ஞாயிறு, 11 நவம்பர், 2018

0128. துளசி கல்யாணம்

0128. துளசி கல்யாணம்

ஸ்ரீ துளசி தேவிக்கும் ஸ்ரீமான் நாராயணனுக்கும் (கிருஷ்ணனுக்கும்) கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர்.

கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசி அன்று நெல்லி மரத்தை துளசிச் செடிக்கருகே நடுவார்கள்.

துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின்,

கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம்.
வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும்.

"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி
நேச்வர பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத்
வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம்
துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'

என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும்.

துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

வெள்ளி, 9 நவம்பர், 2018

0127. கன்னன் - கண்ணன்

0127. கன்னன் - கண்ணன்

கன்னன் - கண்ணன்.
இரண்டும் இருவரது பெயர்கள்.
முன்னவன் கர்ணன், பின்னவன் கிருஷ்ணன்.
தமிழ் ஒலியமைப்பில் எழுத்து வடிவில் கர்ணன் கன்னன் எனவும், கிருஷ்ணன் கண்ணன் எனவும் ஆயினர்.
ஆக்கியவர் வில்லிபுத்தூரார்.
இப்படியாக்கிட வழியுரைத்தவர் தொல்காப்பியர்.

I. கர்ணனுக்கு மறு பெயர் கன்னன்?
"தோரோட்டியின் மகன்' என்று ஏசப்பட்டவன்.

II. கிருஷ்ணனுக்கு மறுபெயர் கண்ணன்?
பார்த்தனுக்குச் (அர்ச்சுனனுக்கு) சாரதியாகக் குதிரை ஓட்டி, எல்லாராலும் பூஜிக்கப்பட்டவன்.

வியாழன், 8 நவம்பர், 2018

0126. மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன,

0126. மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்றால் என்ன

மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.

கீழ்நோக்கு நாள்: கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட் டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.

சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிரு கசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. உதாரணத்திற்கு சாலை அமைப்பது, சமமான சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, வயல்களை உழுவது போன்றவற்றை செய்யலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 7 நவம்பர், 2018

0125. பஞ்சாங்கம் படியுங்கள்

0125. பஞ்சாங்கம் படியுங்கள்

சித்திரை முதல் நாளன்று வீடுகளை சுத்தம் செய்து வாசல் படிகளுக்கு மஞ்சள் - குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்.
சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தூய ஆடைகளை அணிய வேண்டும்
பிறகு அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் இறைவனின் சந்நிதானத்தில் வைக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து விநாயகர், நவக்கிரகஙக்ள், குல தெய்வம் ஆகியவைகளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.
பின் பூஜையில் வைத்த பஞ்சாங்கத்தை எடுத்து அதில் உள்ள பலன்களைப் படிக்க வேண்டும்.
இன்றும் சில கிராமங்களில் வீட்டு திண்ணை பொது மண்டபங்களில் பெரியவர்கள் இத்திருநாளன்று அமர்ந்து பஞ்சாங்கம் படிக்க மற்றவர்கள் கேட்கும் வழக்கம் உள்ளது.

சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்.
விரதத்தைப் பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப் பற்றிச் சொன்னால், செல்லச் செழிப்பும் காரணத்தை பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும்.
அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும்.
யோகத்தைப் பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 3 நவம்பர், 2018

0124. ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல்

0124. ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி பாடல்

உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி
உன்பாதம் சரணடைந்தோம் அஷ்டலக்ஷ்மி
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலெக்ஷ்மி
கலையாவும் நிறைந்தவளே அஷ்டலக்ஷ்மி
நிலையான அருட்செல்வம் அருள்பவள் அவளே
உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே (உலகெங்கும்)

ஸ்ரீ லக்ஷ்மி

பாற்கடலில் தேவர் அமுதம் கடையும் போது
பாரெல்லாம் வியந்திட நாரணி உதித்தாள்
நாரணனும் தேவியை மார்பினில் தாங்கி நின்றார்
பூரணியும் பூவுலகைக் காக்க வந்தாள்
அவளே ஸ்ரீ லக்ஷ்மி தேவி லக்ஷ்மி

1. ஸ்ரீ ஆதிலக்ஷ்மி

இரு கண்கள் திருக்கரங்கள் கொண்டவள் அவளே
இகபரசுகம் யாவும் கொடுப்பவள் அவளே
அபயம் அளிப்பவளே ஆதிலக்ஷ்மி அவளே
ஆபரணம் அணிந்த ஒளிக்கதிர் ராணி அவளே
எழில் மலரத் தோரணங்கள் சூழ்பவள் அவளே
அழகிய தாமரைமேல் வாழ்பவள் அவளே
மஞ்சள் நிறஉடை தரித்து மலர்மாலை அணிந்தவளே
மங்களம் நிறைந்தவளே வல்லமை மிகுந்தவளே
ஆதிலக்ஷ்மி அன்னை ஆதிலக்ஷ்மி

2. ஸ்ரீ சந்தானலக்ஷ்மி

ஜடாமகுடம் அணிந்து காட்சி தந்தாள்
அன்னை இடுப்பினில் சுகுமாரனை ஏந்தி நின்றாள்
வீரம் மிகுந்த அபயக் கரங்கள் இரண்டிலே
பூரணக் கும்பமும் வைரக் கங்கணமும் விளங்க
அழகிய மாதரும் தீ பமும் தாங்கியே
எழில் வெண் சாமரம் வீசியிருக்க
முத்திழைத்த உரையோடு துலங்கும்
சக்தியோடு எழில் ராணியாக
சந்தானலக்ஷ்மி அவதரித்தாள்
அவள் சந்தான சௌபாக்கியம் தந்திடுவாள்

3. ஸ்ரீ கஜலக்ஷ்மி

பொன்னிறக் குடம் தாங்கி
வெண்ணிறயானை யிரண்டு
தன்னிரு துதிக் கையினால்
அபிஷேக நீர் கொண்டு
அன்னைக்கு நீராட்ட
அலங்கார தேவதையாய்
வெண்பட்டு புடவையுடன் காட்சி தந்தாள்
கரங்கள் நான்கும் உடையவளாம் கஜலக்ஷ்மி
திருக்கரத்தில் ஞானமுத்திரை உடையவளாம் கஜலக்ஷ்மி
இரவும் பகலும் துதிப்பவர்க்கே கஜலக்ஷ்மி
அரச போகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி

4. ஸ்ரீ தனலக்ஷ்மி

செல்வ திருமகளாம் மோகனவல்லி
எல்லோரும் கொண்டாடும் வேதவல்லி
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணிஸ்யாமாளை
வரத முத்திரை காட்டியே பொருள் செல்வம்
வழங்கிடும் அம்பிகை
மாமனோகர தேவி மார்பினில்
ஒற்றைவடப் பொன்னட்டிகை
சிரத்தினில் மணி மகுடமும்
தாங்கிடும் சிந்தாமணி - பல
வரங்கள் வழங்கிடும் ரமாமணி - அவள்
வரதராஜ சிகாமணி அவள்தான் தனலக்ஷ்மி

5. ஸ்ரீ தான்யலக்ஷ்மி

ஆற்றோரம் தன்னில் சுகாசனத்தில் அமர்ந்து
போற்று மன்பரைக் கண்டு மலர்ச்சியும் கொண்டுஎழில்
வாழை மரங்கள் மலர்தேன் பொழிந்து பூஜிக்க
ஆழ்கடல் அன்னையவள் காட்சி தந்தாள்
இடக்கை மேல்புறத்தில் செழுங்கரும்பை யேந்தி
இகத்தினில் நிலவளம் செழிக்க வந்தாள்
அவள்தான் தான்யலக்ஷ்மி! தான்யலக்ஷ்மி

6. ஸ்ரீ விஜயலக்ஷ்மி

சிங்கார முடிதனிலே அலங்காரக் கூந்தல்
செம்மேனியில் சிறந்த பொன்னாபரணங்கள்
அங்குச பாசமும் பல ஆயுதம் கையில் கொண்டு
செங்கோல் செலுத்தும் ராஜவடிவம் கொண்டாள்
அன்னையின் முகம் தன்னில் தவழ்ந்திடும்மந்தஹாசம்
அன்னைப் பறவை தாங்கும் அழகிய மலர்ப்பாதம்
அன்பரைக் காத்து நிற்கும் அவளது தாய்ப்பாசம்
துன்பங்கள் நேராமல் காத்திடும் அவள் நேசம்
விஜயலக்ஷ்மி தேவி விஜயலக்ஷ்மி !

7. ஸ்ரீ மகாலக்ஷ்மி

நிறைந்திடும் அழகோடு வளரும் பொன்மேனியாள்
அறம், பொருள், வீடு, இன்பம் தரும்
நான்கு கரம் கொண்டாள்
அழகிய மலர் கொண்டு யானைகள் வணங்கி நிற்க
எழிலாக காட்சி தந்தாள் எங்கள் தாய்
சௌபாக்கியம் தரும் தெய்வம் தேவி லக்ஷ்மி
அபயக்கரம் நீட்டி அணைக்கும் மகாலக்ஷ்மி !

8. ஸ்ரீ வீரலக்ஷ்மி

ஒன்பது பனைமரங்கள் அடுத்து நிற்க தேவி
சிம்மாசனத்தின்மேல் அமர்ந்திருக்க
வெற்றி எட்டு கைகளிலும் சூலம்
கபாலம் கொண்டாள்
நற்கதியும் நமக்கருள நானிலத்தில் அவதரித்தாள்
பொற்பதம் பணிந்தவர்க்கு பொன்னாவரம் தந்து
வெற்றியுடன் வாழவைப்பாள் வீரலக்ஷ்மி
வரவேண்டும் வரவேண்டும் அஷ்டலக்ஷ்மி
அருளைத் தரவேண்டும் தரவேண்டும் ஆதிலக்ஷ்மி
சந்ததியைத் தந்திடுவாய் சந்தான லக்ஷ்மி
எண்ணும் பல யோகங்கள் தருவாயே கஜலக்ஷ்மி
தனம் பெருக மனமும் மகிழ காண்பாராய் தனலக்ஷ்மி
மனம் குளிர நிலம் செழிக்க நீயருள்வாய் தான்யலக்ஷ்மி
கலைகளில் வெற்றிதனைக் காண அருள் விஜயலக்ஷ்மி
சகல சௌபாக்கியம் தந்திடு மகாலக்ஷ்மி
உலகெங்கும் வீரத்தை நீயருள்வாய் வீரலக்ஷ்மி
உன்நாமம் சொல்பவர்க்கு அருள்புரிவாய் அஷ்டலக்ஷ்மி

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 2 நவம்பர், 2018

0123. சாளக்கிராம வழிபாடு

0123. சாளக்கிராம வழிபாடு

கல்லிலும் புல்லிலும் தூணிலும் துரும்பிலும் கடவுளைக் கண்டவர்கள் நம் முன்னோர்கள்.
அதன்படி சாளக்கிராம ஸ்படிக கற்களாக வடிவம் கொண்ட மகாவிஷ்ணுவை வழிபடுவது காலம் காலமாக பல குடும்பங்களில் இருந்து வரும் ஒரு பழக்கம்.
சாளக்கிராமத்தினால் உருவாக்கப்பட்ட ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், சந்தன கோபாலன் போன்ற தெய்வ மூர்த்தங்கள் உண்டு. எல்லாக் கோயில்களிலும் இந்தச் சாளக்கிராம பூஜை முக்கிய இடம் பெறுகிறது.
சாளக்கிராம பூஜை முடிந்த பிறகுதான் மூலவருக்கும் இதர தெய்வங் களுக்கும் பூஜை செய்வார்கள்.
பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி அதன்மீது சாளக்கிரா மத்தை வைத்துச் செல்வது சிலர் வழக்கம்.
பால், நீர் அபிஷே கம் செய்து சாதம், பருப்பு, பாயசம், நெய் என்று நைவேத்யம் செய்யலாம்.
சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட லோகப் பேறு கிடைக்கும் என்பர். சாளக்கிராம கற்கள் பின்னப்பட்டு உடைந்து விட்டாலும் அதை செப்பு, வெள்ளி கம்பிகளில் இணைத்து வைத்து பூஜைக்குப் பயன்படுத்தலாம். அதை பூஜையிலே வைத்து அபிஷேக ஆராதனை செய்யலாம்.
ஆடி மாதம் சாளக்கிராம வழிபாடு

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0122. அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு

0122. அஷ்டதிக் பாலகர்கள் வழிபாடு:- அஷ்டதிக் பாலகர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவர். இவர்கள் எண்திசை நாயகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அஷ்டதிக் பாலகர்களில் அஷ்டம் என்றால் எட்டு, திக் என்றால் திசை, பாலகர்கள் என்றால் காப்பவர்கள் என்பது பொருளாகும். கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவை எண்திசைகள் ஆகும்.
இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், யமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர். அஷ்டதிக் பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர் என்று கருதப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக கருதப்படுகிறது. அஷ்டதிக் பாலகர்கள் மந்திரம் I. இந்திரன் = கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். தேவர்களின் தலைவனாகவும் உள்ளார். இவரின் துணைவியார் இந்திராணி அல்லது சசிதேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐராவதம் என்னும் வெள்ளை யானையினை வாகனமாகக் கொண்டவர். இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம் ஆகும். இவரே அஷ்டதிக் பாலகர்களின் தலைவர் ஆவார். இவரை வழிபட எல்லா வளங்களையும், ஆரோக்கியத்தையும் அருளுவார். ஐராவத கஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடிநம் ஸகஸ்ர நயநம் ஸக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத் II. அக்னி தேவன் = தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். நெருப்பிற்கான அதிகாரம் இவருடையது. வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இவருடைய துணைவியார் சுவாகா தேவி ஆவார். இவருடைய ஆயுதம் தீச்சுவாலையுடன் கூடிய வேல் ஆகும். இவரை வழிபட தேக வனப்பு மற்றும் பலம், மனஅமைதி, குடும்ப மேன்மை கிடைக்கும். ஸப்தார்சிஷம் ச பிப்ராணம் அக்ஷமாலாம் கமண்டலும் ஜ்வாலாமாலாகுலம் ரக்தம் ஸக்திஹஸ்தம் சகாஸநம் III. யமன் = தெற்கு திசையின் காவலர் ஆவார். இவர் எமதர்மன், தருமராஜா, தருமதேவன், காலதேவன் என அழைக்கப்படுகிறார். அவர் இறப்பின் கடவுள் ஆவார். சூரியதேவனின் மகனாகவும், சனிபகவானின் சகோதரராகவும் இவர் குறிப்பிடப்படுகிறார். யமனின் சகோதரி யமி அல்லது யமுனை என்ற நதியாகவும் கூறப்படுகிறார். இவர் தேவர்களில் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருடைய துணைவியார் குபேர ஜாயை ஆவாhர். இவர் எருமைகிடா வாகனத்தினைக் கொண்டவர். இவருடைய ஆயுதம் பாசக்கயிறு ஆகும். இவரை வழிபட நம்மைப் பற்றிய தீவினைகள் நீக்கி நல்வழி கிடைக்கும். க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயாநகம் காலபாஸதரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிணதிக்பதிம் IV. நிருதி = இவர் தென்மேற்கு திசையின் அதிபதி ஆவார். இவரின் துணைவியார் கட்கி ஆவார். இவருடைய வாகனம் பிரேதம். இவருடைய ஆயுதம் கட்கம் என்னும் வாள் ஆகும். இவரை வழிபட எதிரிகள் பயம் நீங்கி வீரம் உண்டாகும்.
ரக்தநேத்ரம் ஸவாரூடம் நீலோத்பல தளப்ரபம் க்ருபாணபாணி மாஸ்ரௌகம் பிபந்தம் ராக்ஷஸேஸ்வரம் V. வருண பகவான் = மேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் மழைக்கான கடவுள் ஆவார். ஆறு,குளம், ஏரி, கடல் நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றன ஐவ‌கை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வருணன் போற்றப்படுகிறார். இவருயைட துணைவியார் வாருணி ஆவார். இவருடைய வாகனம் மரகம் என்ற மீன் ஆகும். இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட தேவையான மழை கிடைத்து உணவு பஞ்சம் தீரும். நாகபாஸதரம் ஹ்ருஷ்டம் ரக்தௌகத்யுதி விக்ரஹம் ஸஸாங்க தவளம் த்யாயேத் வருணம் மகராஸநம் VI. வாயு பகவான் = வடமேற்கு திசையின் காவலர் ஆவார். இவர் உலக இயக்கத்திற்குக் காரணமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவரின் துணைவியார் வாயுஜாயை ஆவார். இவருடைய வாகனம் மான் ஆகும். இவர் அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டுள்ளார். இவரை வழிபட ஆயுள் விருத்தி கிடைக்கும். ஆபீதம் ஹரிதச்சாயம் விலோலத்வஜ தாரிணம் ப்ராணபூதம்ச பூதாநாம் ஹரிணஸ்தம் ஸமீரணம் VII. குபேரன் = வடக்கு திசையின் அதிபதியாவார். செல்வத்தின் அதிபதியாகவும் இவரைக் கூறுவோர் உண்டு. இவர் சிவனை நோக்கி தவம் இருந்து வடக்கு திசையின் அதிபதியானதாக புராணங்கள் கூறுகின்றன. இவரின் துணைவியார் யட்சி ஆவார். இவர் மதுஷனை வாகனமாக கொண்டுள்ளார். இவரின் ஆயுதம கதை ஆகும். இவரை வழிபட சகல செல்வங்களுடன் சுக வாழ்வு கிடைக்கும். குபேரம் மநுஜாஸீநம் ஸகர்வம் கர்வவிக்ரஹம் ஸ்வர்ணச்சாயம் கதாஹஸ்தம் உத்தராதிபதிம் ஸ்மரேத் VIII. ஈசானன் = வடகிழக்குத் திசையின் அதிபதியாவார். இவர் மங்களத்தின் வடிவம் ஆவார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஈசானமும் ஒன்று. இவரின் துணைவியார் ஈசானயஜாயை ஆவார். இவர் எருதினை வாகனமாகக் கொண்டவர். திரிசூலம் இவரின் ஆயுதமாகும். இவரை வழிபட அறிவும், ஞானமும் கிடைக்கும். ஈஸாநம் வ்ருஷபாரூடம் த்ரிஸூலம் வ்யாலதாரிணம் சரச்சந்த்ர ஸமாகாரம் த்ரிநேத்ரம் நீலகண்டகம். நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

0121. ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

0121. ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:

ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண் மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்ய புஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:

ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம:
ஓம் அனுக்ரஹபதாயை நம:

ஓம் புத்யை நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோக சோக விநாசிந்யை நம:
ஓம் தர்ம நிலயாவை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:

ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பக்மோத்பவாயை நம:
ஓம் பக்த முக்யை நம:
ஓம் பத்மனாப ப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்ம மாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:

ஓம் பத்மிந்யை நம:
ஓம் பத்மகந்திந்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸந்நாயை நம:
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதநாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப் புஜாயை நம:

ஓம் சந்த்ர ரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்து சீதலாயை நம:
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்ய ஜநந்யை நம:

ஓம் புஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம:
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வ நிலாயாயை நம:
ஓம் வராய ரோஹாயை நம:
ஓம் யச்சஸ் விந்யை நம:

ஓம் வாஸுந்தராயை நம:
ஓம் உதா ராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் த ந தாந்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம:
ஓம் வரலக்ஷம்யை நம:

ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ர தநயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்கள தேவதாயை நம:
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம:
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம:
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:

ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம:
ஓம் நவ துர்காயை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம:
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம:
ஓம் புவனேச்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்

குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்வை பட்டு எல்லா வளமும் பெறுவீர்களாக.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 1 நவம்பர், 2018

0120. தீபாவளி

0120. தீபாவளி

தீபத் திருநாள் / தீப ஒளித்திருநாள்.
தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற, ஓர் இந்துப் பண்டிகையாகும்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, துவிதியை ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய்

1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

0119. கங்கோத்பத்தி

0119. கங்கோத்பத்தி

கங்காஷ்டகம்

1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-

கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!

அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்

விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!

பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ, தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ

ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!

க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ

பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!

ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்

ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி

ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்

பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் II

யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது.
குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது.
காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை, புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்

பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!

பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்

கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் !!

முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I

பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I

சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ

காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி

காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது.
அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்

த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!

த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்

ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!

ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது.
சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய்.
உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்

விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !

ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே

தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!

ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்

த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !

ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே

பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!

கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன்.
உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம்.
அப்பொழுது ஹரியும்,

ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி

ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி !!

புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.

கங்காஷ்டகம் முற்றிற்று.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 27 அக்டோபர், 2018

0118. ஸ்ரீ ராம ஜெயம்

0118. ஸ்ரீ ராம ஜெயம்

ஆஞ்சநேயருக்குரிய தாரக மந்திரம், ‘ஸ்ரீ ராம ஜெயம்’.
"ராம' என்றாலும்"பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள்.

இந்த மந்திரத்தை உச்சரித்தால் அவர் மனம் மகிழ்ந்து பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருவார்.

ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர்.
வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர்.

ஆஞ்சநேயரை வணங்கி எழுத துவங்கலாம்.
இதனால் எடுத்த செயல்கள் வெற்றியடையும்

ஸ்ரீராம ஜெயத்தை முதன்முதலாக எழுத விரும்பும் பக்தர்கள், அனுமன் ஜெயந்தியன்றும், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அருகிலுள்ளக் கோவிலுக்கு வந்து மந்திரம் எழுதத் தொடங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.