வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

012. ரத சப்தமி திருவிழா

012. ரத சப்தமி திருவிழா

ரத சப்தமி மகிமை : -

ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவன் யுவனவன்.
இந்த மன்னனுக்கு சந்ததி இல்லை.
அதனால் வருத்தப்பட்டு மகரிஷிகள் சொல்படி
புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான்.
அவர்கள் நீரை மந்திரித்து ஒரு கலசத்தில் பத்திரப்படுத்தி
மன்னனின் மனைவி குடிக்க வேண்டும் என்றார்கள்.
அந்தக் கலச நீர் யாகவேதியின் நடுவே இருந்தது.
அனைவரும் உறங்கி விட்டனர்.
ஆனால் அந்த இரவில் மன்னனுக்கு தாகம் எடுத்தது.
யாகவேதியின் நடுவே வைத்திருப்பது மகரிஷிகளால்
மந்திரித்து வைக்கப்பட்ட நீர் என்று தெரியாமல் மன்னன்
அதையெடுத்துக் குடித்து விட்டான்.
மன்னன் வயிற்றில் கரு வளர்ந்தது.
அந்தக் குழந்தை தன் கட்டை விரலால் மன்னனின்
வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தது.
அதனால் மன்னன் மாண்டு விட்டான்.
அழுத குழந்தைக்குப் பாலூட்ட இந்திரன் தன் பவித்திர
விரலை குழந்தையின் வாயில் வைக்க அதிலிருந்து
பெருகிய அமிர்தத்தைப் பருகி குழந்தை வளர்ந்தது.
இந்தக் குழந்தை ‘மாந்ததாதா’ என்ற பெயரில் உலைக
ஆட்சி புரிந்தது என்பது ஒரு வரலாறு.
சூரியனின் பிறந்த நாளை ரதசப்தமியாகக்
கொண்டாடுகின்றனர்.
“சூரிய ஜெயந்தி’ என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர்.
சப்தம் என்றால் ஏழு.
இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த
ஏழாம் நாளை, “சப்தமி திதி’ என்கிறோம்.
தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி.

(A) யாரல்லாம் வழிபடலாம் : -

(i) பிதுர் தோஷம்
(ii) சூரிய தோஷம் : -
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய
இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும்.
இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று
அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம்
நிவர்த்தியாகிறது.
(iii) கிழமை : ஞாயிறு
(iv) தேதிகள் : 1, 10, 19, 28
(v) நட்சத்திரம் : கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
(vi) தமிழ் மாதம் : சித்திரை, ஆவணி
(vii) மேஷத்தில் உச்சம்,
(viii) சிம்மத்தில் ஆட்சி
(ix) சூரிய திசை - புத்தி - அந்தரம் சூரியனின் ஆதிக்கத்தில்
பிறந்தவர்கள்

(B) ரதசப்தமி விரத முறை : -

(i) அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி
அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு.
இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது
சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.
(ii) ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள்,
கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை
ஊற்ற வேண்டும்.
தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி
மற்றும் அட்சதையும்,
ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும்,
ஆரோக்கியத்தையும் தரும்.
அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை
நமஸ்கரிக்க வேண்டும்.
அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும்.

© ரதசப்தமி விரத வழிபாடு : -

(i) ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க
வேண்டும்.
(ii) இளைஞர்கள் ரதசப்தமி நாளில் சூரியனுக்குரிய ஆயிரம்
பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும்.
(iii) பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு.
(iv) ரதசப்தமி நாளில் துவங்கி, தினமும் சூரியோதய
நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான்.
(v) கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம்
போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

(D) ரதசப்தமி விரத வழிபாடு கோயிலில் : -

(i) திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில்
(ii) ஸ்ரீரங்கம் கோவில்
(iii) கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை
சூரியனார் கோயிலில்
(iv) சென்னை அருகே கொளப்பாக்கம்
அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம்
சூரியனுக்குரிய ஸ்தலமாகும்.
(v) நவதிருப்பதி ஸ்தல பெயர் : ஸ்ரீவைகுண்டம்
அம்சம் : சூரியன்
மூலவர் :வைகுண்டநாதன்
உற்சவர் :கள்ளர்பிரான்
தாயார் : வைகுண்டனாயகி , சூரனந்த நாயகி
மார்க்கம் :திருநெல்வேலி திருசெந்தூர் சாலையில்
திருநெல்வேலியில் இருந்து 28 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது
(vi) திருநெல்வேலி : நெல்லை டவுன் கரியமாணிக்க
பெருமாள் கோயிலில்
ரத சப்தமியையொட்டி பெருமாள் ஒரே நாளில் 7 விதமான
அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
சூரிய பகவான் ரத சப்தமியன்று தன் கிரணங்களை (ஒளியை)
உத்திராயணத்தை(வடக்கு)நோக்கி செலுத்துகிறார்.
பெருமாளுக்கு திருமஞ்சனம்

(E) வழிபாடும் சூரிய துதி : -

சோம்பேறிதனம் விலக சூரிய துதி ’ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே ஸதா’ அதிகாலையில் குளித்து முடித்து விபூதி பூசி கிழக்கு முகமாக நின்ளு ஸ்ரீசூரிய பகவானை தியானித்து 9 முறை இம்மந்திரத்தை பாராயணம் செய்தால் வாழ்வில் சுறுசுறுப்பும், உற்சாகமும் பெருகும்.

சூரிய காயத்ரி மந்திரம்

‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’
அல்லது
‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’
என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம்.

(F) வழிபாடு பலன் : -

(i) இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(ii) இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
(iii) சூரியன், நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
(iv) சூரியன் வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர்.
(v) பெண்கள் ரதசப்தமி விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
(vi) கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை
மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள்.
(vii) ரதசப்தமி நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: