புதன், 25 செப்டம்பர், 2013

014. செவ்வாய் வழிபடும் முறை

014. செவ்வாய் வழிபடும் முறை

வழிபடும் முறை

ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுடையவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆவதில்லை.
செவ்வாய் குருவோடு சேர்ந்தால் குருமங்கள யோகம்.
செவ்வாய் சந்திரனோடு சேர்ந்தால் சந்திரமங்கள யோகம்.
ஸ்தல பெயர் : திருக்கோளூர் அம்சம் : செவ்வாய்
மூலவர் : வைத்தமாநிதி
உற்சவர் : நிக்சொபவிந்தன்
தாயார் : குமுதவல்லி ,கொளுர்வல்லி
மார்க்கம் : தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார் திருநகரி வரும் வழியில்
மூன்று கிலோமீட்டர் வந்து தெற்கே போகும் பாதையில் இரண்டு கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது .

செவ்வாய்க் கிழமை

அங்காரகன் (செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடைய)

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே
சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் லோஹிதாங்காய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை Email : vijay4.11.2011@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 21 செப்டம்பர், 2013

013. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = I

013. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = I

மூலவர் : வெங்கடாசலபதி
அம்மன் / தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : அரசமரம்
வருடம் : 2002 வருடம்
ஊர் : அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா

திருவிழா : சித்திரை,வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக
கொண்டாடப்படும்.
ஆனி சித்திரை = சக்கரத்தாழ்வார்
ஆடிப்பூரம் = ஆண்டாள்
ஆடி சுவாதி = கருடாழ்வார்
ஆவணி மாதம் அஷ்டமி திதி = கோகுலாஷ்டமி
நவராத்திரி - புரட்டாசி - 10 நாட்கள்
திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை
மார்கழி = வைகுண்ட ஏகாதசி
பங்குனி நவமி = ராமநவமி
தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, தை பொங்கல் ஆகிய விசேச நாட்களில்
பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு.
மார்கழி மூலம் = அனுமத் ஜெயந்தி
திருவாதிரை = ராமானுஜர்
வாரத்தின் சனி கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும்
அதிகமாக இருக்கும்.

தல சிறப்பு : இத்தல பெருமாள் வைதிக விமானத்தின் மீழ் கிழக்கு நோக்கி சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.
இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
கருவறைக்கு பின்புறத்தில் சுவாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான அரசமரம் இருக்கிறது.
வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார்.
இவருக்கு படைக்கப் படும் பிரசாதத்தை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய், நொடி எதுவும் வராது.
கோயில் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மருக்கு சன்னதி இருக்கிறது.
சனிக்கிழமைகளில் இவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப்படும்.
மனதில் தீய குணங்களுடன் இருப்பவர்கள் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் மன்னிப்பு பெறலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இவருக்கு பின்புறத்தில் எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார்.
இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் விசேஷமானது.
கோயில் பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு சன்னதி இருக்கிறது.
கோயில் பிரகாரத்தில் உள்ள தூணில் விஷ்ணு தசாவதாரம் இருக்கிறது.

விஷ்ணு தசாவதாரம்

001. மச்ச அவதாரம் – (மீன் - நீர் வாழ்வன)
002. கூர்ம அவதாரம் – (ஆமை - நீர் நில வாழ்வன)
003. வராக அவதாரம் – (பன்றி - நிலத்தில் வாழும் பாலூட்டி)
004. நரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து மனிதனாக மாறும் தன்மை)
004. நரசிம்ம அவதாரம் - (மனிதன் பாதி சிங்கம் பாதி)
005. வாமண அவதாரம் – (மனித தோற்றம்)
006. பரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)
007. இராம அவதாரம் – (குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)
008. பலராம அவதாரம் – (விவசாயம் செய்யும் மனிதன்)
009. கிருஷ்ண அவதாரம் – (கால்நடைகளை மேய்க்கும் மனிதன்)
010. கல்கி அவதாரம்

திறக்கும் நேரம் : காலை 06.00 மணி முதல் 11 மணி வரை,
மாலை 05.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
திருநெல்வேலி - 627007
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ்நாடு மாநிலம்
போன் : +91-

பொது தகவல் : கோலம் - நின்ற கோலம்.
லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம்.
தாமிரபரணி ஆற்றுக்கு தெற்கு நோக்கிய ஒரு ராஜகோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது.
01. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
02. பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.
சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர்.
கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.
03. ஆடி சுவாதி கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை,மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
ஆடி சுவாதியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது.

பிரார்த்தனை : திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால்,
திருமணம் நிச்சயமாகும்.

வியாழக்கிழமையில் கருடனுக்கு வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்தால் திருமண, புத்திர, நாகதோஷம் நீங்கும்.
தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் பிரிந்த தம்பதியினர் ஒன்று கூட, யோக நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும்.
எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட யோக நரசிம்மருக்கு அபிஷேகம் செய்து பானகம் படைத்து துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , குழந்தை பாக்கியம் வேண்டி ரோகிணி நட்சத்திரத்தில் வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் கண்ணனுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
அனுமர்கள் வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல்

நேர்த்திக்கடன் : ஊதுபத்தி, சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம்.
பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

தானம் : அரிசி தானம் – பாவங்களைப் போக்கும்.
அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
அன்னதானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
எண்ணை தானம் – நோய் தீர்க்கும்.
ரோக நாசனம் , வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
கோ தானம் ( வெள்ளி OR பித்தளை பசுமாடு ) – பித்ருசாப நிவர்த்தி,தோஷங்கள் விலக
கோதுமை தானம் – ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகிய வற்றை அகற்றும்.
தட்சணை தானம் : காணிக்கை அளித்தல்.
தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்
தண்ணீர் பந்தல் : பானகமும் மோரும் தருதல்.
தீ தானம் : ஒளி, விளக்கு தருதல்.
தீப தானம் – கண்பார்வை தீர்க்கமாகும்.
தேங்காய் தானம் – நினைத்த காரியம், நிறைவேறும். கவலை அகலும்.
தேன் தானம் – சுகம்தரும் இனியகுரல் , புத்திர பாக்கியம் உண் டாகும்.
நெய் தானம் – நோய் தீர்க்கும். ரோக நாசனம் , வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
பால் தானம் – சவுபாக்கியம் பால் தானம் – துக்கம் நீங்கும்.
மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்
மணி தானம் : மணியோசைக்கு மணி தருதல்.
மாங்கல்ய தானம் : தாயாருக்கு மாங்கல்யம் செய்து தருதல்.
வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி , ஆயுளை வருத்தி செய்யும்
வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.
தான்யதானம் - தான்யங்களை தருதல்.
வாகன தானம் - திருவிழா வாகனம் தருதல்.
புத்தக தானம் - புத்தகங்கள் தருதல்.

தல வரலாறு : ஆண்டும் தோறும் மார்கழி மாதம் முப்பது நாட்கள் அரசு அலுவலர் 'அ' குடியிருப்பில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஆண்டாள் திருப்பாவை பக்தியுடன் பாடுவார் ஒரு பக்தன்.
ஸ்ரீகிருஷ்ணர் அவரிடம் எனக்கு தனியாக ஒரு கோயில் எழுப்புமாறு கூறினார்.
அதன்பின் அங்குள்ள பக்தரிடம் பேசி, திருமலை திருப்பதியிலிருந்து வெங்கடாசலபதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

012. ரத சப்தமி திருவிழா

012. ரத சப்தமி திருவிழா

ரத சப்தமி மகிமை : -

ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவன் யுவனவன்.
இந்த மன்னனுக்கு சந்ததி இல்லை.
அதனால் வருத்தப்பட்டு மகரிஷிகள் சொல்படி
புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான்.
அவர்கள் நீரை மந்திரித்து ஒரு கலசத்தில் பத்திரப்படுத்தி
மன்னனின் மனைவி குடிக்க வேண்டும் என்றார்கள்.
அந்தக் கலச நீர் யாகவேதியின் நடுவே இருந்தது.
அனைவரும் உறங்கி விட்டனர்.
ஆனால் அந்த இரவில் மன்னனுக்கு தாகம் எடுத்தது.
யாகவேதியின் நடுவே வைத்திருப்பது மகரிஷிகளால்
மந்திரித்து வைக்கப்பட்ட நீர் என்று தெரியாமல் மன்னன்
அதையெடுத்துக் குடித்து விட்டான்.
மன்னன் வயிற்றில் கரு வளர்ந்தது.
அந்தக் குழந்தை தன் கட்டை விரலால் மன்னனின்
வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தது.
அதனால் மன்னன் மாண்டு விட்டான்.
அழுத குழந்தைக்குப் பாலூட்ட இந்திரன் தன் பவித்திர
விரலை குழந்தையின் வாயில் வைக்க அதிலிருந்து
பெருகிய அமிர்தத்தைப் பருகி குழந்தை வளர்ந்தது.
இந்தக் குழந்தை ‘மாந்ததாதா’ என்ற பெயரில் உலைக
ஆட்சி புரிந்தது என்பது ஒரு வரலாறு.
சூரியனின் பிறந்த நாளை ரதசப்தமியாகக்
கொண்டாடுகின்றனர்.
“சூரிய ஜெயந்தி’ என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர்.
சப்தம் என்றால் ஏழு.
இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த
ஏழாம் நாளை, “சப்தமி திதி’ என்கிறோம்.
தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி.

(A) யாரல்லாம் வழிபடலாம் : -

(i) பிதுர் தோஷம்
(ii) சூரிய தோஷம் : -
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய
இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும்.
இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று
அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம்
நிவர்த்தியாகிறது.
(iii) கிழமை : ஞாயிறு
(iv) தேதிகள் : 1, 10, 19, 28
(v) நட்சத்திரம் : கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
(vi) தமிழ் மாதம் : சித்திரை, ஆவணி
(vii) மேஷத்தில் உச்சம்,
(viii) சிம்மத்தில் ஆட்சி
(ix) சூரிய திசை - புத்தி - அந்தரம் சூரியனின் ஆதிக்கத்தில்
பிறந்தவர்கள்

(B) ரதசப்தமி விரத முறை : -

(i) அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி
அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு.
இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது
சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.
(ii) ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள்,
கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை
ஊற்ற வேண்டும்.
தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி
மற்றும் அட்சதையும்,
ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும்,
ஆரோக்கியத்தையும் தரும்.
அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை
நமஸ்கரிக்க வேண்டும்.
அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும்.

© ரதசப்தமி விரத வழிபாடு : -

(i) ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க
வேண்டும்.
(ii) இளைஞர்கள் ரதசப்தமி நாளில் சூரியனுக்குரிய ஆயிரம்
பெயர்களை (சகஸ்ரநாமம்) சொல்லி வழிபட வேண்டும்.
(iii) பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு.
(iv) ரதசப்தமி நாளில் துவங்கி, தினமும் சூரியோதய
நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான்.
(v) கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம்
போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.

(D) ரதசப்தமி விரத வழிபாடு கோயிலில் : -

(i) திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில்
(ii) ஸ்ரீரங்கம் கோவில்
(iii) கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை
சூரியனார் கோயிலில்
(iv) சென்னை அருகே கொளப்பாக்கம்
அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம்
சூரியனுக்குரிய ஸ்தலமாகும்.
(v) நவதிருப்பதி ஸ்தல பெயர் : ஸ்ரீவைகுண்டம்
அம்சம் : சூரியன்
மூலவர் :வைகுண்டநாதன்
உற்சவர் :கள்ளர்பிரான்
தாயார் : வைகுண்டனாயகி , சூரனந்த நாயகி
மார்க்கம் :திருநெல்வேலி திருசெந்தூர் சாலையில்
திருநெல்வேலியில் இருந்து 28 கிலோமீட்டர்
தொலைவில் உள்ளது
(vi) திருநெல்வேலி : நெல்லை டவுன் கரியமாணிக்க
பெருமாள் கோயிலில்
ரத சப்தமியையொட்டி பெருமாள் ஒரே நாளில் 7 விதமான
அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.
சூரிய பகவான் ரத சப்தமியன்று தன் கிரணங்களை (ஒளியை)
உத்திராயணத்தை(வடக்கு)நோக்கி செலுத்துகிறார்.
பெருமாளுக்கு திருமஞ்சனம்

(E) வழிபாடும் சூரிய துதி : -

சோம்பேறிதனம் விலக சூரிய துதி ’ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே ஸதா’ அதிகாலையில் குளித்து முடித்து விபூதி பூசி கிழக்கு முகமாக நின்ளு ஸ்ரீசூரிய பகவானை தியானித்து 9 முறை இம்மந்திரத்தை பாராயணம் செய்தால் வாழ்வில் சுறுசுறுப்பும், உற்சாகமும் பெருகும்.

சூரிய காயத்ரி மந்திரம்

‘ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய பிரசோதயாத்’
அல்லது
‘ஓம் பாஸ்கராய வித்மஹே மஹாத்யுதிகராய தீமஹி தந்நோ ஆதித்ய பிரசோதயாத்’
என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்அம் நமசிவாய சூரிய தேவாய நம’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லலாம்.
வளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம்.

(F) வழிபாடு பலன் : -

(i) இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(ii) இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
(iii) சூரியன், நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
(iv) சூரியன் வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர்.
(v) பெண்கள் ரதசப்தமி விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
(vi) கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை
மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள்.
(vii) ரதசப்தமி நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

011. சந்திரன் வழிபடும் முறை

011. சந்திரன் வழிபடும் முறை

வழிபடும் முறை

நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணமாவார்.
காலரா, நுரையீரல் நோய்கள் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க ஏழரை நாட்டுச் சனி ஜென்ம சனி, மகாசிவராத்திரி மார்கழி திருவாதிரை பங்குஉத்திரம், திருக்கார்த்திகை
ஸ்தல பெயர் : ஸ்ரீ வரகுணமங்கை ( நத்தம் )
அம்சம் : சந்திரன்
மூலவர் : விஜயாசானர் என்ற பரமபத நாதன்
உற்சவர் : எம்மிடர் கடிவான்
தாயார் : வரகுணமங்கை , வரகுணவல்லி
மார்க்கம் : ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
(i) விஷ்ணுவின் அம்சமான சந்திரனின் நற்பலன்களைப் பெற பெளர்ணமியன்று திருப்பதி சென்று தரிசனம் செய்து தங்கி வழிபடுவது நலம் பயக்கும்.
(ii) வெண்மை வாய்ந்த அலரி மற்றும் அல்லி மலர்களால் இவரை அர்ச்சித்து பச்சரிசி நிவேதித்து நலம் பெறலாம்.
(iii) அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். சந்திரன் ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே அமிர்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் அமிர்தேசாய வித்மஹே ராத்ரிஞ்சராய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் சுதாகராய வித்மஹே மஹாஓஷதீஸாய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத் ஓம் ஆத்ரேயாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத் ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே நிதீச்வராய தீமஹி தன்னோ ஹோமஹ் ப்ரசோதயாத் 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

010. சூரியன் வழிபடும் முறை

010. சூரியன் வழிபடும் முறை

வழிபடும் முறை

கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை
ஆகியநோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்ம சனி,
அஷ்டம சனி ஆகியன உள்ளோரும்,
சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால்
நன்மை பயக்கும்.
சூரியன் வழிபட்டால் புகழ் கூடும்.
மங்களம் உண்டாகும்.
உடல் நலம் பெறும்.
ஸ்தல பெயர் : ஸ்ரீவைகுண்டம்
அம்சம் : சூரியன்
மூலவர் :வைகுண்டநாதன் உற்சவர் : கள்ளர்பிரான்
தாயார் : வைகுண்டனாயகி , சூரனந்த நாயகி

(i) விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி
சாற்றி, மஞ்சள் கட்டி... புதுமணத் தம்பதிகள் வழிபட்டால்,
சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும்.
(ii) சிவப்பு மலர்களால் சூரியனாரை அர்ச்சித்து
கோதுமையை நிவேதித்து விரதம் மேற்கொள்வது நலம்.
(iii) 12 ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால்
செய்த உணவு அளிக்கலாம்.
தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம்.
மார்க்கம் :திருநெல்வேலி திருசெந்தூர் சாலையில் திருநெல்வேலியில்
இருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

ஆதித்யன் (சூரியன்)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் லீலாலாய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
ஓம் பிரபாகராய வித்மஹே
மஹா த்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.