சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும்.
இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது.
திருநெல்வேலிச் சீமையில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43 ஆவது நாளில் அவதரித்தார்
உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர்.
மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது.
ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார்.
யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.
கன்னியாகுமரி திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி
பதினாறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார்.
நாங்குநேரி வானமாமலையில் தெய்வநாயகனை நம்மாழ்வார் சரணாகதி செய்ததால் பெருமானின் சடாரியிலேயே நம்மாழ்வாரின் திருவுருவம் பொறித்துள்ளதைக் காணலாம். அதனால் இங்கு நம்மாழ்வாருக்கு தனிச் சந்நதி கிடையாது.
சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக அறியப்பெறுகிறார்.
வைணவர்கள் நம்மாழ்வாரே, திருமாலின் திருவடியாக இருப்பதாக நம்புகிறார்கள்.
அதனால் திருமால் திருவடி சடகோபம் என்று அழைக்கப்பெறுகிறது.
வானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக