புதன், 20 ஜூலை, 2016

094. சைவம் ஆலய தரிசணம் பகுதி = II

094. சைவம் ஆலய தரிசணம் பகுதி = II

கன்னி தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பரை தரிசித்து வாருங்கள்.
கன்னி தஞ்சாவூர்-திருக்கருகாவூர் வழியில் தென்குடித்திட்டை உள்ளது.
தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலத்தை
தரிசித்து வாருங்கள்.
கன்னி காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரதோஷ நாளில் வணங்குங்கள்.
கன்னி காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்கலாம்.
கன்னி திருத்தணி முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள்.
துலாம் திருச்சி உச்சிபிள்ளையாரை தரிசித்து வாருங்கள்.
துலாம் செஞ்சிக்கு அருகேயுள்ள மேல்மலையனூர் அங்காள
பரமேஸ்வரியை தரிசித்து வாருங்கள்.
துலாம் திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்குச்
சென்று தரிசிக்கலாம்.
துலாம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர்
சிவாலயத்திற்குள் அருளும் அன்னதான தட்சிணாமூர்த்தியை தரிசித்து
வாருங்கள்.
துலாம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் சென்று மதுரகாளியம்மனை
தரிசித்து குங்குமார்ச்சனை
செய்துகொள்வதும், அம்மனின் அருட்பிரசாதமான குங்குமத்தினை தினமும்
நெற்றியில் இட்டுக்கொள்வதும் நல்லது.
துலாம் வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூர் காசி பைரவரை அஷ்டமி திதி
நாள் அல்லது சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.
துலாம் தம்பதியராக திருக்கடையூர் சென்று அபிராமி, அமிர்தகடேஸ்வரரை
தரிசித்து வரவும்.
விருச்சிகம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
விருச்சிகம் திருச்சி, பெரம்பலூருக்கு அருகேயுள்ள சிறுவாச்சூர் அம்மனை
தரிசித்துவிட்டு வாருங்கள்.
விருச்சிகம் பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ.
தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர்.
இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே
சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை
தரிசித்து வாருங்கள்.
விருச்சிகம் அறுபடைவீடுகளுக்கும் சென்று வருவது நன்மை தரும்.
விருச்சிகம் திருத்தணி தணிகைவேலனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
விருச்சிகம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
விருச்சிகம் பழனி முருகனை வணங்கி வர குடும்ப பிரச்னை தீரும்.
காரிய வெற்றி உண்டாகும்.
தொழில் வியாபாரம் சிறக்கும். 
விருச்சிகம் காரைக்காலுக்கு அருகிலுள்ள திருநள்ளாறில் அருள்பாலிக்கும்
ஸ்ரீதர்ப்பாரேண்யஸ்வரரையும், ஸ்ரீசனிபகவானையும் ஏதேனும் ஒரு
சனிக்கிழமை அல்லது வியாழக் கிழமையில் வணங்குங்கள்.
தனுசு சென்னை-திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு முன்
தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது.
சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகோடு அருள் ததும்பும்
திருமுகத்தோடு வீற்றிருக்கிறார்.
இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.  
தனுசு பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசிப்பதால் நலம்
பெறுவீர்கள்.
தனுசு திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருவாலங்காடு தலத்தில் அருளும்
நடராஜரை திருவாதிரை நட்சத்திர நாளில் நெய் தீபமேற்றி
வணங்குங்கள்.
மகரம் குடும்பத்தினருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று
அம்பிகையை தரிசிப்பதால் சிரமங்கள் விலகி நன்மை காண்பீர்கள்.
மகரம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
மகரம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர்
திருக்கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி திருவடியின் கீழ் ஆமையுடன்
திருக்காட்சியளிக்கிறார்.
இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.
மகரம் வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் தலத்தில் அருளும் விநாயகரை
சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
மகரம் சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மனை தரிசித்து
வருவது நன்மை பயக்கும்.
மகரம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரரையும் அங்குள்ள வாராஹியையும் தரிசித்து
வாருங்கள்.
கும்பம் திருநள்ளாறு சென்று வரவும்.
கும்பம் குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம்,
குருவித்துறை.
மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு செல்ல
பேருந்துகள் உள்ளன.
இத்தலத்திற்கு சென்று தரிசித்து வாருங்கள்.
கும்பம் தஞ்சை பெரிய கோயில் வாராஹிக்கு அபிஷேக, ஆராதனைகள்
செய்ய எடுத்த காரியம் தடையின்றி நிறைவேறும்.
கும்பம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரில் அருள்பாலிக்கும்
பிரம்மசிரகண்டீஸ்வரரை எள் தீபமேற்றி வணங்குங்கள்.
கும்பம் அபிதகுசலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வர ஸ்வாமிக்கு
அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம்.
மீனம் சிதம்பரம் நடராஜரை தரிசித்து வாருங்கள்.
மீனம் திருத்தணி முருகனை சஷ்டி திதி நாளில் சென்று வணங்குங்கள்.
மீனம் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை வழிபடலாம்.
மீனம் சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில்.
மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி
அருள்கிறார்.
இயன்ற போதெல்லாம் சென்று வாருங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.