நவராத்திரி கொலு பொம்மை எப்படி வைக்க வேண்டும்?
மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, நவராத்திரி விழாவாக கொண்டாடுகின்றோம்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக கொலு வைக்கப்பது வழக்கம்.
முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள்.
3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம்.
படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர்ந்தது என்றும், உலகில் உயிரினங்கள் எப்படி படிப்படியாக தோன்றியது. என்றும், மற்றொரு விளக்கமாக மனிதன் படிப்படியாக தன் கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலு படிகள் அமைகின்றன.
கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி, கொலு வைக்க நினைத்து சில காரணங்களால் வைக்க முடியாமல் போனவர்கள் என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
கொலு வைக்க முடியாதவர்கள், சாதாரணமாக நாம் வழிபடக்கூடிய தெய்வங்களுக்கு பூ அலங்காரங்கள் செய்து வழிபடுவதோடு, நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும், தினமும் ஒவ்வொரு தானியங்களை வேகவைத்து அதை நெய்வேத்தியம் அம்பாளுக்கு படைக்க வேண்டும்.
தாம்பூலம் ஏன் கொடுக்க வேண்டும்:
தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகின்றது. இதனால் நவராத்திரி தினத்தில் வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியாக, அன்பாக அனுப்புவதால், லெட்சுமியின் அருள் கிடைக்கும்.
நவராத்திரிக்கு யாருமே உங்கள் வீட்டுக்கு வரவில்லை என்றால் கூட ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்களே மாலை நேரத்தில் அம்பிகைக்கு பிடித்த மலர்களை சூடி, நெய்வேத்தியம் படைத்து, அம்பாளுக்கு உகந்த போற்றி பாடலை பாடி வழிபடுவது உகந்தது
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக