புதன், 8 மார்ச், 2017

0106. அனுபவ பரிகாரங்கள்

0106. அனுபவ பரிகாரங்கள்

*மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்....!!
*ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை
வழிபாடு செய்வது நல்லது.
*குடும்பத்தில் தாங்க முடியாத சிரமங்கள் ஏற்படும் போதும் உடனடியாக
அருகிலுள்ள ஆலயத்தில் மூலவரிற்கு தெடர்ந்து 48 நாடகள் தீபம் ஏற்றி வழிபட்டு
வர சிரமங்கள் அனைத்தும் படிப்படியாக குறையும்.
*கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழி எந்த தெய்வத்திற்க்கு
அபிசேகம் செய்தாலும் அரிசி மாப்பொடியால் அபிஷேகம் செய்தால் விரைவில்
கடன்கள் அடைப்படும்.
*வெள்ளிக்கிழமை சுக்ர ஓரைலயில் நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்
கற்கண்டு போட்டு நெய்தீபம் எற்றி வழிபட கணவன் மனைவி கருத்து வேறுபாடு
நீங்கி ஒற்றுமை ஓங்கும்.
*தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திரங்களை சொல்லி
வந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
*குலதெயவ குறை உள்ளவர்கள் மண் அகலில் வாழைத்தண்டு நூல் திரியினால்
நல்லெண்ணை தீபம் வீட்டில் ஏற்றினால் குலதெய்வ குற்றமும் குலதெய்வ
சாபமும் நீங்கும்.
*சமையல் அறையில் அரிசியை சிறிது எடுத்து கொண்டு ஒரு பாத்திரத்தில்
போட்டு அதில் ஓரிரு நாணயங்களை முதலில் குடும்ப தலைவர் கையால் இட்டு
அரிசியில் புதையுமாறு செய்யவும்.
அவ்வப்போது மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஓரிரு நாணயங்களை இட்டு
புதையுமாறு வைக்கலாம்.
இது வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க
பண்டைய காலத்தில் செய்து வந்த ஒரு முறை.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.
நாணயங்களை எடுத்து கொண்டு அரிசியை காகைக்கு இட்டு விடலாம்.
*வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர நிதி நிலைமை
கட்டுக்குள் அடங்கி இருக்கும்.
*புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7,
சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2,
இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு
புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
*தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை
மாலை சாற்றி வழிபடவும்
*கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற
கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல
பரிகாரம் ஆகும்.
ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள்,
பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
*சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட
தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.
*21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
*சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி 
தூரத்திற்கு செய்வினை அணுகாது.
*பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு
ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
*சிறிது கல் உப்பை ஒரு கின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால்
கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் . 
*வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து
குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும்.
குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு
குளிக்கலாம்.
*வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை
அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள்
பொடியைத் தடவியும் வைக்கலாம்.
இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும்.
பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை
சுற்றி தெருவில் வீசிவிடவும்.
*வெல்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம்…
*'ஓம்' ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம்,
விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீடு முழுவதும் ஒலிக்க விடவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: