செவ்வாய், 1 மார்ச், 2011

005. குலதெய்வம் பகுதி = I

005. குலதெய்வம் பகுதி = I

குலதெய்வ வழிபாடு ஏன்?

1. நமது குலதெய்வங்கள், அவர்களது குறிப்பிட்ட நல்ல
செய்கைகளுக்காகவும், குணங்களுக்காகவும் வழிபடப்படுபவை.
ஒவ்வொரு தெய்வத்திடமும் ஒவ்வொரு விசேஷம் இருப்பதை
காணலாம். 

2.வீரனார் போன்ற தெய்வங்கள் போரில் உயிர்நீத்த தெய்வங்கள்.
தியாகம் புரிந்தவர்களின் தியாக குணத்தையே நாம் இது போன்ற
வழிபாடுகளின் மூலம் வழிபட்டு அதே குணம் நம்மிடையே
அதிகரித்து நாளடைவில் கடவுளிடம் மிகவும் நெருங்கிவிடுகிறோம். 

3. முனீஸ்வரன் போன்ற தெய்வங்கள், தெய்வ சம்பத்து உடைய
பெரியோர்கள்.
அவர்கள் கடவுளை நோக்கி தவம் புரிந்தவர்கள், அந்த நிலையில்
இறந்தவர்கள்.
இது போன்ற தெய்வங்களை வழிபடும்போது நம்மிடையேயும் கடவுளை
அடைய விரும்பும் குணம் பலப்படுகிறது. 

4. இதெல்லாம் புரியாமலே கூட நாம் வழிபடுவதுண்டு - வேலைக்காக,
திருமணம் நடக்க, வழக்கு தீர - இப்படி பலப்பல சொந்த, குடும்ப
நலன்களுக்காக நாம் குலதெய்வத்தை கும்பிட்டு வேண்டுகிறோம்.
ஆயினும் இப்படிப்பட்ட குலதெய்வ வழிபாடுகள் நம்மை கடவுளை
நோக்கிய பாதையில் திருப்பும் மைல் கல்லாக இருக்கின்றன.
இந்த வழிபாட்டிலிருந்து துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக நாம்
எதிர்பார்ப்பில்லாத வகையில் கடவுளை வழிபடும் நிலையை
அடைகிறோம்.

5. இது போன்ற வழிபாடு அங்கே செய்வதையும் கவனிக்கலாம்.
ஏனென்றால், இதுவே இயல்பான இறை பாதை.

6. குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் புனிதமான ஒன்று, கடவுளை
நம்பிக்கையோடு பிரார்த்திக்க ஏதுவாக மனதை ஒருமுகப்படுத்தி,
செம்மையாக்குவது .

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: