003. விநாயகருக்கு கொழுக்கட்டை
கடகம் விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்யம் செய்து வணங்கவும்.
விநாயகருக்கு ரொம்பவும் பிடித்தமான மோதகத்தைத் தயார்
பண்ணிக் கொள்ளலாம்.
அதாவது தேங்காய் பூரணத்தை உள்ளே வைத்து
செய்யப்படும் கொழுக்கட்டை.
இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது.
மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.
உள்ளே இருக்கும் வெல்லப் பூரணம்தான் பிரம்மம்.
அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை
மறைக்கிறது.
இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப்
பொருளை உடைத்தால், உள்ளே இனிய
குணமான வெல்லப் பூரணம் நமக்குக் கிடைக்கும்
(விநாயகருக்கு முதன் முறையாக இந்தக் கொழுக்கட்டையை
நிவேதனம் செய்தது வசிஷ்ட முனிவருடைய
மனைவியான அருந்ததி).
பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல்,
அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம் என்றும்
நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும்
சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.
நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற
கணக்கில் சிலர் வைப்பார்கள்.
ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை.
அவரவர் ஈடுபாடுதான் முக்கியம்.
பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக