புதன், 3 ஏப்ரல், 2019

தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.

லட்சுமி கடாட்சம் பெருக

லட்சுமி கடாட்சம் பெருக

உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி.

பாற்கடலில் பிறந்த திருமகளை அஷ்டலட்சுமியாக வழிபடுவார்கள்.

வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை வரவேற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களாக, நம்முன்னோர்கள் வலியுறுத்தும் பொருட்களை வீட்டில் வைத்தால், அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

01. கல்கண்டு

02. மஞ்சள்... குங்குமம்

03. கல் உப்பு

04. தேன்,

05. நாணயங்கள்

06. பால்,

07. தானியக் கதிர்

08. ஓடும் வெள்ளை குதிரை படம் அடிக்கடி பார்க்க

09. பச்சைபட்டு உடுத்திய லட்சுமி படத்தினை
நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..

செவ்வாயின் பாகன்

செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

குன்றி மணி

குன்றி மணி

வாங்கி வந்து சுத்தம் செய்து ஒரு பச்சை நிற துணியில் கட்டி பூஜை அறையில் 9நாள் வைத்து தினமும் தீபதுபம் காட்டி வரவும் எந்த மந்திர உச்சரிப்பும் தேவையில்லை 10ம் நாள் இவற்றை மூன்று பங்காக பிரித்து ஒன்றை பூஜை அறையிலும் மற்றொன்றை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும் இன்னொன்றை உங்கள் பாக்கெட் அல்லது பேக் பர்ஸில் வைக்க தன ஆகார்ஷனம் உண்டாகும்

குன்றி மணிகள் பலவகை உண்டு அனைத்தும் தன ஆகர்ஷனம் தரகூடியது
ஆபிஸ் கடை மற்றும் வீட்டின் வரவேரற்பறை ஆகிய இடங்களில் படத்தில் காட்டியது போல் ஒரு கண்ணாடி டம்பளர் அல்லது கண்ணாடி பவுலில் ஒரு ருபாய் 5 ருபாய் நாணயங்களை போட்டு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் நிற பூவை போட்டு வைத்து தினமும் பார்த்து வந்தால் பணவரவு மிகுதியாகும் ஆபிஸ் கடை வைத்துள்ளவர்கள் கல்லா பெட்டியின் மேல் வைத்துக்கொள்ளவும் தினமும் பூவையும் தண்ணீரையும் மாற்றவும்

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்

01. காலை எழுந்தவுடன் பசுவின் முகத்தில் விழிப்பது அல்லது பசு வடிவ பொம்மைகளை படுக்கையறையில் வைத்துக் கொண்டு அதன் முகத்தில் விழிக்கலாம்.

02. வெள்ளிக்கிழமை தோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது.

03. பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழ வகைகள் நைவேத்தியம் செய்து அதை சாப்பிடுவதும் நல்லது.

04. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது மட்டுமல்லாமல்,

சனி, 2 மார்ச், 2019

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம்

அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

சந்திராஷ்டம் வரும் நாறில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையை சாத்தி வழிப்பட்டுவிட்டு வாருங்கள்.

பிரச்சனைகள் படிப்படியாக மறைவதை காணலாம்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

கடன் தீர்க்கும் கணபதி மந்திரம்

“ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹூம் நம்; பட்ஸ்வாஹா”

என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

“ஓம் க்லௌம் க்ரோம்
கணேசாய ருணம் சிந்தி
வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”

என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும்.

சனிக்கிழமைகளில் சதுர்த்தி

மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.

அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.

திங்கள், 25 பிப்ரவரி, 2019

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும்.

இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது.

திருநெல்வேலிச் சீமையில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43 ஆவது நாளில் அவதரித்தார்

உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர்.

மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது.
ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார்.

யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.

கன்னியாகுமரி திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி

பதினாறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார்.

நாங்குநேரி வானமாமலையில் தெய்வநாயகனை நம்மாழ்வார் சரணாகதி செய்ததால் பெருமானின் சடாரியிலேயே நம்மாழ்வாரின் திருவுருவம் பொறித்துள்ளதைக் காணலாம். அதனால் இங்கு நம்மாழ்வாருக்கு தனிச் சந்நதி கிடையாது.

சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக அறியப்பெறுகிறார்.

வைணவர்கள் நம்மாழ்வாரே, திருமாலின் திருவடியாக இருப்பதாக நம்புகிறார்கள்.

அதனால் திருமால் திருவடி சடகோபம் என்று அழைக்கப்பெறுகிறது.

வானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.