ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

மருத்துவ புத்தரின் பூஜை

மருத்துவ புத்தரின் பூஜை

பெளத்தர்கள் பெளர்ணமியை முன்னிட்டு புத்த பூஜையில் ஈடுபட்டனர்.

பல அறிஞர்களின் வீ டுகளும் அலுவலக அறைகளும் புத்தரின் அழகிய தோற்றம் உடைய சிலைகளையோ அல்லது படங்களையோ கொண்டிருக்கின்றன.

Laughing Buddha சிரிக்கும் புத்தர்

கிழக்கு திசையில் வைத்தல்

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும். பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.

தென் கிழக்கு திசையில் வைத்தல்

சிரிக்கும் புத்தரை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார். சிரிக்கும் புத்தரை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.

வேலை மேஜையின் மீது வைத்தல்

சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும். கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேஜையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.
அதிர்ஷ்டத்தை கொண்டு வர இதனை வீட்டின் தலை வாசல் கதவை நோக்கி வைக்க வேண்டும்.

பைசையகுரு சூத்திரத்தில் மருத்துவ புத்தரின் மந்திரங்கள்

:நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்ய-சமுத்கதே ஸ்வாஹா

namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye bhaiṣajya-samudgate svāhā

ஓம் நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா

oṃ namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye mahābhaiṣajye bhaiṣajye rāja samudgate svāhā

ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா

ஓம் ஹுரு ஹுரு சண்டாளி மாதங்கி ஸ்வாஹா

தீய கருமங்களை நீக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிறது.

ஒரு கோப்பை தண்ணீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை தீமையகல ஓதும் பொழுது (அகலோதுதல்), அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரைப் பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர்

புத்த பூர்ணிமா

மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

கருத்துகள் இல்லை: