கார்த்திகை தீபம்
27 தீபங்கள் = நட்சத்திரங்களைக் குறிக்கும்.
வீடு முற்றம், சமையலறை, திண்ணை, மாடம், பூஜையறை, குப்பைக் குழி, ஆடு மற்றும் மாட்டுப் பட்டி, கொல்லைப்புறம் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பு மிக்கது.
தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்
• கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.
• பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.
• சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
• தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்
• திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.
• மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.
தீபத்தின் வகைகள்
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
சித்ர தீபம்
வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.
மாலா தீபம்
அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.
ஜல தீபம்
தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.
படகு தீபம்
கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.
சர்வ தீபம்
வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.
சர்வாலய தீபம்
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.
லட்ச தீபம்
ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.
மாவிளக்கு தீபம்
அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.
சூரியனுக்கான நட்சத்திரங்கள் உத்திரம், கிருத்திகை, உத்திராடம். ஞாயிற்றுக்கிழமை கோதுமை மீது 10 தீபம் ஏற்றி வழிபட சூரியனின் அருளைப் பெறலாம். சூரியனின் தசா புத்தி காலம்- 6 ஆண்டுகள்
சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், சித்திரை. சந்திரனின் தோஷம் நீங்க, திங்கட்கிழமை அம்பாள் சன்னிதி முன்பு நெல் மீது 11 தீபம் ஏற்றுங்கள். சந்திரனின் தசா புத்தி காலம்- 10 ஆண்டுகள்
குருவின் தோஷம் விலக, குருவின் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. வியாழக்கிழமை நல்லெண்ணெய் தீபம் 2 தேங்காய் எண்ணெய் தீபம் 2 நெய் தீபம் 2 மஞ்சள் வெள்ளை சிவப்பு திரி தசாபுத்தி காலம் 16 ஆண்டுகள்
கல்கண்டு தீபம்
மஞ்சள்... குங்குமம் தீபம்
அட்சதை தீபம்
கஜலட்சுமி தீபம்
நாணய தீபம்
108 தானியக் கதிர் நாணயங்கள் மீது தீபம் ஏற்ற வேண்டும் வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
கும்ப தீபம் Kumbha Deepam
இந்த கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிப்பதால் தீபாராதனையின் இறுதியில் இறைவனுக்கு காட்டப்பெறுகிறது.
ரதசப்தமி கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் மாசி மாதம் கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது தீபம் ஏற்றலாம்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக