ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

Megala House Sani Deepam

Varahi worship

Varahi worship சப்தகன்னியரில் ஒருவரான வாராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். ஞாயிறன்று வாராகியை விரதம் இருந்து வழிபட்டால் நோய்கள் தீரும். திங்கட் கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் மனநல பாதிப்புகள் நீங்கும். வீடு, நிலம் தொடர்பான பிரச்சினைகள் தீர செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து வாராகியை வழிபடலாம். கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை விரதம் இருந்து வழிபடலாம். குழந்தைப்பேறு கிட்ட வியாழக்கிழமை விரதம் இருந்துவழிபடலாம். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடலாம். வெள்ளிக் கிழமை விரதம் இருந்து வழிபட நினைத்த காரியம் நிறைவேறும். சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட இழந்த செல்வம் திரும்ப வரும். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

Banana flower worship

Banana flower worship வாழை மலர் வழிபாடு திருமணம் தாமதப்படுவதற்கான கிரக நிலைகள் 7-க்கு உடையவன், 12-ல் விரயமாகும், 7-ஆம் பாவத்தில் சனி, சூரியன், ராகு, கேது ஆகியோர் தனியாக அமர்ந்திருந்தாலும் திருமணம் தாமதப்படும். வாழைமலர் பூஜை: வாழை இலை விரித்துப்போட வேண்டும். அதில் பச்சரிசி பரப்பி வைத்தது கலசத்தை தீர்த்தத்தால் நிரப்பி, மஞ்சள் பொடி, ஏலக்காய், பச்சை கற்பூரம் தூள் இட்டு, கலசத்தின் மேல் தேங்காய் வைப்போம் அதற்குப் பதில் வாழை பூ வைக்க வேண்டும் கலசத்துக்கு எதிரில் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து வைக்கவேண்டும். நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய் கலவையில் அவற்றை நனைத்து தீபம் ஏற்றத் தயாராக வைக்கவேண்டும். அல்லது 5 முகக் குத்துவிளக்கை இரண்டு பக்கங்களிலும் ஏற்றிவைக்கலாம். பிறகு, கற்பூர ஆரத்தி காட்டி மஞ்சள்- குங்குமம் பிரசாதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, கலசநீரை வீடு முழுவதும் தெளிக்கலாம். பின்னர், ஒரு மணைப் பலகையில் பெண்ணை அமர வைத்து மங்கல வாசகங்கள் சொல்லி அபிஷேகம் செய்துவிட்டு, மடி ஆடை உடுத்தச் செய்யவேண்டும். தொடர்ந்து, மீண்டும் பூஜையறைக்குச் சென்று வணங்கி குங்குமப் பிரசாதம் எடுத்துக்கொண்டு, சிறிது பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு, தெய்வங்களை வணங்கிவிட்டு, வீட்டுப் பெரியவர்களிடமும் வாழ்த்து பெற வேண்டும். 48 நாட்கள் இந்த வழிபாட்டால் கிடைக்கும் இறையருளாலும் பெரியோர் ஆசியாலும் விரைவில் கல்யாணம் கூடிவரும். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

Arugampul worship

Arugampul worship அருகம்புல் வழிபாடு  முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமானை வணங்கி, அவரை அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபடும் முறை. அருகம்புல் மீது சிறிது மஞ்சள் நீரைத் தெளித்து, இரண்டு தீபங்களை ஏற்றி, பக்கத்தில் நிறுத்தி, கலசம் முன்பு விநாயகரை வைக்கவும். முதலில் அன்றைய நாள், நட்சத்திரம் சொல்லி, மஞ்சள் விநாயகரை பூஜை செய்யுங்கள். பூஜையின் பலன்: ராகு-கேது தோஷம், காரியத்தடைகள்  நீங்கும்; குழந்தை பாக்கியம் கிட்டும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். திங்கள்  மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

வேப்ப எண்ணெய் தீபம்

வேப்ப எண்ணெய் தீபம் எதிரிகள் தொல்லை நீங்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். வாராகி அம்மனுக்கு ஏற்றது. மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

இலுப்பை எண்ணெய் தீபம்

இலுப்பை எண்ணெய் தீபம் கடன் தொல்லை அகலும். இல்லத்தில் சந்தோஷம் நிலைக்கும். மகிழ்ச்சி தங்கும். புவனேஸ்வரி அம்மனுக்கு உகந்தது. குல தெய்வத்திற்கு ஏற்றது. வாராகி அம்மனுக்கு ஏற்றது. மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

நவராத்திரி கொலு பொம்மை எப்படி வைக்க வேண்டும்?

நவராத்திரி கொலு பொம்மை எப்படி வைக்க வேண்டும்?

மலை மகள், அலை மகள், கலை மகள் ஒரு ரூபமாக இணைந்து, நவராத்திரி விழாவாக கொண்டாடுகின்றோம்.

நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வாக கொலு வைக்கப்பது வழக்கம்.

முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள்.

3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9 படிகள் என 11 படிகள் வரை வைக்கலாம். படிப்படியாக மனிதனின் வாழ்க்கை உயர்ந்தது என்றும், உலகில் உயிரினங்கள் எப்படி படிப்படியாக தோன்றியது. என்றும், மற்றொரு விளக்கமாக மனிதன் படிப்படியாக தன் கடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த கொலு படிகள் அமைகின்றன.

கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி, கொலு வைக்க நினைத்து சில காரணங்களால் வைக்க முடியாமல் போனவர்கள் என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
கொலு வைக்க முடியாதவர்கள், சாதாரணமாக நாம் வழிபடக்கூடிய தெய்வங்களுக்கு பூ அலங்காரங்கள் செய்து வழிபடுவதோடு, நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும், தினமும் ஒவ்வொரு தானியங்களை வேகவைத்து அதை நெய்வேத்தியம் அம்பாளுக்கு படைக்க வேண்டும். தாம்பூலம் ஏன் கொடுக்க வேண்டும்:
தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகின்றது. இதனால் நவராத்திரி தினத்தில் வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியாக, அன்பாக அனுப்புவதால், லெட்சுமியின் அருள் கிடைக்கும். நவராத்திரிக்கு யாருமே உங்கள் வீட்டுக்கு வரவில்லை என்றால் கூட ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்களே மாலை நேரத்தில் அம்பிகைக்கு பிடித்த மலர்களை சூடி, நெய்வேத்தியம் படைத்து, அம்பாளுக்கு உகந்த போற்றி பாடலை பாடி வழிபடுவது உகந்தது மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

பஞ்சமி தாய்

பஞ்சமி தாய்

வாராகி வழிபாடு

பஞ்சமி வழிபாடு

சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள் வராஹி.

வாராகி வழிபாடு வீட்டில் செய்ய ஒரு தனி இடம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த இடத்தில், எந்த நேரத்தில் செய்கி றோமோ அதே இடத்தில் தான் தினசரி செய்ய வேண்டும்.

வழிபாட்டிற்கு அன்னையின் படம், அல்லது விளக்கு ஜோதி வடிவாகவே வழிபாடு செய்யலாம், நாம் வடக்கு, மேற்கு நோக்கி அமரலாம். அன்னை வராகிக்கு பிடித்தமான நிறம் பச்சை! பச்சை நிறத் துண்டின் மீது அமர்ந்து இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி(கிழக்கு நோக்கி ஏற்றினால் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;வடக்கு நோக்கி ஏற்றினால் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்..

பூஜை அறையில் அன்னை படத்தை வைப்பதை காட்டிலும் தனி அறையில் பூஜை செய்வதுதான் சிறப்பு.

அன்னைக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை, அல்லது படத்தை வசதிக்கு ஏற்றார்போல் வைத்து கொள்வது நலம்.

தினசரி பூஜை செய்யும் இடத்தில் பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து 5 ஏலக்காய் நுணுக்கி அதில் போட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை, பஞ்சமி தோறும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

பூஜை செய்யும் போது நீலம் மற்றும் சிகப்பு நிற ஆடையை பயன்படுத்துவது நலம்.

தர்பை பாய், அல்லது கம்பளி போர்வை ஆசனத்திற்கு பயன்படுத்த நலம்.

சுத்தமான மஞ்சள், குங்குமம் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

சாம்பிராணி புகையில், வெண்கடுகு, வெள்ளை குங்கிலியம் சேர்த்து போடுவது சிறப்பு.

வாராகி அன்னை படம், விநாயகர் படம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்க வேண்டும்.

பூஜை முறை :

பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியம் எல்லாம் சேகரித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

முதலில் குருவை- மானசீகமாக வழிபாடு செய்து “குருவடி சரணம் திருவடிசரணம்” என்று 9 முறை கூறவும்.

பின்பு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு 21 முறை விநாயகாய நம என கூறி அர்ச்சிக்க வேண்டும்.

விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும்.

வாராகி அன்னையை குங்கும அர்ச்சனை

வாராகி அன்னையை செம்பருத்தி, செவ்வரளி, மல்லி, துளசி, வில்லம், நீலசங்கு பூ மூன்றையும் கலந்து “வாராகி மூல மந்திரம்

“ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம்
ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன
வசங்கரி தனம் வர்ஷய
வர்ஷய ஸ்வாஹ:” 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம்

மற்றும் “வாராகி மாலை” பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.

1 வசீகரணம் (த்யானம்)

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2 காட்சி (யந்த்ர ஆவாஹனம்)

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே

3 பகை தடுப்பு (பிரதாபம்)

மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப் பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத் தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே

4 மயக்கு (தண்டினி த்யானம்)

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே

5 வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே

6 உச்சாடனம் (ரோகஹரம்)

வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பை செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே

7 எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என ஏழை நெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே

8 பெரு வச்யம் (திரிகால ஞானம்)

வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9 பகைமுடிப்பு (வித்வேஷணம்)

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10 வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதும் பொறிபட்டதோ ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே

11 தேவி வருகை (பூத பந்தனம்)

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே

12 ஆத்ம பூஜை (மஹாமாரி பூஜனம்)

சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே

13 தேவி தாபனம் (பில்லி மாரணம்)

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே

14 மந்திர பூஜை (முனிமாரணம்)

மதுமாம்ஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் நாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த்தெய்வமே

15 வாராஹி அமர்தல் (மூர்த்தி த்யானம்)

ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே

16 வரம் பொழிதல் (எதிரி மாரணம்)

தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே

17 வாழ்த்துதல் (உலக மாரணம்)

வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே

18 நன்னீர் வழங்கல் (ஏவர் பந்தனம்)

வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்கா தவர்க்கே

19 புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கயாள் எங்கள் அம்பிகையே

20 மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21 தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர்உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள் என்னை வாழ்விக்கவே

22 தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23 புகழ்சொற் பாமாலை (மௌனானந்த யோகம்)

ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ ? அடல் ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே

24 படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

உலக்கை கலப்பை ஓளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25 பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே

26 படை நேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுலகம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே

27 அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே

28 திருப்படை வந்தம் (அம்ருதானந்த யோகம்)

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக்கு வால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே

29 பாதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ ? நின் அடியவர்பால்
மாரிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே

30 ஸித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே

31 நவகோண வந்தனம் ( நித்யானந்த யோகம்)

வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32 நிறைமங்கலம் ( சிவஞான யோகம்)

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுரை நாயகியே

பயன்:-

இதை பாடினால் மும்மூர்த்தி அருள் கிடைக்கும்.

இப்பாடல்களை தினசரி பாடி வழிபடுவோர்களுக்கு எல்லா வகையான பலன்களும் அளவற்ற செல்வமும் திரண்டு கிடக்கும்.

தயிர்சாதம் நைவேத்தியம் வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். வழக்கு முதலான காரியங்களில் வெற்றி கிடைக்கும்

பூஜையில் அமர்ந்த பின் எழக் கூடாது.

அர்ச்சனை முடித்த பிறகு அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து தீபஆராதனை காண்பித்து வாராகி தேவி பாதம் பணிந்தேன் என கூறி பணிந்து கீழே விழுந்து வணங்க வேண்டும்.

தேய்பிறை பஞ்சமி திதி இருக்கும் நாளில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சமி, அம்மாவாசை அன்று, ஒரு ஐந்து நபருக்கு உணவளித்தால் நலம். ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் மூடியில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட, கோரிய பலன் கிட்டுவது உறுதி. கீழே விழுந்து வணங்கிய பிறகு, சங்கு நாதம் ஒலிக்க வேண்டும், அல்லது மணி இசைத்து மீண்டும் கீழே விழுந்து வணங்க வேண்டும்.

பின் நைவேத்தியம் பகிர்ந்து கொடுத்து நாமும் உண்ணலாம்.

கண்டிப்பாக நேரம் தவறக்கூடாது, ஆரம்ப நாளில் எந்த நாளில் நேரத்தில் செய்தீர்களோ அதே நேரத்தில்தான் செய்ய வேண்டும். ஒருவேளை வெளியூர் சென்றால் ஒரு அம்மன் ஆலயம் சென்று வழிபாடு செய்து மாற்றிக் கொள்ளலாம். இந்த எளிமையான வழி பாட்டை அனைவரும் செய்து அன்னையின் அருளை பெறலாம்.

அன்னையின் கோடிக்கணக்கான மந்திரமும், இந்த வாராகி மாலை ஒன்றுக்கு சமம். ஆக இதே ‘பாமாலை’ சக்தி எண்ணிலடங்கா இது ஒன்றே பூஜைக்கு போதுமானது. வராஹிதேவியை வணங்குங்கள். வளம் பெறுங்கள். நலம் பெறுங்கள். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

சுதர்ஷன மந்திரம்

சுதர்சன சக்கரம்

Sudarshana mantra

திருமால் தனது கையில் வைத்திருக்கும் சக்கரமே ‘சுதர்சன சக்கரம்’

சுதர்சனரை சக்கரத்தாழ்வார் என்றும் போற்றுவார்கள்.

இறை பூஜைக்காக பூப்பறிக்கச் சென்ற யானையின் காலை, குளத்தில் இருந்த முதலை கவ்விக்கொண்டது. அப்போது திருமால், சுதர்சனரை அனுப்பியே முதலையைக் கொன்றார்

கிருஷ்ண பகவானை பழித்து பேசிய சிசுபாலனைக் கொன்றதும்,
துர்வாச முனிவரை விரட்டி அவரது கர்வத்தை அகற்றியதும் சுதர்சனர்தான்.

சுதர்சன காயத்ரி மந்திரம்

‘ஓம் சுதர்ஹநாய வித்மஹே
மஹாஸ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்’ தினமும் 108 தடவை

தினம், வியாழக்கிழமை

வீட்டு சுதர்சன காயத்ரி மந்திரத்தை ஒலிக்க விடுதல்

பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். திருமாலின் அருளையும் பெறலாம். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

27 தீபங்கள் = நட்சத்திரங்களைக் குறிக்கும்.

வீடு முற்றம், சமையலறை, திண்ணை, மாடம், பூஜையறை, குப்பைக் குழி, ஆடு மற்றும் மாட்டுப் பட்டி, கொல்லைப்புறம் என்று அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றுவது சிறப்பு மிக்கது.

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்

• கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.

• பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

• சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

• தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும் • திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.

• மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

தீபத்தின் வகைகள்

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

சித்ர தீபம்
வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

மாலா தீபம்
அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

ஜல தீபம்
தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

படகு தீபம்
கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.

சர்வ தீபம்
வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.

சர்வாலய தீபம்
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

லட்ச தீபம்
ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.

மாவிளக்கு தீபம்
அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.

சூரியனுக்கான நட்சத்திரங்கள் உத்திரம், கிருத்திகை, உத்திராடம். ஞாயிற்றுக்கிழமை கோதுமை மீது 10 தீபம் ஏற்றி வழிபட சூரியனின் அருளைப் பெறலாம். சூரியனின் தசா புத்தி காலம்- 6 ஆண்டுகள்

சந்திரனின் நட்சத்திரங்கள் ரோகிணி, அஸ்தம், சித்திரை. சந்திரனின் தோஷம் நீங்க, திங்கட்கிழமை அம்பாள் சன்னிதி முன்பு நெல் மீது 11 தீபம் ஏற்றுங்கள். சந்திரனின் தசா புத்தி காலம்- 10 ஆண்டுகள்

குருவின் தோஷம் விலக, குருவின் நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. வியாழக்கிழமை நல்லெண்ணெய் தீபம் 2 தேங்காய் எண்ணெய் தீபம் 2 நெய் தீபம் 2 மஞ்சள் வெள்ளை சிவப்பு திரி தசாபுத்தி காலம் 16 ஆண்டுகள்

கல்கண்டு தீபம்

மஞ்சள்... குங்குமம் தீபம்

அட்சதை தீபம்

கஜலட்சுமி தீபம்

நாணய தீபம்

108 தானியக் கதிர் நாணயங்கள் மீது தீபம் ஏற்ற வேண்டும் வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

கும்ப தீபம் Kumbha Deepam

இந்த கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிப்பதால் தீபாராதனையின் இறுதியில் இறைவனுக்கு காட்டப்பெறுகிறது.

ரதசப்தமி கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் மாசி மாதம் கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது தீபம் ஏற்றலாம்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

கோமதி சக்கர பூஜை

கோமதி சக்கர பூஜை

1. பசும்பால் 2. பன்னீர் 3. துளசி தீர்த்தம் 4. இளநீர் 5. சாணம் 6. சந்தன தீர்த்தம் 7. மஞ்சள் தீர்த்தம்

I. கடன் பிரச்சனை தீர தொழில் பிரச்சனை தீர பணப்பிரச்சனை தீர 13 சிறிய பெரிய கோமதி சக்கரம் வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும் புதன்கிழமை வெள்ளிக்கிழமை

சிறிய தட்டு உதிரி மல்லிகை பூ மூன்று நாட்களுக்கு ஒரு முறை குங்குமப்பூ தட்டில் பரப்ப அதன்மேல் வட்டவடிவில் கோமதி சக்கரத்தை வரிசையாக வைக்க வேண்டும் வலம்புரி சங்கு நெய்தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் இந்த தட்டு வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும் தீபம் வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும்

ஓம் மகாலட்சுமியே வசிவசி - 108 முறை சொல்ல வேண்டும் தூபதீபம் காட்ட வேண்டும்
இனிப்பு படைக்க வேண்டும்

II. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இன்மை குழந்தைகளால் பிரச்சனை தீர 15 கோமதி சக்கரம் கல் உப்பு மாதம் ஒருமுறை குங்குமப்பூ தட்டில் பரப்ப அதன்மேல் வட்டவடிவில் கோமதி சக்கரத்தை வரிசையாக வைக்க வேண்டும் வலம்புரி சங்கு நெய்தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் இந்த தட்டு வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும் தீபம் வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும்

ஓம் மகாலட்சுமியே வசிவசி - 108 முறை சொல்ல வேண்டும் தூபதீபம் காட்ட வேண்டும்
இனிப்பு படைக்க வேண்டும்

III. கல்வியில் சிறந்த விளங்க 17 கோமதி சக்கரம் சிறிய தட்டு ஏலக்காய் 20 நாளுக்கு ஒரு முறை குங்குமப்பூ தட்டில் பரப்ப அதன்மேல் வட்டவடிவில் கோமதி சக்கரத்தை வரிசையாக வைக்க வேண்டும் வலம்புரி சங்கு நெய்தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் இந்த தட்டு வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும் தீபம் வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும்

ஓம் மகாலட்சுமியே வசிவசி - 108 முறை சொல்ல வேண்டும் தூபதீபம் காட்ட வேண்டும்
இனிப்பு படைக்க வேண்டும்

IV. எதிரிகள் தொல்லை நீங்க 19 கோமதி சக்கரம் ஏலக்காய் 20 நாளுக்கு ஒரு முறை குங்குமப்பூ தட்டில் பரப்ப அதன்மேல் வட்டவடிவில் கோமதி சக்கரத்தை வரிசையாக வைக்க வேண்டும் வலம்புரி சங்கு நெய்தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் இந்த தட்டு வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும் தீபம் வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும்

ஓம் மகாலட்சுமியே வசிவசி - 108 முறை சொல்ல வேண்டும் தூபதீபம் காட்ட வேண்டும்
இனிப்பு படைக்க வேண்டும்

VI. வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ, மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜிக்க பொருள் வரவு மேம்படும். நெய்தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் இந்த தட்டு வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும் தீபம் வடக்கு திசை பார்த்து இருக்க வேண்டும்

ஓம் மகாலட்சுமியே வசிவசி - 108 முறை சொல்ல வேண்டும் தூபதீபம் காட்ட வேண்டும்
இனிப்பு படைக்க வேண்டும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

மகப் பேறு

கம்பராமாயணம்  பாலகாண்டம் திரு அவதாரப் படலம் மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல் 'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய், கானினும், வரையினும், கடி தடத்தினும், சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என, ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்: 18 புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம் அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம் மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத- த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக: க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம் க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம் த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம் ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம் லம்-இத்யாதி பஞ்சபூஜா மந்திரம் : ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத: ஹ்ருதயாதி-ந்யாஸ பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம் தேவகீஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம்கத தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம் ஸ்ரீ நாக கன்னிகா வசிய மந்திரம் மூல மந்திரம்: "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸெளம் நமோ பகவதி நாகலோக வாசினி சர்வ விசும் நாஸயம் நாஸய பீம் பீம் ஹ்ரீம் ஹும் பட் ஸ்வாகா" மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

கிராமிய தெய்வ வழிபாடு

கிராமிய தெய்வ வழிபாடு 01. பிராம்மி (சப்தகன்னியர்) தியான சுலோகம் தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம் பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா மந்திரம் ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம: ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம: காயத்ரி மந்திரம் ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே தேவர்ணாயை தீமஹி தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத். 02. மகேசுவரி (சப்தகன்னியர்) தியான சுலோகம் சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம் வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா. மந்திரம் ஓம் மாம் மாஹேச்வர்யை நம: ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம: காயத்ரி மந்திரம் ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத் மாஹேஸ்வரி காயத்ரி 108 முறை ஓம் வ்ருஷப த்வஜாயை வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி தந்தோ மாகேஸ்வரி பிரசோதயாத்:!! 03. கௌமாரி (சப்தகன்னியர்) தியான சுலோகம் அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம் ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே! மந்திரம் ஓம் கெளம் கெளமார்யை நம: ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் சிகி வாஹனாயை வித்மஹே சக்தி ஹஸ்தாயை தீமஹி தன்னோ: கவுமாரி ப்ரசோதயாத். 04. நாராயணி (சப்தகன்னியர்) தியான சுலோகம் சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண: தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை. மந்திரம் ஓம் வை வைஷ்ணவ்யை நம: ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத். 05. வராகி (சப்தகன்னியர்) தியான சுலோகம் முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம் கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி: மந்திரம் ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் உக்ர ரூபாயை வித்மஹே தம்ஷ்ட்ராகரான்யை தீமஹி தந்நோ வாராஹீ ப்ரசோதயாத். ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்: 06. இந்திராணி தியான சுலோகம் அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர: மந்திரம் ஓம் ஈம் இந்திராண்யை நம: ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்: 07. சாமுண்டி தியான சுலோகம் சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை. நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேத நிஷண்ணசுவா! ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா. மந்திரம் ஓம் சாம் சாமுண்டாயை நம: ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம: காயத்ரி மந்திரம்: ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே சூலஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டா ப்ரசோதயாத்: மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.