ஞாயிறு, 25 நவம்பர், 2018

0158. ஆத்யந்த பிரபு

0158. ஆத்யந்த பிரபு விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். ஆதி' என்றால் முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது’ என்பார்கள். அதற்கு ‘மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது’ என்று பொருள். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்! மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

சனி, 24 நவம்பர், 2018

0157. தத்தாத்ரேயர் வழிபாடு

0157. தத்தாத்ரேயர் வழிபாடு

நித்ய சஞ்சீவிகளில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர்.
பூவுலகில் சகல உயிர்களும் ஞானத்தோடு வாழவேண்டும் என்று எண்ணிய மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து குருவாக உருவம் பெற்று வந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் தத்தாத்ரேயர்.
மார்கழி மாதம் பெளர்ணமி நாளில், மிருகசீரிட நட்சத்திரத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா மூவரையும் உள்ளடக்கிய தத்தாத்ரேயர்.
இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர்.

இவரது 'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனஅமைதி உண்டாக, திருஷ்டி, தீவினைகள் விலக ஜெபிக்கப்பட்டு வருகிறது.

செல்வவளம் உண்டாக, பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலக இந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-

1.நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

2.பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||

Shri Dattatreya Shanti Mantras: -

1.Imasthe Lord Dattatreya Jagatthae |
Sarva Badha Chiramangam Guru Shanti Prayach May

2.Butta Pathacha Yasya Smarana Mathrathah |
Duradeva Balayante Dattatreya Namasamtham ||
Prechchi Manchu Hoom Image Svaha ||

குடும்பத்தில் அமைதி, மனநிம்மதி உண்டாகும்.
செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில்
புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.

தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.

புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 21 நவம்பர், 2018

0155. நித்ய பஞ்சாயதன பூஜை

0155. நித்ய பஞ்சாயதன பூஜை

ஒவ்வொருவரும் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான கர்மாக்களில் தேவதா ஆராதனை ஒன்று, அதிலும் முக்கியமானது ஸ்ரீ பஞ்சாயதன பூஜை.

விநாயகர்,சூரியன், அம்பிகை, விஷ்ணு, ஈசுவரன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் தினமும் இதற்குரிய மந்திரத்தை உச்சரித்து பூஜித்து வந்தால் சிறப்பான மேன்மை அடையலாம்.
அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.

இந்துக்கள் வீடுகளில், நதியிலிருந்து எடுக்கப்பட்ட விஷேஷ கற்களை வைத்து செய்யப் படும் பூஜை இது.

I. விநாயகருக்கு பீஹாரில் சோனபத்ராவில் உருவான சோணபத்ரக் கல் சிவப்பு நிறக் கல் , கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் கிடைக்கிறது.

II. சூரியனுக்குரிய சூரியாகாந்தக் கல் ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது.

III. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது.
அது தங்க ரேக் ஓடிய கல்.

IV. விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைக்கும்.

V. ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது.

ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார்.
எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.

தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்கவும், செல்வம் தழைத்தோங்கவும் உதவுகிறது நித்ய பஞ்சாயதன பூஜை.
இதனை நீங்கள் தினமும் செய்து வந்தால் உயர்ந்த பொருளாதாரம் நிலைத்து நிற்கும்.
இந்த நித்ய பஞ்சாயதன பூஜைகள் செய்வதால் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
நிம்மதியான வாழ்வும், செழிப்பான பொருளாதாரமும் கிட்டுகிறது.

சனி, 17 நவம்பர், 2018

0152. மேகலா வீட்டின் ஸ்ரீ சக்கரம் வழிபாடு 12/11/2018

0151. மேகலா வீட்டின் நவராத்திரியில் அகண்ட தீபம் வழிபாடு 09/10/2018

0150.மேகலா வீட்டின் ஆடி மாசம் நான்காவது வெள்ளி தாமரை விதை & சங்கு பூஜை 10/08/...

0149. மேகலா வீட்டின் தீபாவளி அன்று இந்த பொருளை வாங்கவும் 06/11/2018

0148. மேகலா வீட்டின் எந்த வகையான விளக்கு ஏற்றலாம் ?

0147. மேகலா வீட்டின் ஆடி மாசம் மூன்றாவது வெள்ளி ரக்ட் குஞ்ஜா பூஜை 03/08/2018

0146. மேகலா வீட்டின் கிருஷ்ண ஜெயந்தி புஷ்ப யாகம் 02/09/2018

0145. மேகலா வீட்டின் ஆனி மாதம் சனிக்கிழமை அனுமன் தைல காப்பு 16/06/2018

0144. மேகலா வீட்டின் பூஜை அறை ஏற்பாடு வீடியோ

0143. மேகலா வீட்டின் ஐப்பசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை பஞ்ச லட்சுமியில் நாண...

0141. மேகலா வீட்டின் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை திருப்பதி வெங்கடாசலபதி ,...

0140. மேகலா வீட்டின் பூஜை அறை அமைத்தல்

0139. மேகலா வீட்டின் தீபாவளி அன்று காலை லஷ்மி குபேர் நாணயங்கள் வழிபாடு 06/11/2018

0138. மேகலா வீட்டின் ஆடி மாசம் இரண்டாவது வெள்ளி லக்ஷ்மி கௌடி பூஜை 27/07/2018

0137. மேகலா வீட்டின் பூஜை அறை ஏற்பாடு வீடியோ

0136. மேகலா வீட்டின் சாளக்கிராமம்

0135. மேகலா வீட்டின் தினமும் எற்றபடும் தீபம்

0133. மேகலா வீட்டில் பூஜையறை ஏற்பாடு

0132. மேகலா வீட்டின் ஐப்பசி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை லஷ்மி குபேர் நாணயங்க...

0131. மேகலா வீட்டின் தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்று...

030. மேகலா வீட்டின் ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கதிர் போட்ட நாணய வழிபாடு...

0129. மேகலா வீட்டின் சங்கு தீபம்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

0128. துளசி கல்யாணம்

0128. துளசி கல்யாணம்

ஸ்ரீ துளசி தேவிக்கும் ஸ்ரீமான் நாராயணனுக்கும் (கிருஷ்ணனுக்கும்) கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர்.

கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசி அன்று நெல்லி மரத்தை துளசிச் செடிக்கருகே நடுவார்கள்.

துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின்,

கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம்.
வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும்.

"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி
நேச்வர பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத்
வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம்
துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'

என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும்.

துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

வெள்ளி, 9 நவம்பர், 2018

0127. கன்னன் - கண்ணன்

0127. கன்னன் - கண்ணன்

கன்னன் - கண்ணன்.
இரண்டும் இருவரது பெயர்கள்.
முன்னவன் கர்ணன், பின்னவன் கிருஷ்ணன்.
தமிழ் ஒலியமைப்பில் எழுத்து வடிவில் கர்ணன் கன்னன் எனவும், கிருஷ்ணன் கண்ணன் எனவும் ஆயினர்.
ஆக்கியவர் வில்லிபுத்தூரார்.
இப்படியாக்கிட வழியுரைத்தவர் தொல்காப்பியர்.

I. கர்ணனுக்கு மறு பெயர் கன்னன்?
"தோரோட்டியின் மகன்' என்று ஏசப்பட்டவன்.

II. கிருஷ்ணனுக்கு மறுபெயர் கண்ணன்?
பார்த்தனுக்குச் (அர்ச்சுனனுக்கு) சாரதியாகக் குதிரை ஓட்டி, எல்லாராலும் பூஜிக்கப்பட்டவன்.

வியாழன், 8 நவம்பர், 2018

0126. மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன,

0126. மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன

மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.

கீழ்நோக்கு நாள்: கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட் டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.

சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிரு கசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 7 நவம்பர், 2018

0125. பஞ்சாங்கம் படியுங்கள்

0125. பஞ்சாங்கம் படியுங்கள்

சித்திரை முதல் நாளன்று வீடுகளை சுத்தம் செய்து வாசல் படிகளுக்கு மஞ்சள் - குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்.
சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தூய ஆடைகளை அணிய வேண்டும்
பிறகு அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் இறைவனின் சந்நிதானத்தில் வைக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து விநாயகர், நவக்கிரகஙக்ள், குல தெய்வம் ஆகியவைகளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.
பின் பூஜையில் வைத்த பஞ்சாங்கத்தை எடுத்து அதில் உள்ள பலன்களைப் படிக்க வேண்டும்.
இன்றும் சில கிராமங்களில் வீட்டு திண்ணை பொது மண்டபங்களில் பெரியவர்கள் இத்திருநாளன்று அமர்ந்து பஞ்சாங்கம் படிக்க மற்றவர்கள் கேட்கும் வழக்கம் உள்ளது.

சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்.
விரதத்தைப் பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப் பற்றிச் சொன்னால், செல்லச் செழிப்பும் காரணத்தை பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும்.
அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும்.
யோகத்தைப் பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 3 நவம்பர், 2018

0124. ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல்

0124. ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல்

உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி
உன்பாதம் சரணடைந்தோம் அஷ்டலக்ஷ்மி
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலெக்ஷ்மி
கலையாவும் நிறைந்தவளே அஷ்டலக்ஷ்மி
நிலையான அருட்செல்வம் அருள்பவள் அவளே
உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே (உலகெங்கும்)

ஸ்ரீ லக்ஷ்மி

பாற்கடலில் தேவர் அமுதம் கடையும் போது
பாரெல்லாம் வியந்திட நாரணி உதித்தாள்
நாரணனும் தேவியை மார்பினில் தாங்கி நின்றார்
பூரணியும் பூவுலகைக் காக்க வந்தாள்
அவளே ஸ்ரீ லக்ஷ்மி தேவி லக்ஷ்மி

1. ஸ்ரீ ஆதிலக்ஷ்மி

இரு கண்கள் திருக்கரங்கள் கொண்டவள் அவளே
இகபரசுகம் யாவும் கொடுப்பவள் அவளே
அபயம் அளிப்பவளே ஆதிலக்ஷ்மி அவளே
ஆபரணம் அணிந்த ஒளிக்கதிர் ராணி அவளே
எழில் மலரத் தோரணங்கள் சூழ்பவள் அவளே
அழகிய தாமரைமேல் வாழ்பவள் அவளே
மஞ்சள் நிறஉடை தரித்து மலர்மாலை அணிந்தவளே
மங்களம் நிறைந்தவளே வல்லமை மிகுந்தவளே
ஆதிலக்ஷ்மி அன்னை ஆதிலக்ஷ்மி

2. ஸ்ரீ சந்தானலக்ஷ்மி

ஜடாமகுடம் அணிந்து காட்சி தந்தாள்
அன்னை இடுப்பினில் சுகுமாரனை ஏந்தி நின்றாள்
வீரம் மிகுந்த அபயக் கரங்கள் இரண்டிலே
பூரணக் கும்பமும் வைரக் கங்கணமும் விளங்க
அழகிய மாதரும் தீ பமும் தாங்கியே
எழில் வெண் சாமரம் வீசியிருக்க
முத்திழைத்த உரையோடு துலங்கும்
சக்தியோடு எழில் ராணியாக
சந்தானலக்ஷ்மி அவதரித்தாள்
அவள் சந்தான சௌபாக்கியம் தந்திடுவாள்

3. ஸ்ரீ கஜலக்ஷ்மி

பொன்னிறக் குடம் தாங்கி
வெண்ணிறயானை யிரண்டு
தன்னிரு துதிக் கையினால்
அபிஷேக நீர் கொண்டு
அன்னைக்கு நீராட்ட
அலங்கார தேவதையாய்
வெண்பட்டு புடவையுடன் காட்சி தந்தாள்
கரங்கள் நான்கும் உடையவளாம் கஜலக்ஷ்மி
திருக்கரத்தில் ஞானமுத்திரை உடையவளாம் கஜலக்ஷ்மி
இரவும் பகலும் துதிப்பவர்க்கே கஜலக்ஷ்மி
அரச போகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி

4. ஸ்ரீ தனலக்ஷ்மி

செல்வ திருமகளாம் மோகனவல்லி
எல்லோரும் கொண்டாடும் வேதவல்லி
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணிஸ்யாமாளை
வரத முத்திரை காட்டியே பொருள் செல்வம்
வழங்கிடும் அம்பிகை
மாமனோகர தேவி மார்பினில்
ஒற்றைவடப் பொன்னட்டிகை
சிரத்தினில் மணி மகுடமும்
தாங்கிடும் சிந்தாமணி - பல
வரங்கள் வழங்கிடும் ரமாமணி - அவள்
வரதராஜ சிகாமணி அவள்தான் தனலக்ஷ்மி

5. ஸ்ரீ தான்யலக்ஷ்மி

ஆற்றோரம் தன்னில் சுகாசனத்தில் அமர்ந்து
போற்று மன்பரைக் கண்டு மலர்ச்சியும் கொண்டுஎழில்
வாழை மரங்கள் மலர்தேன் பொழிந்து பூஜிக்க
ஆழ்கடல் அன்னையவள் காட்சி தந்தாள்
இடக்கை மேல்புறத்தில் செழுங்கரும்பை யேந்தி
இகத்தினில் நிலவளம் செழிக்க வந்தாள்
அவள்தான் தான்யலக்ஷ்மி! தான்யலக்ஷ்மி

6. ஸ்ரீ விஜயலக்ஷ்மி

சிங்கார முடிதனிலே அலங்காரக் கூந்தல்
செம்மேனியில் சிறந்த பொன்னாபரணங்கள்
அங்குச பாசமும் பல ஆயுதம் கையில் கொண்டு
செங்கோல் செலுத்தும் ராஜவடிவம் கொண்டாள்
அன்னையின் முகம் தன்னில் தவழ்ந்திடும்மந்தஹாசம்
அன்னைப் பறவை தாங்கும் அழகிய மலர்ப்பாதம்
அன்பரைக் காத்து நிற்கும் அவளது தாய்ப்பாசம்
துன்பங்கள் நேராமல் காத்திடும் அவள் நேசம்
விஜயலக்ஷ்மி தேவி விஜயலக்ஷ்மி !

7. ஸ்ரீ மகாலக்ஷ்மி

நிறைந்திடும் அழகோடு வளரும் பொன்மேனியாள்
அறம், பொருள், வீடு, இன்பம் தரும்
நான்கு கரம் கொண்டாள்
அழகிய மலர் கொண்டு யானைகள் வணங்கி நிற்க
எழிலாக காட்சி தந்தாள் எங்கள் தாய்
சௌபாக்கியம் தரும் தெய்வம் தேவி லக்ஷ்மி
அபயக்கரம் நீட்டி அணைக்கும் மகாலக்ஷ்மி !

8. ஸ்ரீ வீரலக்ஷ்மி

ஒன்பது பனைமரங்கள் அடுத்து நிற்க தேவி
சிம்மாசனத்தின்மேல் அமர்ந்திருக்க
வெற்றி எட்டு கைகளிலும் சூலம்
கபாலம் கொண்டாள்
நற்கதியும் நமக்கருள நானிலத்தில் அவதரித்தாள்
பொற்பதம் பணிந்தவர்க்கு பொன்னாவரம் தந்து
வெற்றியுடன் வாழவைப்பாள் வீரலக்ஷ்மி
வரவேண்டும் வரவேண்டும் அஷ்டலக்ஷ்மி
அருளைத் தரவேண்டும் தரவேண்டும் ஆதிலக்ஷ்மி
சந்ததியைத் தந்திடுவாய் சந்தான லக்ஷ்மி
எண்ணும் பல யோகங்கள் தருவாயே கஜலக்ஷ்மி
தனம் பெருக மனமும் மகிழ காண்பாராய் தனலக்ஷ்மி
மனம் குளிர நிலம் செழிக்க நீயருள்வாய் தான்யலக்ஷ்மி
கலைகளில் வெற்றிதனைக் காண அருள் விஜயலக்ஷ்மி
சகல சௌபாக்கியம் தந்திடு மகாலக்ஷ்மி
உலகெங்கும் வீரத்தை நீயருள்வாய் வீரலக்ஷ்மி
உன்நாமம் சொல்பவர்க்கு அருள்புரிவாய் அஷ்டலக்ஷ்மி

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 2 நவம்பர், 2018

0123. சாளக்கிராம வழிபாடு

0123. சாளக்கிராம வழிபாடு

கல்லிலும் புல்லிலும் தூணிலும் துரும்பிலும் கடவுளைக் கண்டவர்கள் நம் முன்னோர்கள்.
அதன்படி சாளக்கிராம ஸ்படிக கற்களாக வடிவம் கொண்ட மகாவிஷ்ணுவை வழிபடுவது காலம் காலமாக பல குடும்பங்களில் இருந்து வரும் ஒரு பழக்கம்.
சாளக்கிராமத்தினால் உருவாக்கப்பட்ட ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், சந்தன கோபாலன் போன்ற தெய்வ மூர்த்தங்கள் உண்டு. எல்லாக் கோயில்களிலும் இந்தச் சாளக்கிராம பூஜை முக்கிய இடம் பெறுகிறது.
சாளக்கிராம பூஜை முடிந்த பிறகுதான் மூலவருக்கும் இதர தெய்வங் களுக்கும் பூஜை செய்வார்கள்.
பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி அதன்மீது சாளக்கிரா மத்தை வைத்துச் செல்வது சிலர் வழக்கம்.
பால், நீர் அபிஷே கம் செய்து சாதம், பருப்பு, பாயசம், நெய் என்று நைவேத்யம் செய்யலாம்.
சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட லோகப் பேறு கிடைக்கும் என்பர். சாளக்கிராம கற்கள் பின்னப்பட்டு உடைந்து விட்டாலும் அதை செப்பு, வெள்ளி கம்பிகளில் இணைத்து வைத்து பூஜைக்குப் பயன்படுத்தலாம். அதை பூஜையிலே வைத்து அபிஷேக ஆராதனை செய்யலாம்.
ஆடி மாதம் சாளக்கிராம வழிபாடு

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0122. அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு

0122. அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு:- அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும்.
இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர். அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் மந்திரம் I. இந்திரன் = கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார். ஐராவத கஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடிநம் ஸகஸ்ர நயநம் ஸக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத் II. அக்னி தேவன் = தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும். ஸப்தார்சிஷம் ச பிப்ராணம் அக்ஷமாலாம் கமண்டலும் ஜ்வாலாமாலாகுலம் ரக்தம் ஸக்திஹஸ்தம் சகாஸநம் III. யமன் = தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார். சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார். இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவாhர். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். இவரை வழிபட நம்மைப் பற்றிய தீவினைகள் நீக்கி நல்வழி கிடைக்கும். க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயாநகம் காலபாஸதரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிணதிக்பதிம் IV. நிருதி = இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.
ரக்தநேத்ரம் ஸவாரூடம் நீலோத்பல தளப்ரபம் க்ருபாணபாணி மாஸ்ரௌகம் பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம் V. வருண பகவான் = மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு,குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன ஐவ‌கை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார். இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும். நாகபாஸதரம் ஹ்ருஷ்டம் ரக்தௌகத்யுதி விக்ரஹம் ஸஸாங்க தவளம் த்யாயேத் வருணம் மகராஸநம் VI. வாயு பகவான் = வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட ஆயுள் விருத்தி கிடைக்கும். ஆபீதம் ஹரிதச்சாயம் விலோலத்வஜ தாரிணம் ப்ராணபூதம்ச பூதாநாம் ஹரிணஸ்தம் ஸமீரணம் VII. குபேரன் = வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன. இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும். குபேரம் மநுஜாஸீநம் ஸகர்வம் கர்வவிக்ரஹம் ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம் உத்தராதிபதிம் ஸ்மரேத் VIII. ஈசானன் = வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார். இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும். ஈஸாநம் வ்ருஷபாரூடம் த்ரிஸூலம் வ்யாலதாரிணம் சரச்சந்த்ர ஸமாகாரம் த்ரிநேத்ரம் நீலகண்டகம். நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

0121. ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

0121. ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:

ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண் மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்ய புஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:

ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம:
ஓம் அனுக்ரஹபதாயை நம:

ஓம் புத்யை நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோக சோக விநாசிந்யை நம:
ஓம் தர்ம நிலயாவை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:

ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பக்மோத்பவாயை நம:
ஓம் பக்த முக்யை நம:
ஓம் பத்மனாப ப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்ம மாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:

ஓம் பத்மிந்யை நம:
ஓம் பத்மகந்திந்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸந்நாயை நம:
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதநாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப் புஜாயை நம:

ஓம் சந்த்ர ரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்து சீதலாயை நம:
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்ய ஜநந்யை நம:

ஓம் புஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம:
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வ நிலாயாயை நம:
ஓம் வராய ரோஹாயை நம:
ஓம் யச்சஸ் விந்யை நம:

ஓம் வாஸுந்தராயை நம:
ஓம் உதா ராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் த ந தாந்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம:
ஓம் வரலக்ஷம்யை நம:

ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ர தநயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்கள தேவதாயை நம:
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம:
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம:
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:

ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம:
ஓம் நவ துர்காயை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம:
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம:
ஓம் புவனேச்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்

குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்வை பட்டு எல்லா வளமும் பெறுவீர்களாக.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 1 நவம்பர், 2018

0120. தீபாவளி

0120. தீபாவளி

தீபத் திருநாள் / தீப ஒளித்திருநாள்.
தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற, ஓர் இந்துப் பண்டிகையாகும்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, துவிதியை ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய்

1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.