01. பொங்கல் நல்வாழ்த்த
பொங்கலோ பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
மங்களம் பொங்குக!
பொங்கும் மங்களம்
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை- 7.30 மணி முதல் 8.30 மணி
வரை
பொங்கல் தத்துவம்
பொங்கல் திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், பொங்கலுக்கு
முதல் நாளான போகிப்பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட
குணங்கம் போகின்றன.
பொங்கல் பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கிப் பெருக
ஆரம்பிக்கின்றன.
மறுநாள் காணும் பொங்கல் எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல
எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய
கொண்டாடப்படுகிறது.
ஆரோக்கியம் தரும் ஆதித்தன்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி.
உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல்
ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை.
சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு.
அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும்
அவசியம்.
இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார்.
இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் Sun Day செந்தாமரை மலரிட்டு
வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும்.
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே என்பது சூரியனின்
பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும்.
இப்பழமொழி கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு என்று
குறிப்பிடுகிறது
சூரியனை வழிபடும் பொங்கல் திருநாள்
சூரியன் ஒரு ராசிக்குள் நுழைகிற நாள் தான் அந்தந்த தமிழ் மாதத்தின்
முதல் நாள்.
சூரியன் ஒரு ராசிக்குள் எத்தனை நாட்கள் இருக்கிறானோ அதுவே அந்த
மாதத்தின் மொத்த நாட்கள்.
இப்படி சூரியன் மகர ராசிக்குள் நுழைகிற நாளே “பொங்கல் திருநாள்’.
தை மாதத்தின் முதல் நாள் அன்று தான் சூரியன் வடக்கு நோக்கிய
பயணத்தைத் தொடர்கிறான்.
இதை உத்தராயணம் என்கின்றனர்.
மிகப் பழங்காலத்திலிருந்து தமிழ் மக்கள் சூரியனை வழிபட்டு
வருகின்றனர்.
முன்னோர் மரபில் நம்பிக்கை உள்ள குடும்பங்களில் பொங்கல் நாளன்று
அதிகாலையில், அதாவது சூரியன் உதயமாகும் நேரத்தில் வீட்டில்
பொங்கல் இடுவார்கள்.
கோவில்களில் சூரியனுடைய வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
இவற்றுள் காலத்தால் முந்தியது மாமல்லபுரத்தில் தர்மராஜா ரதத்தில்
உள்ளது.
11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் கிருக்கி மாவட்டத்தில் கங்கை
கொண்ட சோழபுரத்தில் கட்டிய கலை நுட்பம் நிறைந்த ஒப்பற்ற
கோவிலில் சூரிய இயந்திரம்
ஒன்றை அமைத்துள்ளான்.
குலோத்துங்க சோழன் தஞ்சை மாவட்டத்தில் சூரியனுக்கு ஒரு கோவில்
கட்டி இருக்கிறான்.
கன்னியாகுமரி கோவிலில் சூரியனுடைய ஒளி அம்மனின் மூக்குத்தியில்
படுகிறது.
ஆவுடையார் கோவில், திருப்பாதிரிப் புலியூர், கும்பகோணம் கோவில்
ஆகியவற்றில் நாள்தோறும் காலையில் சூரிய ஒளி இறைவன் மீது
படுகிறது.
இதன் மூலம் கோவில் அமைப்பில் சூரியனுக்கே முதல் முக்கியத்துவம்
என்று தெரிகிறதல்லவா.
ஒருநாள் என்பது சூரிய உதயம் தொடங்கி மறுநாள் சூரிய உதயம் வரை
உள்ள காலப் பகுதியாகும்.
“உதய நாழிகை’ என்பதைக் கொண்டே ஒருநாளின் தொடக்கத்தை
கணக்கிடுகின்றனர்.
இவ்வாறாக சூரியனை முன்னிலைப் படுத்தியே இந்துக்களின் பண்டிகைகள்
கொண்டாடப் படுகின்றன.
இதில் முக்கிய பண்டிகை பொங்கல் பண்டிகையாகும்.
சூரியனுக்கு 12 பெயர்
ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள்
உண்டு.
ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள்
சொல்லப்பட்டுள்ளது.
மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி,
ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.
தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் -
சூரியன் - சிவன்
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன்
(முருகப் பெருமான்)
உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
அறுவடைத் திருநாள்
*தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருநாளாக
கொண்டாடி மகிழ்கிறோம் அறுவடைத் திருநாள் உலகில் 22
நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் நன்றி கூறும் திருநாளாக, ஜப்பானில் புதிய சுவை
திருநாளாக, சீனாவில் “சங் செய்’ என்ற பெயரில் இப்படி பல்வேறு
பெயர்களில் அறுவடைத் திருநாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
* நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல், ஜப்பானியர்கள்
குதிரைக்கு பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.
நன்றி காட்டும் நல்லநாள்
உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில்,
விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன், பணியாட்கள் மற்றும்
கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா
பொங்கல் விழா.
சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார்.
கடல்நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார்.
கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்.
மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்.
அவருக்குரியதாக இந்த நாள் அமைந்துள்ளது.
சூரியனுக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்குரிய நாளாக
மாட்டுப்பொங்கலும், உறவினர்,நண்பர்கள், வேலையாட்களைப்
பாராட்டும்விதத்தில் காணும்பொங்கலும் அமைந்துள்ளன.
‘பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாடி வரும் தமிழ்நாட்டு
மக்கள், இனி தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை
இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா
என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு,
வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட,
புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும்
ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும், தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத்
துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்’ என்று
முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
அதையொட்டி தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல்
திருநாளை தமிழ் மக்கள் சிறப்பாகவும், இனிப்பாகவும் சர்க்கரைப்
பொங்கலுடன் கொண்டாட இருக்கிறார்கள்.
சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்
2 டம்ளர் பச்சரிசி
3/4 டம்ளர் பாசிப்பருப்பு
3 டம்ளர் பால்
3 டம்ளர் வெல்லம் (தூள் செய்தது)
25 கிராம் முந்திரிப் பருப்பு
25 கிராம் திராட்சை
1 முடி தேங்காய்
மிகச் சிறிய துண்டு பொடி செய்தது பச்சை கற்பூரம்
200 கிராம் நெய்
6 ஏலக்காய் (பொடி செய்து கொள்ளவும்)
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாலும், தண்ணீருமாக சேர்த்து 8 டம்ளர் தண்ணீர்
வைத்துக் கொதிக்க விடவும்.
அரிசியையும், வறுத்த பாசிப்பருப்பையும் நன்கு களைந்துக் கொள்ளவும்.
நன்றாக கழுவிய அரிசியையும், பாசிப் பருப்பையும், கொதிக்கும் பால்
கலந்த தண்ணீரில் போட்டு, அடிக்கடி கிளறி விடவும்.
நன்றாக தண்ணீர் சுண்டி, குழைய வெந்தபின் வெல்லத்தைப் போட்டு,
பாகாகி கெட்டியாகும் வரை அடுப்பை மெல்ல எரியவிட்டு,அடிப்பிடிக்காமல்
கிளறி விடவும்.
நான்கு ஸ்பூன் நெய்யை அதில் சேர்த்தால் அடிப்பிடிக்காது.
வெல்லம், கெட்டியாகிச் சேர்ந்தபின், முந்திரிப் பருப்பு, திராட்சை, தேங்காய்
துருவல் இவைகளை மீதமுள்ள நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலப்பொடி,
பச்சைக் கற்பூரப்பொடி போட்டு மீதமுள்ள நெய்யை விட்டு கிளறி
இறக்கவும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
சிறப்பான தை முகூர்த்தம் சுபநிகழ்ச்சி நடத்துவதற்குரிய மாதங்களில்
முகூர்த்தங்கள் அதிகமுள்ள மாதமாக தை அமைந்துள்ளது.
பெண்ணுக்கு திருமணம் பேசும் பெற்றோர், வரும் தையில்
கல்யாணத்தை வைச்சுக்கலாம் என்று சொல்வது வழக்கம்.
அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.
அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் தை
பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது.
இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு.
வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு
நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும்.
அதனையும் தைபிறந்தால் வழிபிறக்கும் என்பர்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக