திங்கள், 13 செப்டம்பர், 2021
சனி, 11 செப்டம்பர், 2021
வியாழன், 9 செப்டம்பர், 2021
புதன், 8 செப்டம்பர், 2021
ஞாயிறு, 5 செப்டம்பர், 2021
Varahi worship
Varahi worship
சப்தகன்னியரில் ஒருவரான வாராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக
கருதப்படுகிறார்.
ஞாயிறன்று வாராகியை விரதம் இருந்து வழிபட்டால் நோய்கள் தீரும்.
திங்கட் கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் மனநல பாதிப்புகள் நீங்கும்.
வீடு, நிலம் தொடர்பான பிரச்சினைகள் தீர செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து
வாராகியை வழிபடலாம்.
கடன் தொல்லைகள் தீர புதன்கிழமை விரதம் இருந்து வழிபடலாம்.
குழந்தைப்பேறு கிட்ட வியாழக்கிழமை விரதம் இருந்துவழிபடலாம்.
கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபடலாம்.
வெள்ளிக் கிழமை விரதம் இருந்து வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.
சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட இழந்த செல்வம் திரும்ப வரும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
Banana flower worship
Banana flower worship
வாழை மலர் வழிபாடு
திருமணம் தாமதப்படுவதற்கான கிரக நிலைகள்
7-க்கு உடையவன், 12-ல் விரயமாகும், 7-ஆம் பாவத்தில் சனி, சூரியன்,
ராகு, கேது ஆகியோர் தனியாக அமர்ந்திருந்தாலும் திருமணம் தாமதப்படும்.
வாழைமலர் பூஜை:
வாழை இலை விரித்துப்போட வேண்டும்.
அதில் பச்சரிசி பரப்பி வைத்தது
கலசத்தை தீர்த்தத்தால் நிரப்பி, மஞ்சள் பொடி, ஏலக்காய், பச்சை கற்பூரம் தூள் இட்டு,
கலசத்தின் மேல் தேங்காய் வைப்போம் அதற்குப் பதில் வாழை பூ வைக்க வேண்டும்
கலசத்துக்கு எதிரில் பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து வைக்கவேண்டும்.
நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய் கலவையில்
அவற்றை நனைத்து தீபம் ஏற்றத் தயாராக வைக்கவேண்டும்.
அல்லது 5 முகக் குத்துவிளக்கை இரண்டு பக்கங்களிலும் ஏற்றிவைக்கலாம்.
பிறகு, கற்பூர ஆரத்தி காட்டி மஞ்சள்- குங்குமம் பிரசாதமாக எடுத்துக்கொள்ள
வேண்டும்.
அடுத்ததாக, கலசநீரை வீடு முழுவதும் தெளிக்கலாம்.
பின்னர், ஒரு மணைப் பலகையில் பெண்ணை அமர வைத்து மங்கல வாசகங்கள்
சொல்லி அபிஷேகம் செய்துவிட்டு, மடி ஆடை உடுத்தச் செய்யவேண்டும்.
தொடர்ந்து, மீண்டும் பூஜையறைக்குச் சென்று வணங்கி குங்குமப் பிரசாதம்
எடுத்துக்கொண்டு, சிறிது பூவை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு, தெய்வங்களை
வணங்கிவிட்டு, வீட்டுப் பெரியவர்களிடமும் வாழ்த்து பெற வேண்டும்.
48 நாட்கள் இந்த வழிபாட்டால் கிடைக்கும் இறையருளாலும் பெரியோர் ஆசியாலும்
விரைவில் கல்யாணம் கூடிவரும்.
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி,
R.Megala Gopal.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)