பதி ஸ்தல பெயர் : ஸ்ரீவைகுண்டம்
அம்சம் : சூரியன்
மூலவர் :வைகுண்டநாதன்
உற்சவர் :கள்ளர்பிரான்
தாயார் : வைகுண்டனாயகி , சூரனந்த நாயகி
மார்க்கம் :திருநெல்வேலி திருசெந்தூர் சாலையில்
திருநெல்வேலியில் இருந்து 28 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது
(vi) திருநெல்வேலி : நெல்லை டவுன் கரியமாணிக்க
பெருமாள் கோயிலில்
ரத சப்தமியையொட்டி பெருமாள் ஒரே நாளில் 7 விதமான
அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
சூரிய பகவான் ரத சப்தமியன்று தன் கிரணங்களை (ஒளியை)
உத்திராயணத்தை(வடக்கு)நோக்கி செலுத்துகிறார்.
பெருமாளுக்கு திருமஞ்சனம்

(E) வழிபாடும் சூரிய துதி : -

சோம்பேறிதனம் விலக சூரிய துதி ’ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே ஸதா’ அதிகாலையில் குளித்து முடித்து விபூதி பூசி கிழக்கு முகமாக நின்ளு ஸ்ரீசூரிய பகவானை தியானித்து 9 முறை இம்மந்திரத்தை பாராயணம் செய்தால் வாழ்வில் சுறுசுறுப்பும், உற்சாகமும் பெருகும்.

சூரிய காயத்ரி மந்திரம்

‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’
அல்லது
‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’
என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம்.

(F) வழிபாடு பலன் : -

(i) இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(ii) இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
(iii) சூரியன், நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
(iv) சூரியன் வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர்.
(v) பெண்கள் ரதசப்தமி விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
(vi) கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை
மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள்.
(vii) ரதசப்தமி நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

011. சந்திரன் வழிபடும் முறை

011. சந்திரன் வழிபடும் முறை

வழிபடும் முறை

நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார்.
காலரா, நுரையீரல் நோய்கள் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க ஏழரை நாட்டுச் சனி ஜென்ம சனி, மகாசிவராத்திரி மார்கழி திருவாதிரை பங்குஉத்திரம், திருக்கார்த்திகை
ஸ்தல பெயர் : ஸ்ரீ வரகுணமங்கை ( நத்தம் )
அம்சம் : சந்திரன்
மூலவர் : விஜயாசானர் என்ற பரமபத நாதன்
உற்சவர் : எம்மிடர் கடிவான்
தாயார் : வரகுணமங்கை , வரகுணவல்லி
மார்க்கம் : ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
(i) விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும்.
(ii) வெண்மை வாய்ந்த அலரி மற்றும் அல்லி மலர்களால் இவரை அர்ச்சித்து பச்சரிசி நிவேதித்து நலம் பெறலாம்.
(iii) அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். சந்திரன் ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே அமிர்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் அமிர்தேசாய வித்மஹே ராத்ரிஞ்சராய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் சுதாகராய வித்மஹே மஹாஓஷதீஸாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் ஓம் ஆத்ரேயாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே நிதீச்வராய தீமஹி தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத் 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

010. சூரியன் வழிபடும் முறை

010. சூரியன் வழிபடும் முறை

வழிபடும் முறை

கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை
ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி,
அஷ்டம சனி ஆகியன உள்ளோரும்,
சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால்
நன்மை பயக்கும்.
சூரியன் வழிபட்டால் புகழ் கூடும்.
மங்களம் உண்டாகும்.
உடல் நலம் பெறும்.
ஸ்தல பெயர் : ஸ்ரீவைகுண்டம்
அம்சம் : சூரியன்
மூலவர் :வைகுண்டநாதன் உற்சவர் : கள்ளர்பிரான்
தாயார் : வைகுண்டனாயகி , சூரனந்த நாயகி

(i) விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி
சாற்றி, மஞ்சள் கட்டி... புதுமணத் தம்பதிகள் வழிபட்டால்,
சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும்.
(ii) சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து
கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம்.
(iii) 12 ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால்
செய்த உணவு அளிக்கலாம்.
தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.
மார்க்கம் :திருநெல்வேலி திருசெந்தூர் சாலையில் திருநெல்வேலியில்
இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

ஆதித்யன் (சூரியன்)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் லீலாலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 20 மார்ச், 2011

009. சூரிய வழிபாடு

009. சூரிய வழிபாடு

மேஷம் சூரியநாராயணனை வணங்கி வாருங்கள். 7 வாரம்.
மேஷம் ஞாயிற்றுக்கிழமையில் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுங்கள்.
ரிஷபம் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுங்கள்.
கடகம் ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லவும் அல்லது
கேட்கவும்.
தனுசு சூரியபகவானை வழிபட்டு வரவும். 7 வாரம்.
தனுசு ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாம் அல்லது
கேட்கலாம்
மகரம் ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லலாம் அல்லது
கேட்கலாம்.
மீனம் ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுங்கள்.

ஆதித்ய ஹ்ருதயம்

இது சாஸ்வதமானது; புனிதமானது; அழிவற்றது; எல்லா பாவங்களையும்
ஒழிக்க வல்லது; எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது;
மன குழப்பத்தையும், துன்பத்தையும், வேரோடு அறுக்க வல்லது; ஆயுளை
வளர்க்க வல்லது; பெறும் சிறப்பு வாய்ந்தது.

ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்

தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு

ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்

ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்

ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ரு
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்

சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:

பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:

ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:

வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:

ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:

நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே

நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:

ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:

நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:

தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே

நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:

ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்

வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:

ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ

பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு

அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்

ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்

ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்

ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி

என்று கூறிய அகஸ்திய மாமுனி கூறி இறுதியாக " இரகு குலத்தில்
உதித்தவனே!
சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான
நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய
காலங்களிலும். எந்த துன்பமும் ஏற்படுவதில்லை.
தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை
முணைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள்,
மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த
களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால்
அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும்.
பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலி பெற்றவருமான ஸ்ரீ ராமர்
சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவ€ணை
வென்ற இந்த மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம்
போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம்
என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 16 மார்ச், 2011

008. குரு வழிபாடு

008. குரு வழிபாடு

மேஷம் குரு வழிபாடு குதூகலம் தரும்.3 வாரம்.
மேஷம் அம்பாளை வழிபட்டு வரவும்.
ரிஷபம் குரு பகவானை வணங்கி வாருங்கள்.3 வாரம்.
மிதுனம் வியாழக்கிழமை குரு பகவானை வணங்கி ஸ்லோகங்கள் சொல்லுங்கள். 
கடகம் அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். 
கடகம் சக்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
கடகம் குரு பகவானுக்கு வியாழக்கிழமை அன்று நெய் விளக்கேற்றி
வழிபட்டால் வளர்ச்சி கிடைக்கும். 3 வாரம்.
கன்னி அம்பிகை வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.
கன்னி வியாழக்கிழமை குரு சந்நதியில் லட்டு விநியோகம் செய்யுங்கள்.
கன்னி வியாழக்கிழமை குரு கோயிலில் அர்ச்சனை செய்யுங்கள்.
கன்னி வியாழக்கிழமை குரு கோயிலில் கோதுமை தானம் செய்யுங்கள்.
விருச்சிகம் வியாழன் தோறும் நவகிரஹ குருபகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
தனுசு அம்மன், அம்பாள் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கித் தரலாம்.
தனுசு அம்பாள் தரிசனம் உகந்தது.
மகரம் அம்பாள் தரிசனம் உகந்தது.
கும்பம் அம்பாள் தரிசனம் உகந்தது. 
மீனம் வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து
9 ஏழைகளுக்கு தயிர் சாதம் அன்னதானமாக வழங்க செல்வம் சேரும்.
செயல்திறன் கூடும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

சில பெண் குழந்தைகள் இப்பொழூதெல்லாம் 10 வயது,
11வயதிலேயே ருதுவாகி விடுகின்றனர்.
ஆனால், சில பெண் குழந்தைகள் 18 வயதாகியும், 20 வயதாகியும்
ருதுவாகாமல் இருக்கின்றன.
ஒரு பெண் புஷ்பவதியனாள் தான் பெருமை.
தன் மகள் சடங்காகிவிட்டாள் என்பதை இந்த சமூகம்
உணர்ந்து கொள்ள வேண்டுமென்றே பூப்புனித நீராட்டு விழா
வினை பெற்றோர்கள் வைக்கிறார்கள்.

அவ்வாறு வயது கடந்தும் உடல்வாகு நன்றாக இருந்தும்
ருதுவாகாத பெண்கள் குரு வழிபாட்டை முறையாக
மேற்கொண்டால், ருதுவாகும் வாய்ப்பு கைகூடி வரும்.

நவராத்திரி காலத்தில் 9 நாளும் அம்பிகையைக்
கும்பிட்டுவிஜயதசமி முதல் தொடர்ந்து ஒரு மண்டலம்
[ 48 நாட்கள் ] அம்பிகையின் சந்நிதியில் ஜோடி தீபம்
ஏற்றினால், நாலு நாட்களிலும் ருதுவாகலாம்.
நாற்பத்தி எட்டாவது நாளிலும் ருதுவாகலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 1 மார்ச், 2011

007. குலதெய்வ தோஷம்

007. குலதெய்வ தோஷம்

குலதெய்வம் தெரியாதவர் அலலது குலதெய்வத்திற்கு அடிக்கடி போக
முடியாதவர்கள் சக்கரத்தாழ்வாரை ஒவ்வெரு சனிக்கிழமைகளில்
காலையில் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து அபிஷேகம் முடிந்ததும்
அர்ச்சனை செய்து 7 முறை வலம்வரவும்.
அப்படி செய்தால் குலதெய்வ தோஷம் நிவர்த்தி ஆகி திருமணம்,
குடும்ப பிரச்சனை, குழந்தை பேறு தடை நீங்கி நல்லதே நடக்கும்.

சக்கரத்தாழ்வார் வழிபாடு

எதிரிகளை வெல்ல

ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலாசகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

006. விநாயக‌ர் சுலோகம்

006. விநாயக‌ர் சுலோகம்

கும்பம் விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களை சொல்லுங்கள். 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம் செய்
துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

வினாயகனே வௌ;வினையை வேரறுக்க வல்லான்
வினாயகனே வேற்கை தணிவிப்பான்
வினாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லை போம் போகாத் துயரும் போம் நல்ல
குணம் அதிகமாம அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கை தொழுதற்க்கால்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

005. குலதெய்வம் பகுதி = I

005. குலதெய்வம் பகுதி = I

குலதெய்வ வழிபாடு ஏன்?

1. நமது குலதெய்வங்கள், அவர்களது குறிப்பிட்ட நல்ல
செய்கைகளுக்காகவும், குணங்களுக்காகவும் வழிபடப்படுபவை.
ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷம் இருப்பதை
காணலாம். 

2.வீரனார் போன்ற தெய்வங்கள் போரில் உயிர்நீத்த தெய்வங்கள்.
தியாகம் புரிந்தவர்களின் தியாக குணத்தையே நாம் இது போன்ற
வழிபாடுகளின் மூலம் வழிபட்டு அதே குணம் நம்மிடையே
அதிகரித்து நாளடைவில் கடவுளிடம் மிகவும் நெருங்கிவிடுகிறோம். 

3. முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள், தெய்வ சம்பத்து உடைய
பெரியோர்கள்.
அவர்கள் கடவுளை நோக்கி தவம் புரிந்தவர்கள், அந்த நிலையில்
இறந்தவர்கள்.
இது போன்ற தெய்வங்களை வழிபடும்போது நம்மிடையேயும் கடவுளை
அடைய விரும்பும் குணம் பலப்படுகிறது. 

4. இதெல்லாம் புரியாமலே கூட நாம் வழிபடுவதுண்டு - வேலைக்காக,
திருமணம் நடக்க, வழக்கு தீர - இப்படி பலப்பல சொந்த, குடும்ப
நலன்களுக்காக நாம் குலதெய்வத்தை கும்பிட்டு வேண்டுகிறோம்.
ஆயினும் இப்படிப்பட்ட குலதெய்வ வழிபாடுகள் நம்மை கடவுளை
நோக்கிய பாதையில் திருப்பும் மைல் கல்லாக இருக்கின்றன.
இந்த வழிபாட்டிலிருந்து துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக நாம்
எதிர்பார்ப்பில்லாத வகையில் கடவுளை வழிபடும் நிலையை
அடைகிறோம்.

5. இது போன்ற வழிபாடு அங்கே செய்வதையும் கவனிக்கலாம்.
ஏனென்றால், இதுவே இயல்பான இறை பாதை.

6. குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் புனிதமான ஒன்று, கடவுளை
நம்பிக்கையோடு பிரார்த்திக்க ஏதுவாக மனதை ஒருமுகப்படுத்தி,
செம்மையாக்குவது .

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 16 பிப்ரவரி, 2011

004. விநாயக‌ர் அகவல்

004. விநாயகர் அகவல்

மேஷம் விநாயகர் அகவல் சொல்லுங்கள்.
மிதுனம் விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வழிபட்டு அர்ச்சனை
அபிஷேகம் செய்யுங்கள்.
கடகம் விநாயகர் அகவல் சொல்லுங்கள்.
சிம்மம் விநாயகர் அகவலை தினமும் சொல்லுங்கள். 
விருச்சிகம் விநாயகர் அகவல் சொல்லுங்கள்.
தனுசு விநாயகர் அகவல் சொல்லுங்கள்.
கும்பம் விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வழிபட்டு அர்ச்சனை,
அபிஷேகம் செய்யுங்கள்.
கும்பம் விநாயகர் அகவல் பாராயணம் செய்யலாம்.
மீனம் தினசரி விநாயகர் அகவல் படிக்கலாம்.

எழுதியவர்: ஔவையார்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

``ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே''

அதாவது விநாயகரை மனமுருக வேண்டி
வழிபடுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும்
அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும்
என்பதையே இது உணர்த்துகிறது.

விநாயகரை வழிபடுவோருக்கு வினைகள் ஏதும் வராது.
ஐந்து கரத்தானை வணங்குவோருக்கு ஞானம் பெருகி,
நலம் பல பெருகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

003. விநாயகரு‌‌க்கு கொழு‌க்க‌ட்டை

003. விநாயகரு‌‌க்கு கொழு‌க்க‌ட்டை

கடகம் விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்யம் செய்து வணங்கவும்.

விநாயகரு‌‌க்கு ரொ‌ம்பவு‌ம் ‌பிடி‌த்தமான மோதக‌த்தை‌த் தயா‌‌ர்
ப‌ண்‌ணி‌க் கொ‌ள்ளலா‌‌ம்.
அதாவது தே‌ங்கா‌ய் பூ‌ரண‌த்தை உ‌ள்ளே வை‌த்து
செ‌ய்ய‌ப்படும் கொழு‌க்க‌ட்டை.
இ‌திலு‌ம் ஒரு த‌த்துவ‌ம் இரு‌க்‌கிறது.
மேலே இரு‌க்கு‌ம் மாவு‌ப் பொரு‌ள்தா‌ன் அ‌ண்ட‌ம்.
உ‌ள்ளே இரு‌க்கு‌ம் வெ‌‌ல்ல‌ப் பூ‌‌ரண‌‌ம்தா‌ன் ‌பிர‌ம்ம‌ம்.

அதாவது நம‌க்கு‌ள் இரு‌க்கு‌‌ம் இ‌‌னிய குண‌ங்களை மாயை
மறை‌க்‌கிறது.
இ‌ந்த மாயையை உடை‌த்தா‌ல் அதாவது வெ‌ள்ளை மாவு‌ப்
பொருளை உடை‌த்தா‌ல், உ‌ள்ளே இ‌னிய
குணமான வெ‌ல்ல‌ப் பூ‌ரண‌ம் நம‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம்
(விநாயகரு‌க்கு முத‌ன் முறையாக இ‌ந்த‌க் கொழு‌க்க‌ட்டையை ‌
நிவேதன‌ம் செ‌ய்தது வ‌சி‌ஷ்‌ட மு‌னிவருடைய
மனை‌வியான அரு‌ந்த‌தி).

பி‌ள்ளையாரு‌க்கு கொழு‌க்க‌ட்டை ம‌ட்டு‌மி‌ல்லாம‌ல்,
அவரவ‌ர் வச‌தி‌‌க்கே‌ற்ப எ‌ள்ளுரு‌ண்டை, பாயச‌ம் எ‌ன்று‌ம்
நைவே‌த்ய‌ம் செ‌ய்யலா‌‌ம்.
பா‌ல், தே‌ன், வெ‌ல்ல‌ம், மு‌ந்‌தி‌‌ரி, அவ‌ல் என்று ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌
சி‌றிதளவு எடு‌த்து ஒ‌ன்றாக‌க் கல‌ந்து அதையு‌ம் நைவே‌த்ய‌ம் செ‌ய்யலா‌ம்.
நிவேதன‌ப் பொரு‌ட்க‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் 21 எ‌ன்ற
கண‌க்‌கி‌ல் ‌சில‌ர் வை‌ப்பா‌ர்க‌ள்.
ஆனா‌ல், எ‌ண்‌ணி‌க்கை மு‌க்‌கிய‌மி‌ல்லை.
அவரவ‌ர் ஈடுபாடுதா‌ன் மு‌க்‌கிய‌ம். ‌
பிறகு க‌ற்பூர‌ம் கா‌ட்டி ‌விர‌த‌த்தை முடி‌க்கலா‌ம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

002. விநாயகரை வழிபடுதல்

002. விநாயகரை வழிபடுதல்

விநாயகர் சிலை முன்பு மிகவும் பணிவுடன் உடலை
சாய்த்து நின்று முதலில் வலக்கையால் நெற்றியின் இரு
பொட்டுகளிலும் குட்டிக் கொள்ள வேண்டும்.
வலது கையால் இடப்பக்கத்திலும், இடது கையால்
வலப்பக்கத்திலும் மூன்று முறை குட்டி ,காதுகளைப்
பிடித்து தோப்புக்கரணம் போட வேண்டும்.
தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளும் அவ்வாறே
நொறுங்க வேண்டுமென அவரிடம் பணிவாகக் கேட்க
வேண்டும்.
அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கித் திரும்ப
வேண்டும்.
விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும்.

தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?

அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை
காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார்.
பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து
நின்றார்.
கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.
அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை
உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார்.
அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்
கொண்டார்.
அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம்
வந்தது.

கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி
தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான்.
விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார்.
அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு
பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர்.
அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும்
துவங்கியது.

தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?

மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த
விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார்.
ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத்
தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு
சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது
வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.
எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை
உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு.
தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன்
மூலம் தகர்த்தார்.
அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும்
ஏற்பட்டது.
சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

விநாயகருக்கு தேங்காய் மாலை

விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வணங்கி
வந்தால் திருமண தடைகள் அகழும்.
[5 OR 7 OR 9 OR 11 தேங்காய்]

அருகம்புல் மாலை ஏன்?

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி
வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித்
தகித்து விடுவான்.
இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.
அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர்.
சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி
கட்டளையிட்டார்.
விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார்.
அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான்.
விநாயகர் அனலாசுரனுடன் மோதினார்.
ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.
கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான்.
விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.
அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர்
அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின்
தலை மேல் வைத்தார்.
அவரது எரிச்சல் அடங்கியது.
அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.
அன்று முதல் தன்னை
அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர்
கட்டளையிட்டார்.

கேது

விநாயகரை வழிபட்டால் வந்தால் கேதுவால் ஏற்பட்ட
திருமண தடைகள் அகழும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.