002. விநாயகரை வழிபடுதல்
விநாயகர் சிலை முன்பு மிகவும் பணிவுடன் உடலை
சாய்த்து நின்று முதலில் வலக்கையால் நெற்றியின் இரு
பொட்டுகளிலும் குட்டிக் கொள்ள வேண்டும்.
வலது கையால் இடப்பக்கத்திலும், இடது கையால்
வலப்பக்கத்திலும் மூன்று முறை குட்டி ,காதுகளைப்
பிடித்து தோப்புக்கரணம் போட வேண்டும்.
தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளும் அவ்வாறே
நொறுங்க வேண்டுமென அவரிடம் பணிவாகக் கேட்க
வேண்டும்.
அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கித் திரும்ப
வேண்டும்.
விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும்.
தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?
அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை
காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார்.
பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து
நின்றார்.
கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.
அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை
உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார்.
அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்
கொண்டார்.
அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம்
வந்தது.
கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி
தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான்.
விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார்.
அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு
பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர்.
அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும்
துவங்கியது.
தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?
மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த
விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார்.
ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத்
தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு
சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது
வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.
எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை
உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு.
தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன்
மூலம் தகர்த்தார்.
அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும்
ஏற்பட்டது.
சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.
விநாயகருக்கு தேங்காய் மாலை
விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வணங்கி
வந்தால் திருமண தடைகள் அகழும்.
[5 OR 7 OR 9 OR 11 தேங்காய்]
அருகம்புல் மாலை ஏன்?
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி
வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித்
தகித்து விடுவான்.
இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.
அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர்.
சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி
கட்டளையிட்டார்.
விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார்.
அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான்.
விநாயகர் அனலாசுரனுடன் மோதினார்.
ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.
கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.
வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான்.
விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.
அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர்
அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின்
தலை மேல் வைத்தார்.
அவரது எரிச்சல் அடங்கியது.
அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.
அன்று முதல் தன்னை
அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர்
கட்டளையிட்டார்.
கேது
விநாயகரை வழிபட்டால் வந்தால் கேதுவால் ஏற்பட்ட
திருமண தடைகள் அகழும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக