ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

0104. அர்ச்சனை,பூமாலை சாத்துக

0104. அர்ச்சனை,பூமாலை சாத்துக

மேஷம் அரளிப்பூவை வாங்கி மாலையாகக் கட்டி அருகிலிருக்கும்
முருகன் கோயிலிலுள்ள வேலுக்கு சார்த்தி அர்ச்சனை செய்து
வணங்கவும். 
ரிஷபம் மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு
அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
விருச்சிகம் செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் அம்மன்
கோயிலுக்கு செவ்வாய்க் கிழமைதோறும் அர்ப்பணித்து அர்ச்சனை
செய்து  வணங்கவும். 
விருச்சிகம் அருகிலிருக்கும் ஆலயத்தில் இருக்கும் வள்ளி தேவசேனா
சமேதராக உள்ள முருகபெருமானை அரளி மாலை சாத்தி அர்ச்சனை
செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம்
உண்டாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 6 பிப்ரவரி, 2017

0103. பிரதட்சிணம்,தீபம் வழிபாடு

0103. பிரதட்சிணம்,தீபம் வழிபாடு

மேஷம் சனிக்கிழமை நவகிரகத்தைச் சுற்றி எள் விளக்கேற்றுங்கள்.
9 வாரம்.
துலாம் சனிக்கிழமை நவகிரகம் சுற்றி நல்லெண்ணெய்
விளக்கேற்றுங்கள். 8 வாரம்.
மீனம் வியாழக்கிழமை நவகிரகம் சுற்றி நெய்தீபம் ஏற்றவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0102. சிதறு தேங்காய்

0102. சிதறு தேங்காய்

கடகம் முக்கியமான பணிகளுக்குச் செல்லும் முன் விநாயகருக்கு சிதறு
தேங்காய் உடைத்துவிட்டு செயலில் இறங்குங்கள்.
சிம்மம் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு பணியைத் துவக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0101. தசை மற்றும் புக்தி பரிகாரங்கள்

0101. தசை மற்றும் புக்தி பரிகாரங்கள்

சந்திரன் பரிகாரம்

திங்கட்கிழமைகளில் விரதம் இருந்தல்
பௌர்ணமி நாட்களில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைத்தல்
செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்தல்
திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வழிபடுதல்
சந்திரனின் அதிதேவதையான பார்வதியை திங்களன்று வணங்குதல்,
2 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிதல்
வெள்ளை நிற ஆடைகளை உபயோகத்தால் போன்றவை சந்திரனுக்கு செய்யும் பரிகாரங்களாகும்.
முத்தை உடலில் படும்படி அணிவது நல்லது.

ராகுவிற்குரிய பரிகாரங்கள்;

ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை  பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது,

குருவுக்குரிய பரிகாரங்கள்

வியாழக் கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சினா மூர்த்திக்கு கொண்டை கடலையை ஊற வைத்து மாலையாக கோர்த்து,
மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து நெய் திபமேற்றி வழிபடுவது நல்லது.
வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம்.

சனிக்குரிய பரிகாரங்கள்

சனிக்கிழமைகளில் விரதமிருந்து கறுப்பு துணி, கறுப்பு எள்ளை முட்டை கட்டி அகல் விளக்கில் வைத்து எள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுவது,
சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது,
எள் கலந்த அன்னம் படைத்து காக்கைக்கு வைப்பது,
ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம்.
சனிப் பரீதி ஆஞ்சநேயரையும் துளசிமாலை, வடைமாலை வெண்ணை முதலியவற்றை சாற்றி வழிபடுவது உத்தமம்.
நீலக்கல்லை அணிவது உத்தமம்.

புதன் பகவானுக்கு பரிகாரங்கள்

விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது,
சதர்சன ஹோமம் செய்வது,
சதர்சன எந்திரம் வைத்து வழிபடுவது
பச்சை பயிறு, பச்சை நிற ஆடை,நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை படிக்கும் பிள்ளைகளுக்கு தான அளிப்பது நல்லது.
மரகதக்கல் மோதிரத்தையும் அணியலாம்.

கேதுவுக்குரிய பரிகாரங்கள்

தினமும் விநாயகரை வழிபடுதல்,
கேதுவுக்குரிய மந்திரங்களை ஜபித்தல்,
சதூர்த்தி விரதம் இருத்தல்,
வைடூரிய கல்லை மோதிரத்தில் பதித்து உடலில் படும் படி அணிதல் போன்றவை கேதுவால் உண்டாக கூடிய தீய பலன்களை குறைக்க உதவும்.

சுக்கிர திசைக்குரிய பரிகாரங்கள்

வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது,
வைரக்கல் மோதிரம் அணிவது,
மொச்சை பயிறு, தாலி கயிறு மஞ்சள் குங்குமம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது உத்தமம்.
வைரக்கல்லை அணியலாம். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.