அருகம்புல் வழிபாடு
முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமானை வணங்கி, அவரை
அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபடும் முறை
இரண்டு தீபங்களை ஏற்றி, பக்கத்தில் நிறுத்தி, கலசம் முன்பு விநாயகரை வைக்கவும்.
பூஜைக்குத் தேவையான 21 அருகம்புல்லைத் தனியாக வைத்திருக்கவும்.
மூன்று வகை மலர்களோடு கொழுக்கட்டை, தேங்காய், தாம்பூலம், கற்பூரம், ஊதுவத்தி,
சாம்பிராணியையும் முடிந்த அளவு அதிகமான பழ வகைகளையும் பூஜையில் வைக்கலாம்.
முதலில் அன்றைய நாள், நட்சத்திரம் சொல்லி, மஞ்சள் விநாயகரை பூஜை செய்யுங்கள்.
கைகளில் மலர் எடுத்து கண்கள் மூடி மனமுருகி…
பிறகு, இரு பழங்கள், வெற்றிலைப் பாக்கை வைத்து தூப தீபம் காட்டி, மங்கல ஆரத்தி
செய்ய வேண்டும்.
பிறகு ஊதுவத்தி, தீபம் காட்டி, நிவேதனப் பொருட்களைப் படைக்கவும்.
கைகளில் மலர் எடுத்து, தன்னையே மும்முறை சுற்றி ஆத்ம பிரதட்சிணம் செய்துகொண்டு,
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்.
தொடர்ந்து, பூஜைக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நிவேதனப் பொருட்களைப்
பிரசாதமாகக் கொடுத்துவிட்டு, நீங்களும் எடுத்துக் கொள்ளவும்.
பூஜையின் பலன்: ராகு-கேது தோஷம், காரியத்தடைகள் நீங்கும்;
குழந்தை பாக்கியம் கிட்டும்.
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
திங்கள்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக