சனி, 21 செப்டம்பர், 2013

013. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = I

013. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = I

மூலவர் : வெங்கடாசலபதி
அம்மன் / தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : அரசமரம்
வருடம் : 2002 வருடம்
ஊர் : அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா

திருவிழா : சித்திரை,வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக
கொண்டாடப்படும்.
ஆனி சித்திரை = சக்கரத்தாழ்வார்
ஆடிப்பூரம் = ஆண்டாள்
ஆடி சுவாதி = கருடாழ்வார்
ஆவணி மாதம் அஷ்டமி திதி = கோகுலாஷ்டமி
நவராத்திரி - புரட்டாசி - 10 நாட்கள்
திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை
மார்கழி = வைகுண்ட ஏகாதசி
பங்குனி நவமி = ராமநவமி
தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, தை பொங்கல் ஆகிய விசேச நாட்களில்
பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு.
மார்கழி மூலம் = அனுமத் ஜெயந்தி
திருவாதிரை = ராமானுஜர்
வாரத்தின் சனி கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும்
அதிகமாக இருக்கும்.

தல சிறப்பு : இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான அரசமரம் இருக்கிறது.
வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார்.
இவருக்கு படைக்கப் படும் பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய், நொடி எதுவும் வராது.
கோயில் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மருக்கு சன்னதி இருக்கிறது.
சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும்.
மனதில் தீய குணங்களுடன் இருப்பவர்கள் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் மன்னிப்பு பெறலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இவருக்கு பின்புறத்தில் எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார்.
இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் விசேஷமானது.
கோயில் பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு சன்னதி இருக்கிறது.
கோயில் பிரகாரத்தில் உள்ள தூணில் விஷ்ணு தசாவதாரம் இருக்கிறது.

விஷ்ணு தசாவதாரம்

001. மச்ச அவதாரம் – (மீன் - நீர் வாழ்வன)
002. கூர்ம அவதாரம் – (ஆமை - நீர் நில வாழ்வன)
003. வராக அவதாரம் – (பன்றி - நிலத்தில் வாழும் பாலூட்டி)
004. நரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து மனிதனாக மாறும் தன்மை)
004. நரசிம்ம அவதாரம் - (மனிதன் பாதி சிங்கம் பாதி)
005. வாமண அவதாரம் – (மனித தோற்றம்)
006. பரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)
007. இராம அவதாரம் – (குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)
008. பலராம அவதாரம் – (விவசாயம் செய்யும் மனிதன்)
009. கிருஷ்ண அவதாரம் – (கால்நடைகளை மேய்க்கும் மனிதன்)
010. கல்கி அவதாரம்

திறக்கும் நேரம் : காலை 06.00 மணி முதல் 11 மணி வரை,
மாலை 05.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
திருநெல்வேலி - 627007
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ்நாடு மாநிலம்
போன் : +91-

பொது தகவல் : கோலம் - நின்ற கோலம்.
லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம்.
தாமிரபரணி ஆற்றுக்கு தெற்கு நோக்கிய ஒரு ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது.
01. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
02. பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.
சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர்.
கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.
03. ஆடி சுவாதி கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை,மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
ஆடி சுவாதியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது.

பிரார்த்தனை : திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால்,
திருமணம் நிச்சயமாகும்.

வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.
தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் பிரிந்த தம்பதியினர் ஒன்று கூட, யோக நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும்.
எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட யோக நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து பானகம் படைத்து துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , குழந்தை பாக்கியம் வேண்டி ரோகிணி நட்சத்திரத்தில் வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
அனுமர்கள் வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல்

நேர்த்திக்கடன் : ஊதுபத்தி, சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம்.
பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

தானம் : அரிசி தானம் – பாவங்களைப் போக்கும்.
அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
அன்னதானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
எண்ணை தானம் – நோய் தீர்க்கும்.
ரோக நாசனம் , வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
கோ தானம் ( வெள்ளி OR பித்தளை பசுமாடு ) – பித்ருசாப நிவர்த்தி,தோஷங்கள் விலக
கோதுமை தானம் – ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகிய வற்றை அகற்றும்.
தட்சணை தானம் : காணிக்கை அளித்தல்.
தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்
தண்ணீர் பந்தல் : பானகமும் மோரும் தருதல்.
தீ தானம் : ஒளி, விளக்கு தருதல்.
தீப தானம் – கண்பார்வை தீர்க்கமாகும்.
தேங்காய் தானம் – நினைத்த காரியம், நிறைவேறும். கவலை அகலும்.
தேன் தானம் – சுகம்தரும் இனியகுரல் , புத்திர பாக்கியம் உண் டாகும்.
நெய் தானம் – நோய் தீர்க்கும். ரோக நாசனம் , வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
பால் தானம் – சவுபாக்கியம் பால் தானம் – துக்கம் நீங்கும்.
மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்
மணி தானம் : மணியோசைக்கு மணி தருதல்.
மாங்கல்ய தானம் : தாயாருக்கு மாங்கல்யம் செய்து தருதல்.
வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி , ஆயுளை வருத்தி செய்யும்
வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.
தான்யதானம் - தான்யங்களை தருதல்.
வாகன தானம் - திருவிழா வாகனம் தருதல்.
புத்தக தானம் - புத்தகங்கள் தருதல்.

தல வரலாறு : ஆண்டும் தோறும் மார்கழி மாதம் முப்பது நாட்கள் அரசு அலுவலர் 'அ' குடியிருப்பில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஆண்டாள் திருப்பாவை பக்தியுடன் பாடுவார் ஒரு பக்தன்.
ஸ்ரீகிருஷ்ணர் அவரிடம் எனக்கு தனியாக ஒரு கோயில் எழுப்புமாறு கூறினார்.
அதன்பின் அங்குள்ள பக்தரிடம் பேசி, திருமலை திருப்பதியிலிருந்து வெங்கடாசலபதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: