எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்
ஒவ்வொரு தெய்வத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விநாயகரை ஒரு முறையும்,
சூரிய பகவானை இரண்டு முறையும்,
ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்.
மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்.
விஷணுவை நான்கு முறையும்,
தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,
லட்சுமி தாயாரை ஐந்து முறையும்,
அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.
நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,
தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.
கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.
ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக