வெள்ளிப் பாத்திரங்களை பளிச்சென்று மின்ன
வீட்டில் உள்ள வெள்ளிப் பாத்திரங்களை மீண்டும் புதியது போல் மின்னச் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலான வீடுகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை அறையில் உள்ள வெள்ளிக் குத்துவிளக்கு மற்றும் வெள்ளி சிலைகளை சுத்தம் செய்வது வழக்கமாக இருக்கும். அப்படி அவற்றை சுத்தம் செய்யும் போது, அதனை பளிச்சென்று கொண்டு வர நன்கு சோப்பு பயன்படுத்தி தேய்ப்போம்.
இருப்பினும் அவற்றால் நம் உடலில் உள்ள சக்தி தான் குறையுமே தவிர, வெள்ளிப் பொருட்களானது பளிச்சென்று ஆகாது. ஆனால் வெள்ளிப் பொருட்களை ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பளிச்சென்று மின்னச் செய்யலாம். இங்கு வெள்ளிப் பொருட்களை புதிது போன்று பளிச்சென்று மின்ன செய்யும் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக