செவ்வாய், 3 ஜனவரி, 2017

096. வைகுண்ட ஏகாதசி

096. வைகுண்ட ஏகாதசி

ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள் :

1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும்
கிடைக்கும்.
2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்
3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)
4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து
பிள்ளைகள் பெற்றான்)
5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது
6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில்
இருந்து விடுதலை பெற்றான்)
7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின்
உபதேசப்படி, விரடம் இருந்த நாள்
8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது
9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்
10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்
11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன்
தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)
12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்
13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்
14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக்
கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)
15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன்
விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)
16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த்
தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)
17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்
18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்
19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம்
இருந்த நாள்
20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்
21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்
22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள்
அகலும்
23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்
24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்
25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும்

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி
எனப்படுகின்றது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக்
கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட
ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு
வாகனங்களில் உலா வருகிறது.
ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும்
உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில்
வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்", சொர்க்க வாசல்" என்றும்
அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர்
கூட்டம் கூடும்.
இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான
தசமியன்று பகலில் ஒரு_வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்
2 , ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து
விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும்.
3 , ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக)
இருக்கவேண்டும்.
குளிர்ந்த நீரை குடிக்கலாம் .
ஏழு_முறை துளசி இலையை சாப்பிடலாம் .
ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க
துளசியை சாப்பிடவேண்டும்.
பட்டினி கிடப்பதினால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது.
குளிர்ந்த_நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள்,
நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)
உண்ணலாம்.
4.இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு
சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை
ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.
கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது. .
5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது .
துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என
அழைக்கிறோம் .
துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக
நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில்_படாமல்
கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை_கூறி ஆல் இலையில்
உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.
(அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய்_துவையல், வறுத்த சுண்டைக்காய்
ஆகியவை முக்கியமானவை.)
துவாதசி அன்று காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும்.
இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.
6.துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில்_காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில்
ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.
விரதத்தை முடிப் தேன்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி
தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து
(பிரசாதமாக) உண்ணலாம்.
ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக
முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
7.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும்.
அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி,
பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும்
விரதமாக அமைந்து உள்ளது.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங் களையும் அடைவர்.
இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: