தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்
தொழில் மற்றும் வியாபாரங்களில் வெற்றி பெற நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன், “வாழைப்பழம், பேரிச்சம்பழம், முந்திரி, தேன், கல்கண்டு” போன்றவற்றை ஒன்றாக கலந்து “பஞ்சாமிர்தம்” தயாரிக்க வேண்டும். பின்பு உங்கள் பூஜையறையில் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு பஞ்சமுக தீபம் ஏற்றி, வணங்கி பஞ்சாமிர்தத்தை லட்சுமிக்கு நிவேதனம் வைத்து, அதை பிரசாதமாக உண்ண வேண்டும். பிறகு அந்த பிரசாதத்தை உங்களிடம் பணிபுரியும் பணியாளர்கள் உண்ண கொடுக்க வேண்டும். இந்த பரிகாரம் உங்கள் தொழிலில் எப்போதும் நஷ்டம் ஏற்படாமல் காக்கும். தினமும் இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக