ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

முடிதும்பை

முடிதும்பை Leucas Aspera

25 தும்பை பூக்களை, ½ டம்ளர் காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்க குழந்தைகளின் தொண்டையில் கட்டிய கோழை வெளிப்படும்.

10 துளிகள் அளவு தும்பை பூச்சாற்றை, காலையில் மட்டும் குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கான சளி, இருமல், விக்கல் தீரும்.

தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை குடிக்க வேண்டும். தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் செய்ய ஒவ்வாமை தீரும்.

தும்பைச் செடியை, இலை, பூக்களுடன் பறித்து வந்து, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.

தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 15 துளிகள் அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.

வீட்டருகே எளிதாக கிடைக்கும் தும்பை இலையில் துவையல் செய்வது எப்படி? மூலிகை சமையல் !!

தேவையானவை:
தும்பை இலை – ஒரு கப்,
இஞ்சி – ஒரு துண்டு,
உளுத்தம் பருப்பு கால் கப்,
காய்ந்த மிளகாய் 4, புளி
சிறிதளவு, உப்பு தேவையான அளவு,
பெருங்காயம் கால் டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
ஒரு வாணிலியில் எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு, தும்பை இலை இரண்டையும் தனித்தனியே வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி, நறுக்கிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் இவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளங்கள்.
பின்னர் அதில் வறுத்த தும்பை இலை, உளுத்தம் பருப்பு அரைத்து விடவும்.

சிறிது எண்ணெயில் கடுகு தாளித்தல தும்பை துவையல் ரெடி.
இதனை சூடாக பரிமாறவும்.

கருத்துகள் இல்லை: