நவகிரக சந்திரன் வழிபடுவது
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்,
கடக ராசி, கடக லக்னக்காரர்கள், ரோகிணி, ஹஸ்தம், திருவோண
நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்
சந்திரன் தேய்பிறையாக அமைந்தாலும், நீசம், பகை பெற்று இருந்தாலும்,
ஜாதகர்களுக்கு மனநிலை பாதிக்கும். தூக்கம் கெடும். பயம் உண்டாகும். பெண்களால் சங்கடம் ஏற்படும்.
சந்திர பலம் குறைந்தவர்கள் வெள்ளை அல்லி மலர்களைச் சந்திரனுக்கு அணி வித்து வணங்கலாம்.
வெள்ளை நிற வஸ்திரத்தை அணிவிக்கலாம். நெய் கலந்த பால் பாயசம் நைவேத்யம் செய்து தானும் உண்டு பிறருக்கும் அளிக்கலாம்.
திருப்பதி மலையின் மேல் உள்ள பாபநாச (சந்திர தீர்த்தம்) தீர்த்தத்தில் நீராடி, திருவேங்கடவனைத் தரிசிப்பது நல்லது.
வழிபாட்டு மந்திரம்
ததிசங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் முகுடபூஷணம்
நிறம்: வெள்ளை
தானியம்: அரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக